பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
233

அளவுகள் வரையறுக்கப்பட்டுள்ளன

dragft stop on fire stop; (க.க..) இழுவை நிறுத்தம் அல்லது நெருப்புறுத்தம் : கட்டிடத்தின் குறுக்கே எரிதழல் பாதையினைத் தடுப்பதற்காக விமானப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள்

drag : (வானூ.) இழுவை விசை : இயங்கும் ஒரு பொருளின் மீது அதன் இயக்கத் திசைக்கு இணையாக ஒரு திரவத்தின் வழிச் செயற்படும் ஒரு பின்னோக்கிய விசை. இது அந்தப் பொருளின்மீது செயற்படும் மொத்தத் திரவ விசையின் ஒரு கூறாக இருக்கும்

drag link : (தானி..) இழுவை இணைப்பு : இடது இயக்கக் கை பிடிக்கரத்தினை இயக்குக் கருவிக்கரத்துடன் இணைக்கும் ஒரு கோல். இந்தக் கரங்களின் குண்டு முனைகளை இயக்குவதற்காக இரு முனைகளிலும் இரு கிண்ணங்களும் ஒரு விற்சுருளும் இருக்கும்

dragon's blood : (வண்..) குங்கிலியம் : சயாமில் வளரும் ஒருபனை வகையிலிருந்து பெறப்படும் ஒரு பிசின் பொருள். மணமற்றது; சுவையற்றது; நீரில் கரையாதது; ஆல்ககாலிலும் ஈதரிலும் கரையக் கூடியது. சிவப்புத் திரவ வடிவில் உள்ளது. வண்ணச் சாயங்கள் தயாரிப்பதிலும், ஒளிச்செதுக்கு முறையிலும் பயன்படுகிறது

drag rope : (வானூ.) இழுவை வடம் : ஒரு பலூனின் மேற்பகுதியிலுள்ள நீண்ட் வடம். இது ஒரு தடையாகவும், இறங்கும் போது மாறுகிற பாரமாகவும் பயன்படுகிறது

drain : வடிகால் : சாக்கடை நீர் அல்லது மற்றக் கழிவுத் திரவங்கள் வெளியேறுவதற்கான ஒரு குழாய்

drainage : வடிகால் அமைப்பு : சாக்கடையை அப்புறப்படுத்துவதற்கு அமைக்கப்படும் வடிகால்களின் அமைப்பு

drain cock : (கம்.) வடிகால் குழாய் முனை: சாக்கடை வடிவுதற்கு அனுமதிப்பதற்காக குழாய்த் தொடர்பின் கீழ் முனையில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய ஒரதர்

drain tile: வடிதாரை ஓடு : ஈரப் பகுதிகளிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காகப் பயன்படும் வடி தாரை ஒடு

dram : திராம் : ஒர் அவுன்சின் 1/16 பகுதி

draw : (1) வரைதீட்டு: வரிகளினால் வரை தீட்டுதல் (2) நெகிழ்விப்பு : எஃகினை மிக அதிகமான முடுக்கத்திலிருந்து தேவையான அளவுக்கு நெகிழ்வித்தல் (3) இழுத்தல்: கம்பியினை இழுத்து மெல்லியதாக்குதல்

draw bar : இழுவைச் சலாகை : உந்து வண்டியில் இழுத்துச் செல்லப் பயன்படும் ஒரு சலாகை. இதன் இரு முனைகளிலும் கண் இருக்கும். இதே நோக்கத்திற்குப் பயன்படும் பிற சாதனங்களையும் குறிக்கும்

draw bolt : இழுவை மரையாணி : கதவுகளை பிணைப்பதற்குப் பயன்படும் மரையாணி

draw chisel : (எந்.) இழுவை சிற்றுளி : ஒரு கூர்மையான சிற்றுளி. துவாரமிடுகையில் மையத்தை மாற்றியமைக்கப் பயன்படுகிறது

draw chuck : இழுவை ஏந்தமைவு : சிறிய துல்லியமான வேலைப்பாடுகளுக்குப் பயன்படுகிறது. இது ஒரு தேய்ந்து செல்கிற தாங்கியில், நீளவாக்கில் இயங்குகிறது