பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

248

ருந்து பணி முற்றிய ஒருபொருளை வெளியில் எடுப்பதற்குப் பயன்படும் ஒரு சாதனம்

elastic : (பொறி.) மீட்சிம நிலை : ஒரு பொருளின் மீது விசையினைப் பயன்படுத்தும்போது அப்பொருள் உருத்திரிபடைந்து, அந்த விசையினை அகற்றி அப்பொருள் தனது மூல வடிவத்திற்கு மீண்டும் வருவதற்கு அனுமதிக்கும் நிலை

elastic axis : (வானூ.) மீட்சிம அச்சு : ஒரு கட்டமைப்பில், திருகு விலக்கம் ஏற்படாமல் விசையினைச் செலுத்துவதற்குரிய அனைத்துப் புள்ளிகளின் நிலையிடம்

elastic deformation : (குழை.) மீட்சிம உருத்திரிபு : ஒரு பொருளின் மீது செலுத்திய தகைவினை விடுவித்த பிறகு அந்தப் பொருள் தனது மூலப் ப்ரிமாணங்களுக்குத் திரும்பும்போது வடிவம் மாறுபட்டிருத்தல்

elasticity : (பொறி.) மீட்சிமத் திறன் : ஒரு சலாகையில் அல்லது கட்டமைவில் விறைப்பாற்றல் விசையினைச் செலுத்தி, அதில் நிரந்தரக் கோட்டம் ஏற்படுத்தாமல் அதனை நீட்சியுடையதாக்கும் திறன்

elastic limit : (பொறி.) மீட்சிம வரம்பு : ஒரு பொருளை அதற்கு நிரந்தர உருத்திரிபு ஏற்படாமல் எவ்வளவு நீளத்திற்கு நீட்ட முடியுமோ அந்த வரம்பு

elastic strength : (பொறி.) மீட்சிம வலிமை : மீட்சிம வரம்புக்குள் ஒரு சலாகையின் அல்லது கட்டமைவின் மீது மிக அதிக அளவு செலுத்தப்படும் தகைவின் அளவு

elaterite : எலாட்டரைட் : எளிதில் தீப்பற்றக்கூடிய நிலக்கீல் என்னும் கனிமப்பொருள்களுள் ஒன்று. இதில் கந்தகம் கணிசமான அளவு அடங்கியிருக்கிறது. இது அமெரிக்காவில் கொலொரோடோ, ஊட்டா மாநிலங்களில் கிடைக்கிறது. இது கூரையிடுவதற்குப் பயன்படுகிறது

elbow :(கம்.) இணைப்பான் : இரு குழாய்களை ஒரு கோணத்தில் இணைப்பதற்குரிய ஒரு பொருத்தி

electrical capacity altimeter : (வானூ.) மின்திறன் உயரமானி : பூமியின் மேற்பரப்பிலிருந்து உயரத்தை மதிப்பிடும் கருவி. இதில் மின்திறன் மாற்றத்தின் மூலம் உயர்த்தின் அளவு குறித்துக் காட்டப்படுகிறது

electrical conductivity : மின் கடத்து திறன் : பல்வேறு பொருள்களில் மின்விசையைக் கடத்துவதற்கு உரிய திறம்பாடு. தூய செம்பின் கடத்து திறனை ஒரு திட்ட அளவாகக் கொண்டு இந்தத் திறன் அளவிடப்படுகிறது

electrical engineer : மின் பொறியாளர் : மின்விசை உற்பத்தி, பயன்பாடு பற்றிய கோட்பாடுகளிலும், நடைமுறைகளிலும் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்ற பொறியாளர்.

electric brazing : மின் பற்றாசு : மின்னோட்டத்தின் மூலம் வெப்பம் உண்டாக்கும் ஒரு வகைப்பற்றாசு முறை

electric drill : மின் துரப்பணம் : மின் விசையால் இயங்கும் துரப்பணக் கருவி

electrical height : (மின்.) மின்னியல் உயரம் : செயற்படும் அலை நீளத்தின் பின்னமாகக் குறிப் பிடப்படும் வானலை வாங்கியின் உயரம்