253
elementary particle : (இயர்.) மூலத் துகள் : தானே ஓர் அணுவாக இல்லாமல், அணுக்களைப் பிரிப்பதால் உண்டாகும் ஒரு துகளின் பொதுப் பெயர். எடுத்துக்காட்டு: புரோட்டான்: எலெக்ட்ரான்; நியூட்ரான். இவை அனைத்தும் ஒரு புரோட்டானின் எடையைவிட இரு மடங்கு குறைவாக இருக்கும்; சில இன்னும் இலேசானவை
elements of a storage battery : (மின்.) சேமக்கலத் தனிமங்கள் : ஒரு சேமக்கலத்தின் எதிர்மின் மற்றும் நேர்மின் உலோகத் தகடுகள். இவற்றில் மின்னோட்டத்தின் போது வேதியியல் மாற்றங்கள் ஏற்படும்
elephantiasis : (நோய்.) யானைக் கால் நோய் : கால்கள் மிகப்பெரிய அளவில் வீங்கிக்கொள்ளும் ஒரு வகை நோய். "ஃபிலியாரிசிஸ்' என்னும் நுண்ணிய புழுக்கள் நிண நீர் நாளங்களை அடைத்துக் கொள்வதால் இந்நோய் உண்டாகிறது
elevation : ஏறுசரிவு : எந்திரவியல் வரைபடங்களில் செங்குத்துச்சாய் தளத்தின் மீதான வடிவியல் எறிவுப் படிவம்
elevator : (வானூ.) உயர்த்தி : விமானத்தின் பின்புற ஏற்ற இறக்கத் தட்டு
elevator angle : (வானூ.) ஏறுகோணம் : விமானம் நடு நிலையிலிருந்து உயர்ந்து ஏறுமுகமாகச் செல்லும் கோணம். உயர்த்தியின் இழுவை முனை நடுநிலைக்கு கீழே இருப்பின் இந்தக் கோணம் நேர் எண் ஆகும்
elevator rope : (பொறி.) உயர்த்தி வடம் : சணல் நார் சுற்றப் பட்ட கம்பி வடம், இதனைச் சுற்றி, ஒவ்வொன்றும் 19 கம்பிகள் கொண்ட 6 சரங்கள் அமைந்திருக்கும்
eliminating : அகற்றீடு : விட்டொழித்தல்; விலக்கீடு; முக்கியமில்லாதது அல்லது பயனற்றது என நீக்கிவிடுதல்
eliminating : பிரித்தகற்றி : மின்னாற்றல் பயன்படுத்தும் கம்பியில்லாத தந்திக்குரிய கருவி
elixir of life : (வேதி.) கற்பம் : வாழ்நாளை நீடிக்கவல்ல மருந்து
Elizabethan : (க.க.) எலிசபெத் காலத்திய : இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத் ஆட்சிக் காலத்துக்குரிய
elk hide : மரைமான் தோல் : மரைமான் எனப்படும் காட்டுமான் இனப் பெருவிலங்கின் தோல். இது கனமானது; இது செருப்பு, காலணிகள் தயாரிக்க ஏற்றது
ell : (க.க.) 'எல்' அலகு : ஏறத்தாழ 114செ.மீ.குச் சரியான நீட்டலளவைக் கூறு
ellipse : (வடி.) நீள் வட்டம் : ஒரு தள மட்ட வளைவு. இந்த வளைவின் புள்ளி எதிலுமிருந்து இரு நிலைத்த புள்ளிகளுக்குள்ள தொலைவுகளின் கூட்டுத்தொகை ஒரு நிலை எண்ணாக இருக்கும்
பரப்பளவு = நீளவிட்டம் x குறுகியவிட்டம் x 0.7854
ellipsoid : (வடி.) ஓரைவட்ட உரு : குறுக்கு வெட்டுகள் ஓர் ஊடச்சு நெடுக நீள் வட்டமாகவும், வட்டமாகவும் அமைகின்ற உரு