பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

270

ஊட்டுப் பொருளைச் செலுத்துவதைக் கட்டுப்படுத்தும் திருகு

feed water heater : ஊட்டுநீர் அடுப்பு : ஒரு நீராவிக் கொதிகலனுக்குள் செலுத்தப்படும் நீரினைச் சூடாக்குவதற்கான ஒரு கொதிகலன்

feeler: உணர்விக்கடிகை : வேலைப்பாடு செய்யவேண்டிய ஒரு பொருளின் வடிவளவைக் கண்டறிவதற்கான ஒரு கருவி. தொடு உணர்வின் தன்மையைப் பொறுத்து இந்தச் சோதனையின் துல்லியம் அமையும்

feeler : (உலோ.) உணரிழை : அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் துல்லியமாக அமைக்கப்பட்ட நுண்ணிய உலோக இழை

feet : (அச்சு.) ஆதாரப் பகுதி : அச்சு எழுத்தினைத் தாங்குவதற்காக அதன் உடற்பகுதியின் அடியிலுள்ள இருபகுதிகள்

feldspar : (வேதி.) களிமம் : பொட்டாசியம், சோடியம், கால்சியம் ஆகியவற்றுடன் அலுமினியம் சிலிக்கேட்டுகள் கொண்ட பாறையின் பெரும்பான்மைக்கூறு

felloe or felly : புறவட்டம் : ஆரைகளால் இணைக்கப்பட்ட சக்கரத்தின் புறச்சுற்று வட்டப்பகுதி

felt papers : (க.க) ஒட்டுக் காகிதங்கள் : ஈரம், வெப்பம், குளிர் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக முகடுகளிலும், பக்கச்சுவர்களிலும் ஒட்டப்படும் கவசத் தாள்கள்

felt side of paper : காகித ஒட்டுப் பக்கம் : காகிதத்தின் ஒரு பக்கத்தில் கம்பியின் அல்லது திரையின் கரைபடாமலிருப்பதற்காக அக்காகிதத்தில் செய்யப்படும் மெருகு வேலை

female : புழை : கருவியின் புற| முனைப்பான பகுதிக்கு ஏற்பிசைவாக உட்குழிவாக அமைந்துள்ள புழை

female screw : புரியாணி மரை : திருகாணி செல்வதற்கிசைவான புழையுள்ள மரை

famale thread : உட்புழைத் திருகிழை : ஒரு துவாரத்தினுள் அல்லது உட்புழையுள்ள பரப்பில் வெட்டப்படும் திருகிழை

fence : (மர.வே.) எந்திரக் காப்பு : வாள்கொண்டு அறுக்கும் வட்ட வடிவ எந்திரத்தில் தற்காப்புக்காக அமைக்கப்படும் உலோகச் சலாகை அல்லது பட்டை

fender : தடுப்புக்காப்பு : (1) திறந்த தீமூட்டத்திலிருந்து தரையினைப் பாதுகாப்பதற்காக அலங்காரமாக அமைந்த உலோகச் சலாகை (2) உந்து வண்டிகளில் சக்கரங்கள் நீரை அல்லது சேற்றை இறைக்காமல் தடுப்பதற்கான காப்பு (3) அச்சு எந்திரத்தில், ஊட்டும் தாள்கள் நழுவி விழுந்து விடாமல் சமணத் தகட்டுடன் இணைக்கப்பட்டுள்ள தடுப்பு அட்டை

fenestral : (க.க.) காப்புச் சட்டகம் : பண்டைக் காலத்தில் பலகணிக் கண்ணாடிகள் இல்லாதிருந்தபோது, காற்றிலிருந்தும் மழையிலிருந்தும் பாதுகாப்பதற்காக பசைக் காகிதம் அல்லது மெல்லிய துணி ஒட்டப்பட்ட ஒரு சட்டகம்

fenestration : (க.க.)சாளர வரிசை : ஒரு கட்டிடத்தின் சாளரங்களின் ஒழுங்கு வரிசை

feretory : (க.க.) பள்ளிப்படை : திருத்தொண்டர்களின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில்