பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
319

grease lubricants : மசகு உயவுப் பொருள்கள் : இவை ஆறுவகைப்படும்: (1) கொழுப்பு மசகு இது விலங்கின் கொழுப்பும், பனை எண்ணெயும் சில கனிம எண்ணெய்களுடன் கலந்த கலவை (2) சோப்பு போன்று கெட்டியான கனிம எண்ணெய் வகை. (3) முதலாவது அல்லது இரண்டாவது வகைக் காரீயகம், வெளிமக் கன்மசி, அல்லது அப்பிரகத்துடன் கலந்த கலவை, (4) கற்பூரத் தைல வகை. (5) நீர்மமல்லாத எண் ணெய்கள்; (6) தனிவகை வடிப்பான்கள் உள்ள தனிவகை மசகுகள்

grease trap : (கம்) மசகுப் பொறி: வீட்டுக் கழிவுப்பொருள்களிலிருந்து மசகினைப் பிரித்துத் திடப்பொருளாக்கி, அகற்றுவதற்கான ஒரு முறை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது

green : பசுமை நிறம் : ஒளிக்கதிர் நிறப்பாட்டையில் நீலத்திற்கும் மஞ்சளுக்குமிடைப்பட்ட வண்ணம்

காகிதத்திலும், அச்சு உருளைகளிலும், முழுமையாகப் பக்குவப்படுத்தப்படாத நிலையைக் குறிக்கும் சொல்

green core: (வார்.) பக்குவமடையா உள்ளீடு: வார்ப்படத்தில் முற்றிலும் எரிந்து பக்குவப்படாத உள்ளீடு

green field : (மின்) பசும்புலம்; துவள் குழாய்க்கு முதற்கண்ணிருந்த வாணிகப் பெயர்

green gold : (வேதி) பசும் பொன் : 25% வெள்ளியும் 75% தங்கமும் கலந்த உலோகக் கலவை

green sand : (வார்) பசுமணல்: பச்சை நிறங்கொடுக்கும் கனிப் பொருள் நிறைந்த மணற்கல். இதனை உலர்த்தாமல், நீருடன் கலந்து ஈரமாக்கி வார்ப்படத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள்

grand sand core : (வார்) பசுமணல் உள்ளீடு : ஈரமான பசுமணலினாலான ஓர் உள்ளீடு

green vitriol or copper as : (வேதி.) பசுங்கந்தகத் திராவகம் அல்லது இரும்புக் கந்தகை : எஃகினை ஊற வைப்பதால் கிடைக்கும் துணைப்பொருள். இதனை அய சல்ஃபேட்டு என்றும் கூறுவர். தொற்றுத் தடைமருந்தாகப் பயன் படுகிறது. மை, ஆழ்ந்த நீல வண்ணப்பொடி, சிவப்பு ஆக்சைடு ஆகியவை தயாரிக்கவும் பயன்படுகின்றது

green wood: பசுமரம் : ஒருவகை வெட்டுமரம். இதில் சாறு அகற்றப்பட்டு, உலர்த்தப்படுவதில்லை

grid : (மின்.) (1) மின்வாய் : எலெக்ட்ரான்கள் அல்லது அயனிகள் செல்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட திறப்புகள் கொண்ட ஒரு மின்வாய்

(2) இணைப்பு வரைச்சட்டம் : மின் னாக்கிகளின் இணைப்பு வரைச் சட்டம்

(3) சேமக்கல அடித்தளம் : சேம மின் கலங்களில் தகடுகள் அமைக்கப்படுவதற்கான அடித்தளம்

(4) வார்ப்பிரும்புச் சட்டம் : அச்சகத்தில் அச்சுத்தாள் அழுத்தும் தகட்டுப்பாளங்களிலிருந்து நீராவித் தகடுகளை புறத்தே பிடித்து வைத்துக் கொள்வதற்கான வார்ப்பிரும்புச் சட்டம்

(5) வானொலிக் குழாய் : வானொலியில் உருகாது அழலொளிவிடும் மின்குமிழ் இழைக்கும் தகட்டிற்கு மிடையேயுள்ள வானொலிக் குழாய்ப் பகுதி