பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

grid condenser ; கம்பிக் கொண்மி: கம்பிவலை மின்சுற்று வழியின் ஒரு பகுதியாகவுள்ள கொண்மி

grid current : (மின்) இணைப்பு மின்னோட்டம்: ஓர் எலெக்ட்ரான் குழலின் இணைப்பு மின் சுற்று வழியில் பாயும் மின்னோட்டம்

grid dip meter : (மின்.) இணைப்பு மின் இறக்க அளவுமானி: ஒத்திசைவு அலைவெண்களை அளவிடுவதற்கான ஒரு கருவி

grid leak : கம்பிக் கசிவு: ஒரு மின்னணுக்குழாயின் கம்பிவலை மின் சுற்றுவழியில் பயன்படுத்தப்படும் மின்தடை

grid leak detector : (மின்) இணைப்புமின் கசிவு காட்டும் பொறி: ஒரு மூன்று மின்முனை காட்டும் பொறியாகவும், மின் மிகைப்பியாகவும் செயற்படும் வகையில் இணைக்கப்பட்டுள்ள ஒரு மூன்று மின்முனை மிகைப்பி இணைப்பு மின் சுற்றுவழியில் இந்தக் கண்டுபிடிப்பு நடைபெறுகிறது

grid modulation : (மின்.) இணைப்பு அலை மாற்றம் : இது ஓர் அலைமாற்ற மின் சுற்றுவழி. இதில் அலைமாற்றச் சைகையானது, இணைப்பினுள் அலைமாற்ற நிலையில் செலுத்தப்படுகிறது

grid resistance : (மின் ) வலை மின்தடை : மிகப்பெரிய அளவிலான மின்னோட்ட இயக்கிகளுக்கான தொடக்க மின்தடை. இது வார்ப்பிரும்பிலிருந்து கம்பி வலைகள் வடிவில் தயாரிக்கப்படுகிறது

grid resistor : வலைமின் தடுப்பான் : ஒரு வானொலிக் குழாயின் கம்பிவலை மின்சுற்றுவழியில் பயன்படுத்தப்படும் அதிக அளவுத் தடையுள்ள மின் தடுப்பான்

grid voltage : (மின்) இணைப்பு மின்னழுத்தம் : ஒரு வெற்றிடக் குழலின் இணைப்பில் பயன்படுத்தப்படும் சார்பு மின்னழுத்தம்

grill (க.க.) வலைத்தட்டி : திறந்த வாயில்களுக்கு அல்லது கதவில் அல்லது பல்கணியிலுள்ள கண்ணாடிகளுக்குப் பாதுகாப் பாக உலோகத்தால் அல்ல மரத்தால் அமைக்கப்படும் வலைத் தட்டி அமைப்பு

grind : சாணையிடல் : சுழலும் சாணைச் சக்கரத்தில் சாணையிட்டுத் தீட்டுவதன் மூலம் ஒரு பொருளைக் கூர்மையாக்குதல்; வேண்டிய வடிவளவுக்கு அராவிக் குறைத்தல்; அல்லது அகற்றிவிடுதல்

grinder: (பட்.) அரைவை எந்திரம்: அரை வைப் பணிக்குப் பயன்படும் கருவி அல்லது சாதனம்

grind finish : (எந்) சாணை தீட்டுதல்: சாணைச் சக்கரத்தில் அராவித்தீட்டி மெருகேற்றுதல். முன்னர் கருவிகளில் மெருகிடப் பட்ட பல வேலைகள் இன்று சாணை தீட்டுதல் மூலம் நடைபெறுகின்றன

grinding allowance : சாணைக் கழிவு : வேலைப்பாடு செய்யப்படும் பொருளில் சாணை தீட்டுவதால் ஏற்படும் கழிவுக்காக விட்டு வைக்கப் படும் அளவு. நேர்த்தியான வேலைப்பாட்டில் .0076-.0177செ.மீ. போதுமானது. கனமான பொருள்களின் வேலைப் பாடுகளில் 1/64 அல்லது 1/32 அளவு தேவைப்படும்

gridding compound ; (தானி) சாணை இணைப்பு: சாணை தீட்டுவதன் மூலம் நுட்பமாக மெரு கூட்டி உறுப்புகளை முற்றிலுமாகப் பொருந்துமாறு இணைத்தல் இதனைக் கையினாலோ, எந்திரத்தினாலோ செய்யலாம்