பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
321

grinding machine : (உலோ) சாணை எந்திரம் : ஓர் உராய்வுச் சக்கரத்தைச் சுழற்றி சாணை தீட்டுவதற்கான எந்திரம்

grindstone_: சாணைக்கல் : இது சாணை தீட்டுவதற்கான ஒரு கருவி. இது இயற்கையாகக் கிடைக்கும் மணற்பாறையினாலானது, சுழலும் இக்கல்லில் பொருள்களை உராய்ந்து சாணை தீட்டப்படுகிறது

grip : (எந்.) பிடிப்பாணி : பொதுவாக, எந்திரத்தில் இறுகப்பிடிக்கும் பகுதியைக் குறிக்கும்

grippers: (அச்சு.) பிடிப்பான்கள்: அச்சு எந்திரத்தில் அச்சிடும்போது காகிதத்தை உரியநிலையில் இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்வதற்குப் பயன்படும் உலோகத்தாலான சிறிய விரல்கள் போன்றஅமைப்பு

gri-saille : புடைப்போவியம்: ஒரு வண்ணத்திறமாகச் சாம்பல் நிறச் சாயல்களில் அமைவுறும் புடைப்பியல் திற ஓவிய ஒப்பனை

grit : பருமணல்: சாணைச் சக்கரங்கள் செய்வதற்குப் பயன்படும் பொடிக்கற்கள். இந்தப் பொடிக்கற்களின் வடிவளவினைப் பருமணல் எண்மூலம் குறிக்கின்றனர்

groin : (க.க.) கட்டுமான இடைக் கோணம் : கட்டிடக்கலையில் இரு வளைவு மாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம்

groined vaulting : (க.க.) இடைக்கோணக் கவிகை மாடம் : கவிகை மோடுகள் ஒன்றை யொன்று குறுக்கே வெட்டிச் செல்லும் வண்ணம் கட்டிடங்களுக்கும் நடைபாதைகளுக்கும் மோட்டுக் கவிகை அமைக்கும் முறை

grommet: வட்டுவளையம்: பந்தல்களிலும், கொடிகளிலும் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் ஓர் உலோகக் கயிற்றுத் துளை

மரையாணிகள், பெருந்தலையாணிகள் ஆகியவற்றைச் சுற்றி, நீர் புகாதவாறு இறுக்கமான தடுப்பானாக அல்லது வளையமாகப் பயன்படுத்தப்படும் மெழுகுவர்த்தித் திரி வளையம்

கப்பல்களில் பயன்படுத்தப்படும் கயிற்று வட்டு அல்லது வளையம்

groove : (க.க.) வரிப்பள்ளம்': சால்வரி நீண்ட வரிப்பள்ளம்; தவாளிப்பு: வரித்தடம்

grooving : (க.க) வரிப்பள்ளமிடுதல்: வரிப்பள்ளமிடும் கருவி கொண்டு நீண்டபள்ளத் தடமிடுதல் அல்லது சால்வரி அகழ்தல்

grooving machine: தவாளிப்புக் கருவி : செல்தடப்பள்ளம் அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி

grooving stake : தவாளிப்பு முளை : பல்வேறு வடிவளவுகளில் வரிப்பள்ளங்கள் வெட்டப்பட்டுள்ள ஒரு சலாகை. கையால் வரிப்பள்ளமிடும் கருவியைப் பயன்படுத்தாமல், கொட்டாப்புளியினால் பூட்டு விளிம்புகளை மூடுவ வதற்கு இது பயன்படுகிறது. இதில் பட்டறைப் பிடிப்புக் குறட்டில் சலாகை இறுகப் பற்றிக் கொள்ளப்படுகிறது

gross : குரோஸ் : பன்னிரண்டு உருப்படிகளடங்கிய தொகுதிகளின் பன்னிரண்டு. எண்ணிக் கையில் 144

grotesque : விசித்திர பாணி: விசித்திரக் கற்பனைக் கதம்பமாக அமைந்த அலங்காரப் பாணி

ground (க.க.) (1) ஆதார மரத் துண்டு : செங்கல் அல்லது கற்சுவருடன் இணைக்கப்பட்டுள்ள ஆணி அடிப்பதற்குரிய மரத்துண்டு