பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
323

ground speed: (வானூ.) தரை வேகம்: விமானம் தரையையொட்டிக் கிடைமட்டமாகச் செல்லும் வேகவீதம்

ground speed meter : (வானூ.) தரை வேகமானி: விமானம் தரையையொட்டிக் கிடைமட்டமாகச் செல்லும் வேகவீதத்தை அளவிடும் கருவி

ground strap: (தானி.) இணைப்புப் பட்டை: காரின் சட்டத்துடன் மின்கலத்தை அல்லது ரப்பர் மீது எஞ்சின் ஏற்றப்பட்டிருக்கும் போது எஞ்சினைச் சட்டத்துடன் இணைப்பதற்குப் பயன்படுத்தப்படும் செப்புக்கம்பி வடம் அல்லது பின்னல் செப்புப்பட்டை

ground water (கம்.) தரையடி நீர்: தரையடியில் தேங்கி நிற்கும் அல்லது நீரோட்டமாக ஓடும் நீர்

ground waves : (விண்.) நில அலை : ஒரு வெடிப்பு காரணமாக நிலத்தில் உண்டாகும் அலை

ground wire: (மின்.) தரையடிக் கம்பி: தரையடியில் இரு மின்னியல் சாதனங்களை இணைக்கும் கம்பி

ground wood: தோப்பு மரம்: இது எந்திர வெட்டு மரம் என்றும் அழைத்தப்புெறும். மரத்தடிகளை அராவித் தேய்த்து இந்த மரம் பெறப்படுகிறது

group of dots : (கணிப். ) புள்ளிக் குறிகளின் குழுமம்.

grout : அரைசாந்து: கட்டிட இடைவெளிகளை நிரப்புவதற்கான நீளமான அரைசாந்து

growler : (மின்.) உறுமின்மாற்றி: மின்னகங்களில் குறுக்கீடுகள், திறப்புகள், மண்தொடர்புகள் ஆகியவற்றைக் கண்டறியப் பயன்படும் சிறிய மின்மாற்றி

growth: (மின்.) வளர்ச்சி நிலை: மின்னோட்டம், மின்னழுத்தம் ஆகியவற்றின் அளவுகளில் படிப்படியாக ஏற்படும் அதிகரிப்பைக் குறிக்கும் சொல்

guard : இடர்காப்பமைவு: (எந்.) எந்திரத்தை இயக்குபவருக்கு உடற்காயம் எதுவும் ஏற்படாமல் காப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள காப்புச் சாதனம்

guard band: (மின்.) காப்புப் பட்டை: அலைவரிசைகளிடையே இடையீடு ஏற்படாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையின் மேல் முனையிலுள்ள ஒரு குறுகிய அலைவெண்பட்டை

gudgeon pin : (தானி. ) also go தண்டு முனை: இது இருசுக்கடையாணி அல்லது உந்துதண்டு பிணைப்பாணி போன்றதாகும்

gudgeons : (அச்சு.) சுழல்சக்கரங்கள்: அச்சு எந்திரங்களில் உருளையின் முனைகளுடன் இணைக்கப்பட்டுள்ள் உலோகச் சக்கரங்கள். இவை சுழல்நெறிப் பட்டைகளில் உருண்டு உருளைகளைச் சுழலச் செய்கின்றன

guide bearings: (எந்.) சால்வரித் தாங்கிகள்: உறுப்புகள் நழுவிச் செல்லக்கூடிய சால்வரி அல்லது வரிப்பள்ளம் உடைய தாங்கிகள்

guided aircraft missile. (விண்.) ஏவு விமானக் கணை: வானத்தில் பறக்கும்போது இலக்குகளைத் தாக்குவத்ற்காக விமானத்தில் கொண்டு செல்லப்படும் ஒரு வகைத் தானியங்கி ஏவுகணை. இதனை வானில் செலுத்திய பிறகு இலக்கை நோக்கி ஏவலாம்

guided missile : (விண்.) ஏவுகணை: வானொலி போன்ற கருவி