பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

324

களைக் கொண்டு தொலைவிலிருந்தே வேண்டிய நெறியில் செலுத்தப்படத் தக்க படைக்கலம்

guide pins : (குழை.) ஆற்றுப்படையாணிகள்: வார்ப்படம் மூடிக் கொள்கிறபோது அழுத்தச் செருகியும், பள்ளமும் முறையாக ஒருங்கிணைவதற்கு உதவும் சாதனம்

guide rail : ஆற்றுப்படைத் தண்ட வாளம் : இருப்பூர்தியின் சக்கர விளிம்புகளை ஆற்றுப்படுத்திச் செல்வதற்காக இருப்புப்பாதையின் பிரதான தண்டவாளத்தின் உட்புறம் அமைக்கப்பட்டுள்ள ஒரு மிகைத் தண்டவாளம். இந்தத் தண்டவாளம் வளைவிலே வண்டிகள் தண்டவாளங்களிலிருந்து விலகிச் செல்லாமல் தடுக்கின்றன

guides : (அச்சு.) இயக்கு தண்டுகள்: ஒவ்வொரு தாளிலும் ஒரே இடத்தில் அச்சிடுதல் நடைபெறுமாறு செய்வதற்காகத் தாளில் வைத்து வழிப்படுத்துவதற்கு உதவும் சாதனம். இந்தச் சாதன்த்தை தேவையான நிலையில் சீரமைத்துக் கொள்ளலாம்

guilloche : (க.க.) பின்னற்சடை ஒப்பனை: கட்டிடங்களில் பின்னற்சடை போன்று செய்யப்படும் சிற்பக்கலை ஒப்பனை

guillotine cut : தலைத் தறிப்பு வெட்டு: தலையை வெட்டுவதற்காகப் பயன்பட்ட வெட்டுப்பொறியின் கத்தி அலகு போன்ற வெட்டுவதற்கான எந்திரக் கருவி

gum bloom : (வண்.) பிசின் அரக்கு : இயல்பான பளபளப்புள்ள, ஒளி ஊடுருவக்கூடிய பிசின் குழம்பு

gumming test for oils : பிசின் சோதனை: எண்ணெய்கள் பிசினாக மாறுந்திறனைச் சோதிக்கும் சோதனை. வாயு எஞ்சின் நீள் உருளைகளில் எண்ணெய்கள் எந்த அளவுக்கு கார்பனாக மாறும் என்பதை அளவிடுவதற்கு இச்சோனை பயன்படுகிறது. எண்ணெயை அமிலத்துடன் சேர்ப்பதால் ஏற்படும் மாறுதல்களைக் கொண்டு இது அறியப்படுகிறது

gums: (வேதி; குழை.) கோந்துகள்: தாவரங்களிலிருந்து எடுக்கப்படும் பசை வகைகள், பிசின்கள் போலன்றி, இவை தண்ணீரில் கரையக்கூடியவை. வண்ணத் தொழிலில் குங்கிலியம் போன்ற இயற்கைப் பிசின்களை இப்பெயர் குறிக்கிறது

gum wood: குங்கிலிய மரம்: நடுத்தர அளவு கனமான, கருநிறமான, வாதுமை மரத்தில் உள்ளது போன்று மணிக்கரணைகள் உள்ள மரம், அறைகலன்கள் செய்யவும், கட்டிடங்களில் உட்புற அலங்கார வேலைகளுக்கும் முக்கியமாகப் பயன்படுகிறது

gun cotton: (வேதி.) வெடிப்பஞ்சு : வெடிப்பாற்றலுள்ள நைட்ரிக் அமிலம், கந்தக அமிலம் ஆகியவற்றில் தோய்ந்த மிகுந்த வெடிப்புத் திறனுடைய பஞ்சு

gun lather (எந்.) பீரங்கிக் கடைசல் எந்திரம்: பீரங்கிகளில் கடைசல் வேலை செய்வதற்கும், அவற்றில் துளையிடுவதற்கும் பயன்படும் பெரிய அளவிலான கடைசல் எந்திரம்

gun metal: கருங்கலம்: துப்பாக்கி செய்யப் பயன்படும் செம்பு, துத்தநாகம், வெள்ளியம் கலந்த உலோகக் கலவை. ஒரு காலத்தில் பீரங்கிகள் செய்ய மிகுதியும் பயன்படுத்பட்டது

gunning : (வானூ.) முழு வுேக இயக்கம் : விமான எஞ்சினை முழுவேகத்தில் இயங்கும்படி செய்தல்