பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
379

இயங்கி, நேரியக்கத்திற்கு இடமளிக்கக் கூடிய சுழல் தண்டு இணைப்பு. இது, 45° வரையில் எந்தக் கோணத்திலும் விசையினை அனுப்பும்

joist: (க.க.) துலாக் கட்டை : சுவருக்குச் சுவராக இடும் தளக் குறுக்குக் கட்டை

jolt-ramming machine:(வார்.)குலுக்கு வார்ப்படப் பொறி ; இலேசானது முதல் மிகக் கனமானது வரையிலான எல்லா வகை வேலைகளுக்கும் ஏற்ற ஒரு வார்ப்பட எந்திரம். காற்றழுத்தம் மூலம் உயர்த் இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது தப்படும் ஒரு மேசையின் மீது வைக்கப்பட்டுள்ள வார்ப்புக் கலம் கீழே விழுந்து அந்த வேகத்தில் மணலை நிரப்பிக் கொள்கிறது

jordan engine : தாள் மெருகுப் பொறி : தாள் தயாரிப்பதில், தாள் இழைகளின் நீளத்தை ஒழுங்கு படுத்தி, கலக்கும் கருவியிலிருந்து வரும் காகிதத்தில் கரணைகள் ஏற்படாமல் செய்யும் பொறியமைவு

joule: (மின்.) ஜூல் : மின்னாற்ற லின் நடைமுறை அலகு

joule, james prescott (1818-1889): (மின்னி .) யூல், ஜேம்ஸ் பிரஸ்காட் (1818-1889) : ஆங்கிலேய விஞ்ஞானி. சாராயம் காய்ச்சுபவராகத் தமது வாழ்க்கையைத் தொடங்கி, மின்னியலில் ஆர்வங்கொண்டு, பல அடிப்படைக் கண்டுபிடிப்பு களைச் செய்தார். வேலை ஊக்க ஆற்றலின் அலகினைக் கண்டுபிடித்ததற்காகப் புகழ்பெற்றவர்

journal : (எந்.) இருசுக் கடை : தேய்வுருளைகளுடன் இணையும் ஊடச்சின் பகுதி

journal box : (எந்.) இருசுப் பெட்டி : தாங்கி அல்லது இருசு உள்ள ஒரு பெட்டி

journey man: கைவினைஞர்: ஒரு தொழிலில் முழு தேர்ச்சி பெற்றுள்ளவரும் ,மற்றொருவருக்காக வேலை செய்பவருமான கைவினைஞர்

joyner: அறைகலன் தச்சர்; அறைகலன்கள் செய்திடும் சிறு தச்சு வேலை செய்பவர்

jumper : (மின்) இணைப்புக் கயிறு: குறுக்குச் சட்டங்களை இறுக்கிப்பிடிக்கும் கயிறு அல்லது கம்பி

jump spark :(மின்.எந்) தாவு மின் பொறி: மின்பொறியூட்டும் இணைப்புகளிடையில் உள்ளது போன்று, நிலையான மின்முனை இடைவெளியின் குறுக்கே மின்விசை தாவிக்குதித்து உண்டாக்கும் பொறியமைவு

junction: சந்திப்பு ; இணைப்பு: இணைப்பிடம்; கூடுமிடம், இணைப்பு

junction box : (மின்.) சந்திப்பெட்டி : பல மின்கம்பிக் காப்புக் குழாய்கள் நுழைந்து, மின்கடத்திகள் புரியிணைவு செய்யப்படும் ஓர் உலோகப்பொடி

junction diode :(மின்) இணைப்பு இருமுனையம்: ஒரே திசையில் செல்லும் மின்னோட்டப் பண்புகளுடைய ஓர் இணைப்பு இரு முனையம்

justification : (அச்சு) அச்சு வரிச் சரிக்கட்டு; அச்சுக்கலையில் ஒரு கலையில் பயன்படுத்தப்பட வேண்டிய பொருளை ஒரு குறிப்பிட்ட அளவுக்குள் பொருந்துமாறு சரிக்கட்டுதல்

'jute board :(நூ.க) சணல் அட்டை: சணல் நாரினால் செய்யப்பட்ட