பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

394

lathe chuck: (எந்.) கடைசல் கவ்வி: கடைசல் எந்திரத்தின் கதிர்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கவ்வும் சாதனம். இது கடைசல் எந்திரம் இயங்கும் போது, அதில் வேலைப்பாடு செய்யப்படும் பொருளைக் கல்விப் பிடித்துக் கொள்கிறது

lathe dog: (எந்) கடைசல் எந்திரக் குறடு: ஒரு கடைசல் எந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள இடுக்குக் குறடு

lathe engine: _ (எந்.) எந்திரக் கடைசல் பொறி: திருகினைக் கொண்ட விசையினால் இயங்கும் கடைசல் எந்திரம்

lathe gap: (எந்.) இடைவெளிக் கடைசல் பொறி: எந்திரத்தால் இயங்கும் கடைசல் படுகை கொண்ட கடைசல் பொறி

lathe tool; (எந்.) கடைசல் கருவி: கடைசல் எந்திரத்தில் வேலைப்பாடு செய்யப்பட்ட உலோகப் பொருளிலுள்ள பிசிறுகளை அகற்றுவதற்குப் பயன்படும் கருவி. இதனை 'வெட்டுக் கருவி' என்றும் கூறுவர்

lathe work: கடைசல் வேலைப்பாடு: கடைசல் எந்திரத்தில் செய்யப்படும் துளையிடுதல், நெளிவெடுத்தல் போன்ற அனைத்து வேலைப்பாடுகளையும் குறிக்கும்

latitude: அட்சரேகை: பூமியின் மேற்பரப்பில், பூமத்திய ரேகையிலிருந்து வடக்கே அல்லது தெற்கே உள்ள தொலைவு

lattice (க.க.) பின்னல் தட்டி: வரிச்சல் அல்லது கம்பிகளின் பின்னால் அமைந்த பலகணி

lattice girder: (க.க) குறுக்குச் சட்ட உத்தரம்: இரும்பாலான பின்னற் சட்ட அமைப்போடு இணைக்கப்பட்ட பெரிய உத்தரம்

lattice work: (அ.க) பின்னல் வேலைப்பாடு: மரத்தினாலான அல்லது உலோகத்தினாலான பின்னல் வலை வேலைப்பாடு

laureling: (அ.க.) புன்னையிலை வேலைப்பாடு: புன்னை இலைப் புடைப்புச் சித்திர வேலைப்பாடுகளைக் கொண்ட அலங்கார வேலைப்பாடு

launch pad: (விண்.) செலுத்து மேடை: ஓர் ஏவுகணையைச் செலுத்துவதற்கு ஏற்றி வைப்பதற்கான காங்கிரீட் அல்லது வேறு கெட்டியான ஒரு பரப்பிடம்

lava: (வேதி.) எரிமலைக் குழம்பு: எரிமலை உருகிய பாறைக் குழம்பு

lavatory: (க.க.) கழிப்பிடம்: கை கால் கழுவவும் துணி துவைக்கவும் சிறுநீர் கழிக்கவும் பயன்படும் அறை

lawn: சல்லடை : நார்த்துணி அல்லது பட்டாலான மென்மையான சல்லடை

layout: (அச்சு.) (1) அமைப்புத் திட்டம்: ஒரு பணியின் செயல் முறைத்திட்டம் அல்லது வரைபடம்

(2) மனைத்திட்ட அமைப்பு: ஒரு வீட்டுமனையின் திட்ட அமைப்பு

(3) நிலத்திட்ட அமைப்பு: வீடுகள் கட்டுவதற்கான நிலத்தை மனைகளாகப் பகுத்துத் திட்ட அமைப்பு செய்தல்

layout bench or a table: விரிப்பு மேசை: வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய பொருளை விரித்து வைப்பதற்கான உலோகச் சமதளமுடைய மேசை