பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

412

இவை மற்ற எந்திரங்களைத் தயாரிப்பதற்குப் பய்ன்படும் கருவிகள். எனவே, இந்தக் கருவிகள் "தொழில் துறையின் தலைமைக் கருவிகள்"என்று அழைக்கப்படுகின்றன

machining : எந்திர வேலைப்பாடு: உலோக வேலைப்பாடுகளில் எந்திரங்களினால் செய்யப்படும் நுட்ப வேலைப்பாடுகள்

machining allowance : (எந்.) மெருகு வேலை மிகைப்பகுதி : வெட்டுக் கருவிகளினால் மெருகு வேலைப்பாடு செய்வதற்கு வசதியாகப் போதிய அளவு விடப்படும் மிகைப்பகுதி

mechanist: எந்திர இயக்குநர்: எந்திரக் கருவிகளை இயக்குபவர்

Mach number : (வானூ.) ஒப்புவேக எண் : உண்மையான காற்று வேகத்திற்கும் ஒலியின் வேகத்திற்குமிடையிலான விகிதத்தைக் குறிக்கும் எண். ஒலியை விடக் குறைந்த வேகத்திற்கான இந்த என ஒரு பின்னமாகும்.ஒலியிலும் மிகுதியான வேகத்திற்கு இந்த எண் ஒன்றுக்கு மேற்பட்டதாகும்

macro molecule : (குழை.) பெரு மூலக்கூறு : கரைதக்கை நிலைப் பண்புகளை வெளிப்படுத்து அளவுக்கு வடிவளவுள்ள ஒரு மூலக் கூறு

madrono : (மர.வே.) மாட்ரோனோ : ஒரு பூக்கும் இள மரம். பசிபிக் கடற்கரையோர்ம் வளர்கிறது. இதன் வெட்டு மரம் கரடுமுரடானது; கனமானது; இளஞ்சிவப்பு நிறமுடையது. அறைகலன்கள் செய்வதற்கு மிகுதியும் பயன்படுகிறது

magazine : (க, க.) படைக்கலக் கொட்டில் : போர்க்காலத்தில் படைக்கலங்களையும் போர்த் தளவாடங்களையும் சேர்த்து வைக்குமிடம்; துப்பாக்கி மருந்து முதலிய வெடிமருந்துகளைச் சேர்த்து வைக்குமிடம்

(2) பருவ இதழ் : பல எழுத்தாளர்களின் படைப்புகளடங்கிய புத்தக வடிவிலுள்ள பருவ வெளியீடு

(3) அச்சுக்கோப்பு எந்திரப் பகுதி: அச்சுக்கோப்பு எந்திரத்தின் ஒரு பகுதி. இதில், அச்சு வார்ப்புருக்கள் அல்லது எழுத்துகள் வரிகளாக ஒருங்கிணைப்பதற்காகச் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும்

magnalium : (உலோ.) மக்னாலியம் : அலுமினியமும் மக்னீசியமும் கொண்ட இலேசான உலோகக்கலவை. இதில் 2%-10% மக்னிசியம் கலந்திருக்கும். இந்த உலோகக் கலவை மிகக் கடினமானது. இதனை எளிதில் வார்க்கலாம்; வடிவமைக்கலாம்; இதில் எளிதில் வேலைப்பாடுகள் செய்யலாம்

magnesia : (வேதி.) மக்னீசியா: இதனை வெளிம உயிரகை என்றும் கூறுவர். இது வயிற்றுப் புளிப் பகற்றும் மருந்தாகப் பயன்படுத்தப்படும் வெண்பொடி

magnesia : (உலோ.) மக்னீசியா: மக்னீசியம் கார்பனேட்டை நெருப்பில் சுட்டு மாறாச் சுண்ணமாக்குவதன் மூலம் கிடைக்கும் பொருள். இலேசான வெண்ணிறப் பொடியான இது, வயிற்றில் அமிலத் தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிற்றுக் கோளாறுகளை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது

magnesium : (உலோ.) மக்னீசியம் : மிக இலேசான உலோகத் தனிமம். இதன்வீத எடைமானம் 1:74, இது தனியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. இதனை அலுமினியம் அல்லது பிற உலோகங்களுடன் கலந்து விமானம் முதலிய