பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
413

வற்றின் இலேசான உறுப்புகளைத் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இந்த உலோகம் எளிதில் தீப் பற்றும் தன்மைபுடையது. அதனால், இதில் எந்திரத்தால் வேலைப்பாடுகள் செய்யும்போது தீப்பிடிப்பதற்கு எதிராக முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும். இது கண் கூசவைக்கும் ஒளி விளக்குகளிலும், வாண வேடிக்கைப் பொருள்களிலும் பயன்படுகிறது

magnesium silicate : (வண்.) மகனீசியம் சிலிக்கேட் : வெண்மையான வண்ணப் பொருள். இது எதனுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறதோ அந்தப் பொருளுக்கு இழைத் தன்மையைக் கொடுக்கிறது

magnet : (மின்.) காந்தம்: வளைவில் (குதிரை லாட) அல்லது சலாகை வகைத் துகள்களைக் கவர்ந்திழுக்கும் இயல்புடைய பொருள்

magnetic amplifiers : (மின்.) காந்த மின்பெருக்கி: நேர் மின்னோட்டம் மற்றும் மாற்று மின்னோட்டச் சுருணையைப் பயன்படுத்தும் ஒரு மின்மாற்றி வகைச் சாதனம்

magnetic brake: (மின்.) காந்தத்தடை : காந்த ஆற்றல் மூலம் இயக்கப்படும் உராய்வு வகை எந்திரத் தடை

magnetic chuck : (உலோ.) காந்த ஏந்தமைவு: எந்திரப் பணிகளில் இரும்பை அல்லது எஃகை ஒரு நிலையில் ஏந்திப் பிடித்து வைப்பதற்குப் பயன்படும் வலிமையான காந்தம்

magnetic chuck: (மின்; பட். ) காந்தப்பற்றி: காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இரும்பையும் எஃகையும் பற்றிக் கொள்ளும் ஒரு வகைப் பற்றுக்கருவி மேற்பரப்பினை ஆராவித் தீட்டும் எந்திரங்களில் இது முக்கியமான உறுப்பாகும். இதனை தேர் மின்னோட்டத்தை மட்டுமே கொண்டு பயன்படுத்த முடியும்

magnetic circuit : (மின்.) காந்த சுற்று வழி: ஒரு காந்தப் பொருளில் அல்லது ஒரு காந்தக் கருவியில் காந்தவிசை வரிக்கோடுகள் செல்லும் வழி. ஒரு சுற்று வழி ஓர் இடைவெளியையும் கொண்டிருக்கலாம்

magnetic circuit breaker: (மின்.) காந்தச் சுற்றுவழி முறிப்பான்: ஒரு சுற்று வழித் தொடர்பை ஏற்படுத்துவதற்குப் பயன்படும் ஒரு மின்காந்தச் சாதனம்

magnetic circuit: (மின்.) காந்தச் சுற்றுவழி: காந்தமேற்றும் ஆற்றலின் விளைவினால் ஆற்றலின் காந்தக் கோடுகளை ஏற்படுத்தும் ஒரு முழுச் சுற்றுவழி

magnetic circuit breaker: (மின்.) காந்தச் சுற்றுவழி முறிப்பான்: ஒரு மின்னியல் சுற்று வழியில் சுமை அதிகமாகும்போது ஒரு காந்தவிசை மூலம் சுற்றுவழியைத் திறக்கின்ற ஒரு காப்புச் சாதனம்

magnetic coil: (மின்.) காந்தச் சுருணை: ஒரு மின்காந்தச் சுருள். இதில் ஒரு கம்பிச் சுருள் ஒரு திசை சுற்றப்பட்டிருக்கும். இதில் மின்னோட்டம் பாயும்போது, அடர்த்தியான காந்தப்புலம் உண்டாக இரும்பையும் எஃகையும் ஈர்க்கும்

magnet core : (மின்.) காந்த உள்ளீடு: இது பெரும்பாலும் மெல்லிரும்பாக அமைந்திருக்கும். இதனை மையமாகக் கொண்டு கம்பி சுறப்பட்டிருக்கும். இக்கம்பியில் மின்விசை பாயும்போது மின்காந்தம் உண்டாகும்

magnetic cutout: (மின்.) காந்த வெட்டுவாய்: ஒரு மின்சுற்று