பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
423

உயரங்களிலும் மிகப் பெருமள வில் பறக்கக்கூடிய தொலைவு

maximum revolutions : (வானூ.) பெருமச் சுழற்சிகள்: ஒரு நிமிடத்தில் மிக அதிக அளவில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கை. இது பெருமக் குதிரைத் திறனுக்கு நேரிணையானது

maximum voltage : (மின்.) பெரும மின்னழுத்தம் : ஒரு மாற்று மின்னியக்க வரிசையில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் உண்டாகும் மிக உயர்ந்த அளவு மின்னழுத்தம்

Maxwell, James Clerk: (மின்.) மாக்ஸ்வெல், ஜேம்ஸ் கிளர்க் (1831-1879) புகழ்பெற்ற ஸ்காத்லாந்து விஞ்ஞானி. பாரடே கண்டுபிடித்த மின் காந்தத்திற்குத் திட்டவட்டமான பரிசோதனை ஆய்வு முறைகளைக் கண்டறிந்தவர். 'மின் விசை மற்றும் காந்தவிசை பற்றிய ஆய்வு' என்ற நூலை 1873இல் எழுதினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். கேவண்டிஷ் ஆய்வுக்கூடம் இவரது மேற்பார்வையில் கட்டப்பட்டது

mean : (கணி.) சராசரி : இயற் கணிதத்தில் இரண்டு எண்களுக்குச் சரி சமமான இடைநிலையிலுள்ள எண்

mean chord of a wing: (வானூ.) இறகின் இடைநிலை இயைபளவு : விமானத்தில் இறகின் பரப்பளவை ஒர் இறகின் முனை வரையிலான இடையகல அளவினால் வகுப்பதன் மூலம் கிடைக்கும் ஈவு

mean line : (வானூ.) இடைநிலைக் கோடு : விமானத்தின் உருவரைப் படிவப் படத்தில் மேல் கீழ் உருவரைகளுக்கிடையிலான இடைநிலைக்கோடு

'measure : (அச்சு.) அகலளவு : அச்சுக்கலையில் ஒரு பத்தியின் அல்லது அச்சுப் பக்கத்தின் அகலம் அல்லது ஒரு பணியின் அகலம்

measurement : அளவு : வடிவளவு; பரப்பளவு; கொள்ளளவு அளவிடுதல்

measures : அளவைகள் : நீட்டலளவை, முகத்தலளவை, நிறுத்தலளவை போன்ற அளவைகள். இவற்றில் மெட்ரிக் முறை, ஆங்கில முறை போன்ற முறைகள் உண்டு

measuring machine : (பட்.) அளவிடு எந்திரம் : தேவையான வடிவத்திலுள்ள ஒரு அளவுமானி. இதனைக் கொண்டு குழாய்கள் துளைகள் முதலியவற்றை நுட்பமாக அளவிட உதவுகிறது. இவற்றுள் சில இப்போது எந்திர முறைகளுக்குப் பதிலாக ஒளி அலைகளைப் பயன்படுத்தி இயக்குகின்றன

measuring tape : அளவு நாடா : அளவுகள் குறிப்பிடப்பட்ட எஃகினாலான அல்லது நார்த் துணியினாலான நாடா. இது சாதாரணமாக 127-254 செ.மீ. நீளமிருக்கும். இதனைப் பொறியாளர்கள், கட்டிடம் கட்டுவோர், நில அளவையாளர்கள் போன்றோர் பயன்படுத்துகின்றனர்

mechanic : பொறிவினைஞர்: எந்திரங்களைப் பழுது பார்க்கிற அல்லது எந்திரங்களை அல்லது எந்திர உறுப்புகளை ஒருங்கிண்ணக்கிற தேர்ச்சி பெற்ற கைவினைஞர்

mechanical brakes: (தானி.) எந்திரத் தடை : உந்து ஊர்திகலுள்ள தடையமைப்பு முறை, இதில் கால்மிதி மூலம் சக்கரத்திலுள்ள தடைகளுக்குச்சலாகைகள்