பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

428

அமைவு. இது வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் போன்றவற்றைப் பதிவு செய்யும்

meteorology: (இயற்.) வானிலையியல் : வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித் துறை

meter : (எந்.) (1) மீட்டர்: மெட்ரிக் அளவு முறையில் அடிப்படையான நீட்டலளவை அலகு. 1 மீட்டர் = 39.37"

(2) அளவுமானி: திரவங்கள், வாயுக்கள், மின்னோட்டம் முதலியவற்றை அளவிடுவதற்கான அளவு கருவி

meter : (மின்.) (1) மின்மானி : மின் விசையினை அளவிடுவதற்கான ஒரு கருவி

(2) நீள அளவு: (மின்.) மெட்ரிக் அளவு முறையில் நீளத்தின் ஒர் அலகு. 1 மீட்டர் =39.37"

micrometer : (மின்.) நுண்ணளவைமானி : நுண்பொருட்கள். தொலைவுகள், கோணங்களை அளந்து காட்டும் கருவி

micrometry : (மின்.) நுண்ணளவை : நுண்ணளவை மானியால் அளத்தல்

metering orifice : (தானி.) அளவித் துளை: பல்வேறு தேவைகளுக் கேற்ப எரிபொருள் செல்வதை முறைப்படுத்துவதற்காக உள்ள ஒரு நிலையான துளை

metering pin : (தானி.) அளவிப் பிணைப்பூசி: அளவித்துளையின் மீது அமைந்துள்ள ஒரு பிணைப் பூசி. இது அளவித் துறையின் வழியாக வாயு பாய்வதை முறைப்படுத்துகிறது

metering rod : (தானி.) அளவித் தண்டு : எரிபொருள் பாய்வதை முறைப்படுத்தும் தடுக்கிதழ் புயத்துடன் இணைக்கப்பட்டுள்ள தண்டு

methane : (வேதி.) மீத்தேன் : மணமற்ற வாயு (CH4), தாவரப் பொருளின் இருமடிச் சேர்மானம் காரணமாக அல்லது கரிமப் பொருளின் உலர் வாலை வடித்தல் மூலமாக உண்டாகும் வாயு. ஒளிரும் வாயுவின் முக்கியமான கூறு

methanol : (வேதி.) மெத்தனால்: (CH3OH): மெத்தில் ஆல்கஹால், மர ஆல்கஹால், மரச்சாரா போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. எரிபொருளாகவும், வண்ணங்கள், மெருகெண்ணெய்கள் ஆகியவற்றின் கரைப்பானாகவும், ஆல்கஹாலை இயல்பு திரிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது

methyl : (வேதி.) மெத்தில் : (CH3) மீத்தேனிலுள்ள ஒரு ஹைட்ரஜன் அணு இடம் பெயர்வதால் ஏற்படும் மூலக்கூறு. இது பல்வேறு கூட்டுப் பொருள்களில் ஒர் அங்கமாக உள்ளது

methyl acetone : (வேதி.) மெத்தில் அசிட்டோன்: மெத்தில் அச்சிட்டேட்டும், அசிட்டோனும் கலந்த ஒரு கலவை ரப்பரின் கரைப்பானாகப் பயன்படுகிறது

metric gear : (பட்.) மெட்ரிக் பல்லிணை : மெட்ரிக் அளவு வடிவமைக்கப் முறைக்கிணங்க பட்ட பல்லிணை

metric plug : (தானி.) மெட்ரிக் செருகி : மெட்ரிக் தர அளவுகளுக் கேற்ப திருகிழைகளைக் கொண்ட ஒரு சுடர்ப் பொறிச் செருகி

metric system : (பொறி.) மெட்ரிக் முறை : பத்தின் மடங்குகளின் அடிப்படையில் அமைந்த நிறுத்தல், நீட்டல், முகத்தல் ஆளவைகள். முதலில் இம்முறை ஃபிரா