பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
443

அந்துப்பூச்சி அழிப்பானாகவும் பயன்படுகிறது

nasa : (விண்) நாசா : தேசிய வான்பயண மற்றும் விண்வெளி முகவாண்மை. இது அமெரிக்காவில் உள்ளது

national electrical code : (மின்.) தேசிய மின்விதித் தொகுப்பு : மின் கடத்திகள், மின் சாதனங்கள், மின் எந்திரங்கள் போன்றவற்றை நிறுவும்போது மின்னியல் வல்லு நர்களுக்கு வழி காட்டியாகவுள்ள விதிகளின் தொகுப்பு

native copper : (கனிம.) தன்னியல்புத் தாமிரம் : மிக உயர்ந்த தரமான செம்பு. இது உலோக வடிவிலேயே தோண்டியெடுக்கப்படுகிறது. மின்னியல் நோக்கங்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது

natural : (அச்சு.) இயற்கை வண்ணம் : சிறிதளவு செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட மரக்கூழின் இயற்கை வண்ணத்திலிருந்து கிடைக்கும் காகிதத்தின் வண்ணம்

natural cement : (பொறி.) இயற்கை சிமென்ட் : சீமைச் சிமென்ட் (போர்ட்லண்ட் சிமென்ட்) எனப்படும் சீமைக்காரையிலிருந்து வேறுபட்டது. இது விரைவாக இறுகிக் கொள்ளும்; விலை மலிவானது; வெளிர் நிறமுடையது; வலிமை குன்றியது

natural frequency : (இயற்.) இயல்பு அலைவெண் : ஒரு குறிப்பிட்ட நீளமுடைய ஊசல், ஒரு நிமிடத்திற்கு ஒரு குறிப்பிட்ட (இயல்பான) அலைவெண்ணுடன் ஊசலாடும் போக்குடையதாத இருக்கும். அதனை இழுத்து, இன்னும் அதிக வேகமாக ஊசலாடும் படி செய்யலாம். அதே போன்று, ஒரு கொண்மியும் மின்கம்பிச் சுருளும் உடைய குறிப்பிட்ட ஒரு மின் சுற்றுவழியில் மின்னோட்டமான ஒர் இயல்பான அலைவெண்ணெக் கொண்டிருக்கும்

natural gas : இயற்கை எரிவாயு : பூமியில், குறிப்பாக எண்ணெய்ப் படிவுகள் உள்ள மண்டலங்களில் கிடைக்கும் எரிவாயு. இது மிக நேர்த்தியான எரி வாயுவாகும். இது வீடுகளிலும், தொழில் துறையிலும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது

natural resins : (வேதி. குழைம.) இயற்கைப் பிசின் : தாவரங்களிலிருந்து சுரக்கும் திடப்பொருள்; எளிதில் உடையக்கூடியது; கண் ணாடி போல் பளபளப்புடையது. கிளிஞ்சலின் தன்மையுடையது; தண்ணிரில் கரையாதது; பல்வேறு உருகுந்திறன் கொண்டது

natural selection : இயள்தேர்வு விளைவுக் கோட்பாடு : மரபுப் பண்புகளும், போட்டியின் விளைவான தகுதி நேர்வுப் பண்புகளும் சேர்ந்த இயற்கை இயல் வள்ர்ச்சித் தேர்வுக் கோட்பாடு. விலங்குகளின் குட்டிகள் அல்லது தாவரங்களின் கன்றுகள், தம் பெற்றோரிடமிருந்து சற்றே வேறுபட்டனவாக இருக்கும். தங்கள் சூழலுக் கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளக்கூடிய குட்டிகளும், கன்றுகளும் உயிர் வாழ்ந்து இனப் பெருக்கம் செய்கின்றன. அவ்வாறு தகவமைத்துக் கொள்ள இயலாதவை மாண்டு போய்விடுகின்றன; அவை இனப்பெருக்கம் செய்வதில்லை. இதனால், சூழலுக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் இவற்றின் வடிவமும் இயல்பும் மாறிவிடுகின்றன இதுவே இயல் தேர்வு விளைவு' என்பதாகும்

nautical measure : கடல் அளவை : 6080.20 அடி = 1 கடல் மைல் அல்லது அலகு

3 கடல் மைல் = 1 லீக்

60 கடல் மைல் = 1 பாகை (பூமத்திய ரேகையில்)