பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
463

outside loop : (வானூ) புறக்கரண வளைவு : விமானம் இயல்பாகப் பறப்பதிலிருந்து கழுகுப் பாய்ச்சல், தலைகீழாகப் பறத்தல், உயரே ஏறுதல், மீண்டும் இயல்பான நிலைக்கு வருதல் போன்று கரண வளைவுகள் செய்தல். இவ்வாறு செய்யும்போது விமானி பறக்கும் பாதையினின்றும் புறத்தே இருப்பார்

oval : (கணி.) நீள் உருளை வடிவம்: முட்டை வடிவ உருவம் நீள் உருளை வடிவம். இதன் வளைவுகளின் முனைகள் சமமின்றி இருக்கும்

over-all length: (வானூ) முழு நீளம் : விமானத்தில் செலுத்தி, வால் பகுதி உள்ளடங்கலாக முன் புறத்திலிருந்து பின்புறக் கடைசி வரையிலான முழு நீளம்

over hanging pulley : தொங்கு கப்பி : தொங்கலாக இருக்கிற ஒரு சுழல் தண்டில் உருண்டு செல்லும் ஒரு கப்பி. இதில் ஒரு பக்கத்தில் ஆட்டுமே ஓர் ஆதாரத் தாங்கி இருக்கும்

overhaul : (எந்.) எந்திரப் பகுப்பாய்வு : ஓர் எந்திரத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து ஆராய்ந்து செப்பனிட்டு மீண்டும் ஒருங்கிணைத்தல்

overhead cost : அலுவலகச் செலவுகள் : வாடகை,வட்டி முதலீடு, பராமரிப்பு, தேய்மானம்போன்ற செயலாட்சிக்கான செலவினங்களின் தொகை. இது தொழிலாளர்களுக்கும் மூலப் பொருட்களுக்கும் ஆகும் செலவைவிடக் கூடுதலான செலவாகும்

overhead shafting : (பட்) தொங்கு சுழல் தண்டு : முகட்டில் தொங்கும் இடைச்சுழல் தண்டு. இதிலிருந்து எந்திரங்களுக்கு விசை அனுப்பப்படுகிறது

overhead-valve motor; (தானி) மேல் ஓரதர் மின்னோடி : ஓரதர்கள் அனைத்தும் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் மின்னோடி

overheating : (தானி) மிகைச் சூடாக்கம்: பாதுகாப்பாக இயங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகமாக ஓர் எஞ்சின் சூடாதல். இது பொதுவாக் குளிர்விக்கும் முறையில் ஏற்பட்டுள்ள கோளாறு அல்லது குறைவான மசகிடல் காரணமாக ஏற்படலாம்

overload : (மின்) மிகை மின் சுமை : ஒரு மின்னியல் சாதனத்தின் வழியாக இயல்பான அள வுக்கு அதிகமாக மின்னோட்டம் பாய்தல்

overload capacity: (மின்) மிகைச் சுமைத்திறன் : ஓர் எந்திரம் அல்லது மின் சுற்றுவழி. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தனக்குக் குறிக்கப்பட்ட திறனளவுக்கு மேற்பட்டு இயங்கக்கூடிய திறன்

overload switch : (மின்) மிகை மின் சுமைவிசை : ஒரு மின் சுற்று வழியில் மிகையான மின்விசை பாயுமானால் மின்சுற்று வழியைத் தானாகவே முறித்துவிடும் விசை

overmodulation : (மின்) மிகை அலைமாற்றம்: : ஒரு தொடர் ஊர்தி அலையின் வீச்சுக்கு மிகுதியாக அலை மாற்றி அலை அதிகமாகி ஊர்தி அலையின் ஆற்றலை பூச்சியத்திற்குக் குறைக்கின்ற ஒரு நிலை

overrunning clutch : (தானி) விஞ்சியோடும் ஊடிணைப்பி : உள்ளும் புறமும் வளையங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஊடிணைப்பி. உள் ஊடிணைப்பில் பல முக்கோண வடிவக் காடிகள் வெட்டப்பட்டிருக்கும். அவற்றில் கடின மான எஃகு உருளைகள் செருகப்