பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

481

pickling: (வார்.) வார்ப்புத் துப்புரவாக்கம்:வார்ப்படங்களிலிருந்து மணல் போன்ற அயல் பொருள்களை நீக்கித் துப்புரவாக்கும் முறை

picric acid: பிக்ரிக் அமிலம் :

 :ஒரே உப்பு மூலமுடைய அமிலம். பெனால்-சல் போனிக் அமிலத்தை நைட்ரிக் அமிலத்துடன் கலந்து தயாரிக்கப்படுகிறது. இது மஞ்சள் படிக வடிவில் இருக்கும். வெடி பொருட்கள் தயாரிப்பதற்கும், சாயத் தொழிலிலும் பயன்படுகிறது

pictorial : uடமிகு இதழ் : படங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படுகிற செய்திகள் மிகுதியாகக் கொண்ட பத்திரிகை

picture element : (மின்.) படப் புள்ளி : ஒரு காட்சியின் தோற்றம் பற்றிய தகவலைக் கொண்டுள்ள, கறுப்பு முதல் வெண்மை வரையிலான பல்வேறு செறிவளவுடைய சிறு பகுதிகள் அல்லது புள்ளிகள்

picture frequency : (மின்.) பட அலைவெண் : தொலைக்காட்சியில் ஒரு வினாடி நேரத்தில் அலகிடப்படும் முழுப்படங்களின் எண்ணிக்கை

picture information : (மின்.) படத்தகவல் : தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியினால் பதிவு செய்யப்பட்டு, தொலைக்காட்சி ஒளிபரப்பீட்டுக் கருவியை அலை மாற்றம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் படத்தகவல்

picture mould: (க.க.) படச் சட்டம் : சுவரில் படங்களைத் தொங்கவிடுவதற்கான ஒரு வார்ப்படச் சட்டம்

picture noise : படஒலி: ஒளி வாங்கிப் பெட்டிகளில் படங்கள் தாறுமாறாக ஏற்படவும், ஒளிப் புள்ளிகள் உண்டாகவும் செய்யக் கூடிய சைகைக் குறுக்கீடுகள்

picture signal : படச் சைகை: தொலைக்காட்சியில் ஒளிப்படங்களை உருவாக்கும் மின் தூண்டல்கள்

picture tube : படக் குழல் : தொலைக்காட்சிப் பெட்டியில், ஒளிக்கற்றைச் செறிவு மாற்றத்தின் மூலம் உருக்காட்சிகளை உண்டாக்கும் எதிர்மின் கதிர்வகைக் குழல்

piece work : (அச்சு.) துண்டு வேலை : நேரக்கணக்கில் அல்லாமல் அளவுக்கேற்பக் கூலி பெறும் வேலை

pier : (க.க.) அலை தாங்கி :இரேவு; அலை இடைகரை பாலந்தாங்கி

pier glass : (க.க.)  : நிலைக்கண்ணாடி : முற்காலக் கட்டுமானங்களில் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்டுள்ள நிலைக்கண்ணாடி

piezoelectricity : (மின்.) அழுத்த மின்விசை : சில படிகங்களின் மீது குறிப்பிட்ட திசைகளில் அழுத்தம் செலுத்துவதன் மூலம் மின்னேற்றம் உண்டாக்குதல்

piezometer : அழுத்தமானி : பாய் மங்கள் அல்லது திரவங்கள் மீதான அழுத்தத்தை அளவிடுவதற்கான ஒரு அளவு கருவி

pig : (உலோ.) இரும்புப் பாலம் : உலையிலிருந்து எடுக்கப்பட்ட நீள் இரும்புப் பாளம்

pigeon-hole: புறாமாடம் : கடிதங்கள் முதலியவற்றை பிரித்து அடுக்கி வைப்பதற்கான புறாக் கூட்டறை

pig iron : (உலோ.) தேனிரும்பு : உருக்கும் உலையிலிருந்து வாணி