51
பொறியின் சகடத்தின் முன்பகுதி யிலுள்ள செங்குத்தான தகடு.
apse : (க.க.) பலி பீடக் கவிகை : திருக்கோவில் கவிகைக் கூரையுள்ள அரைவட்ட ஒதுக்கிடம்.
apseline (இயற்.) சூரியச் சேணிலைக் கோடு: சூரியனின் நெடுஞ் சேய்மையில் அல்லது மிக அண்மையில் அந்தக் கிரகத்தின் இடத்தைக் குறிக்கும் கோடு.
aqua ammonia : (வேதி) நீர்ம அம்மோனியா: NH4OH கரைசல். அம்மோனியம் ஹைடிராக்சைடு பொதுவாக அம்மோனியா நீர் என அழைக்கப்படுகிறது. வீடு களில் துப்புரவுப் பொருளாகப் பயன்படுத்தப் படுகிறது.
aqua dag: (வேதி) நீரியல் மிதவை: நீரிலுள்ள காரீயகத்தின் கரைநிலையுடைய மிதவைப் பொருள்.
aquamarine : (வண்) கடல் வண்ணம் : வெளிர் ஊதா நிறம் முதல் வெளிர்ப்பச்சை நிறம்வரை.
aqueduct : கட்டுக் கால்வாய் : உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய்.
aqueous : நீர்த்த.
arabesque : (க.க. ) அராபிய வண்ணச் சித்திர வேலை : முன்படைப்பியலில் தாவரங்கள்,துணிகள்,மனிதர்-விலங்கு உருவங் கள் போன்ற விசித்திர வேலைப்பாடு களைக் கொண்ட ஒரு செதுக்கு அலங்காரம்.அராபிய முறையில் செய்யப்பட்ட வண்ணச் சித்திர வேலைப் பாடு.
Arabic numbers : (கணி) அரபு எண்மானம் : தற்காலத்தில் பயன் படுத்தப்பட்டுவரும் 1,2,3,4,5,6,7, 8,9,0 என்ற இலக்கமுறை. இது I,II,III,IV என்ற ரோமானிய இலக்கமுறைக்கு மாறுபட்டது.
arbor : (க.க.) பொறி முதன்மை ஆதாரம் : (1) தொடர்பற்ற மின்னல் வேலை; நங்கூரம்; மூலைப் பகுதி.
(2) சக்கரம் சுழலும் இருசு அல் லது கதிர்.
arbor press : (எந்) பொறி முதன்மை ஆதார அழுத்தக் கருவி; பொறி முதன்மை ஆதாரத்தை அலலது தண்டினை ஒரு பொருளின் துளையில் அல்லது துவாரத்தில் வைத்து அழுத்துவதற்குப் பயன்படும் சாதனம். இது அந்தப் பொருளைக் கடைசல் கருவியில் பொருத்தவும் பணிமுடிந்தபின் எடுக்கவும் உதவும்.
arcback : ( மின்.) பின்னோக்கிப் பாயும் சுடர் : ஓர் இரு முனையத்