பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

528

resistance welder : தடைப் பற்ற வைப்பு எந்திரம் : தடையமைப்பு கொண்ட ஒரு பற்றவைப்பு எந்திரம்

resistance welding: தடைப்பற்ற வைப்பு : மின்னோட்டம் பாய்வதைத் தடுப்பதன் மூலம் உண்டாகும் வெப்பத்தின் வாயிலாக அழுத்தம் ஏற்படுத்திப் பற்றவைக்கும் முறை

resistance wire: (மின்.) தடைக் கம்பி : மின் தடையுண்டாக்கும் நிக்கல் - குரோமியம் மின்தடைக் கம்பி

resisting moment : (பொறி.) சுழற்சித்தடை : எதிரெதிராக இயங்கும் இரண்டு உள்முக விசைகள் கொண்ட எந்திரத்தின் பகுதியில் விறைப்புச்சூழல் திறன் மூலம் சுழற்சிக்குத் தடை உண்டாக்குதல்

resisting shear : (பொறி.) தடைத் துணிப்பு : ஓர் எந்திரப் பகுதியின் செங்குத்துத் துணிப்புக்குச் சமமான எதிரெதிர் உள்முக விசை

resistivity : (மின்.) தடைத் திறன் : ஒரு பொருளின் ஒரு கன செ.மீ. அளவு மின்னோட்டம் பாய்வதற்கு அளிக்கும் உதிர்ப்பாற்றல். இது ஓம் அலகில் குறிக்கப்படுகிறது

resistor : (மின்) தடுப்பான் : மின்னோட்டம் பாய்வதைத் தடுக்கும் தடையுள்ள ஓர் உறுப்பு

resolution : படத்தெளிவு : தொலைக்காட்சிப் படத்தின் தெளிவுத் திறன்

resolution of forces : (இயற்.) விசைப் பிரிவீடு : இரண்டு அல்லது அவற்றுக் மேற்பட்ட விசைகளின் பிரிவீடு. இவற்றின் கூட்டுவிளைவானது, ஒரு குறிப்பிட்ட விசைக்குச் சமமாக இருக்கும்

resonance: (மின்.) ஒத்திசைவு : ஒரு மின்சுற்று வழியில் தூண்டு எதிர் வினையினை மட்டுப்படுத்தி, மின்னோட்டம் பாய்வதற்கு ஓர் தடையை மட்டுமே விட்டுச் செல்லும் நிலை

resonant frequancy : (மின்.) எதிரொலி அலைவெண் : இயைவிப்பு செய்யப்பட்ட மின்சுற்றுவழி ஊசலாடுகிற அலைவெண்

resonant line : (மின்.) எதிரொலிப் பாதை: நிலையான அழுத்த அலைகளையும், மின்னோட்ட அலைகளையும் கொண்டிருக்கிற ஒரு பாதை

retard : இயக்கத் தடை : அலை இயக்கத்திற்குத் தடை ஏற்படுத்துதல்

restoration : மீட்டாக்கம் : ஒவியங்கள், கட்டிடங்கள், மரபு வழியுற்ற உயிர்-தாவரவகை ஆகியவற்றை மூலவடிவுக்கு மறு புனைவாக்கம் செய்தல்

retaining walls: (க.க. ) அணை சுவர்: கரை உடைந்து விடாமல் காக்கும் சுவர்

retard:(தானி.) வேகங்குறை: அலை இயக்கத்திற்கு தடங்கலாக இருத்தல், கோள் இயக்கத்தைத் தடுத்து மந்தமாக்குதல்

retardation: வேகக்குறைப்பு : இயல்பான அல்லது கணக்கிட்ட நேரத்திற்குப் பின்பு நிகழ்வு

retardation of tide / retardation of high water: நீரேற்ற இடைவெளி: முழு நிலவுக்கும் கடல் நீரேற்றத்திற்கும் உள்ள இடைவெளி

retentivity: (மின்.) காந்த இருத்தி வைப்புத் திறன் : ஒரு பொருளிலிருந்து காந்த ஆற்றல் நீக்கப்பட்ட பின்பு அதில் காந்த