பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
545

(2) குறியீட்டு முறையின் அடிப்படையிலான அளவுத் திட்டம் (3) உலோகக் கலையில் அளவுப் படிநிரை (4) உலோகக் கலையில் வார்ப்படத்தின் புறப்பூச்சு

scaled drawing: படிவிழுக்காட்டு வரைபடம் : ஒரு பணியினை சிறிய அளவு வீதங்களில் வரைந்த வரைபடம்

scale height : (விண்.) நிரை உயரம் : வாயு மண்டலத்தில் எந்த ஒரு நிலையிலும் அடர்த்திக்கும் வெப்ப நிலைக்குமிடையிலான தொடர்பினை அளவிடும் அலகு

scalene (கணி.) ஒவ்வாச்சிறை முக்கோணம் : எந்த இரண்டு பக்கங்களும் சமமாக இல்லாத ஒரு முக்கோணம்

முக்கோணம்(படம்)

scalene cone : அடிச்சாய்வு கூம்பு : அச்சு அடியை நோக்கிச் சாய்ந்துள்ள கூம்பு

scalene cylinder : அடிச்சாய்வு நீள் உருளை: அச்சு அடியை நோக்கிச் சாய்ந்துள்ள நீர் உருளை

Scalpel: (மருந்.) அறுவைக்கத்தி: அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கத்தி

scalper : (மருந்.) அறுவை அரம் : அறுவை மருத்துவர் பயன்படுத்தும் அரம்

Scanmony - (மருத்) பேதி மருந்துப்பிசின்: கடும் பேதி மருந்தாகப் பயன்படும் பிசின்

scan : (மின்.) நுண்ணாய்வு : தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி நிழல், ஒளிக் கூறுகளை நுண்ணாய்வு செய்து தனித் தனியே பகுத்தல்

Scanning : தொலை நுண்ணாய்வு: தொலைக்காட்சியில் தொலைக்கனுப்பும்படி நிழல் - ஒளிக்கூறுகளைத் தனித்தனியாகப் பிரித்தெடுத்து இடமும் வலமும் மேலும் கீழுமாக கடும் வேகத்தில் செலுத்தி உருகாட்சி தோன்றும்படி செய்தல்

scanning line : நுண்ணாய்வுக் கோடு : தொலைக் காட்சியில் தொலைவுக்கனுப்பப்படும் படத்தின் இடம் வலம் செல்லும் ஒரு கோடு

scantling : (க.க) மரப்பட்டியல் :' 13செ.மீ. கனத்திற்குக் குறைவான அகலத்திட்டங்களையுடைய மரப்பட்டியல்

scarehead : பரபரப்புத் தலைப்பு : செய்தித் தாள்களில் பரபரப்பூட்டக் கூடிய கொட்டை எழுத்துச் செய்தித் தலைப்பு

scarification : கிளறல் : சாலையைப் பழுது பார்ப்பதற்காக மேலீடாகக் கிளறிவிடுதல்

scarfing : சமநிலைப் பொருத்தீடு : மரம், தோல், உலோகம் முதலியவற்றில் வாய்களைச் சமநிலைப்டுத்தி ஒன்றாக இணைத்துப் பொருத்துதல்

scatter propagation : (மின்.) பரவல் அனுப்பீடு : வானொலி அலைகளை அடிவானத்திற்கு அப்பால் பரவலாக அனுப்பீடு செய்தல்

schematic: (மின். ) விளக்க வரைபடம் : மின் இணைப்புகளையும் பல்வேறு உறுப்புகளையும் காட்டும் மின்னியல் அல்லது மின்னணுவியல் சுற்றுவழியின் வரைபடம்

sciagram : (இயற்.) ஊடுகதிர் ஒளிப்படம்: உட்புறம் தெரியும்படி எடுக்கப்பட்ட செங்குத்து வெட்டு ஒளிப்படம்