547
பயன்படுத்தப்படும் கூர்முனையுடைய எஃகுத் தமரூசி
கீற்றத் தமரூசி (படம்)
scratch brush : கீற்றுத் தூரிகை : உலோகப் பரப்புகளிலிருந்து அயல் பொருட்களை அகற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பியிலான துரிகை
Scratch coat : (க.க.) கீற்றுப் பூச்சு : அடுத்துவரும் பூச்சுகளுக்குப் பிடிப்பு ஏற்படுத்துவதற்காகக் கீற்றுக் கீற்றாகப் பூசப்படும் முதற்பூச்சு
Screen : (அச்சு.) கண்ணாடித் திரை : ஒளி, நிழல் மாறுபாட்டளவைக் காட்டுகின்ற நுண்பதிவுப் படச் செதுக்ககோவிய அச்சடிப்பில் பயன்படுத்தப்படும் வரியிட்ட கண்ணாடித் திரை
screenings : சல்லடைக் கழிப்பு : சிப்பங்கட்டவும் அட்டை போடவும் பயன்படும் மலிவான காகிதம்
screen : திரை : மறைப்புத் திரை, மின்தடை காப்பு, காட்சிப் படத்திரை; தொலைக்காட்சித் திரை
screen grid : (மின்.) திரைவலை: ஓர் எலெக்ட்ரான் குழலில் கட்டுப்பாட்டு வலைக்கும் இடை மின் முனை கொண்மத்திற்குமிடையிலான இரண்டாவது வலை
screw : (எந்.) திருகாணி : மேல்வரி அல்லது அகல்வரிச்சுற்றுடைய திருகுச் சுரை
screw adjusting caliper: (எந்.) திருகு விட்டமானி: திருகு அமைப்புடைய வட்டமானி. இதில் நுட்பமானச் சீரமைவுக்கேற்ற வில்சுருள் அமைந்த திருகாணி அமைப்பு உள்ளது
திருகு விட்டமானி (படம்)
screw chuck : (மர.வே.) திருகு கவ்வி : ஒரு மரச்சுழற்சிக் கடைசல் கருவிக்கான ஒரு கவ்வி. இதில் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு திருகு இயக்க மையமாகச் செயற்படுகிறது
screw cuttlng lathe : (எந்.) திருகுவரிக் கடைசல் எந்திரம் : திருகாணி வரிகளை வெட்டுவதற்கேற்ற கடைசல் எந்திரம்
screw driver : திருப்புளி : திருகாணிகளின் கொண்டையிலுள்ள வரிப்பள்ளத்தில் நுனியை வைத்துத் திருப்புவதற்கான எஃகுக் கருவி
திருப்புளி (படம்)
screw eye : (எந்.) திருகு கண் : கொண்டை முற்றிலும் அடைப்புடைய ஒரு வளையமாக அல்லது வட்டமாக அமைந்துள்ள ஒரு மரத்திருகு
screw jack : (பொறி.) திருகு கோல்: வண்டிச்சக்கர இருசினைத் தூக்குவதற்கான திருகு நிலை உதை கோலமைவு
screw plate : (எந்.) திருகு வெட்டுத் தகடு: திருகு புரிகளை வெட்டுவதற்கான துளைகளையுடைய எஃகுத் தகடு
திருகு வெட்டுத் தகடு(படம்)
screw stock : (உலோ.) திருகு உலோகம் : சிறு திருகுகளும், திருகு எந்திரங்களில் செய்யப்படும் உறுப்புகளுக்கும் பயன்படும் மென்மையான எஃகு
screw threads : (எந்.)திருகுபுரி : திருகாணிச் சுரையின் உட்சுற்றுத் திருகுபுரி
scribe awl or scriber :வரை