571
லும் தொழில்களிலும் பயன்படுத்தப்படும் பல்வேறு வேதியியல் கூட்டுப் பொருள்களைக் குறிக்கும். உவர்க்காரம் உப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. கண்ணாடித் தயாரிப்பிலும் தூய்மைப்படுத்தும் பொருளாகவும் சோடியம் கார்போனேட் பயன்படுகிறது
soda pulp: உவர்க்காரக் கூழ்: மை ஒட்டுத்தாள், பருமனான புத்தகத் தாள்கள் முதலியவற்றுக்கு உவர்க்கார முறையில் தயாரிக்கப்படும் ஒருவகை மரக்கூழ்
soda-water mixture : (எந்.) உவர்க்கார நீர்க்கலவை : உப்பு உவர்க்காரமும் நீரும் கலந்த ஒரு கரைசல். இதனுடன் மெல்லிய சோப்பு அல்லது பன்றிக்கொழுப்பு எண்ணெய் கலந்து மசகுத்தன்மை அதிகரிக்கப்படுகிறது. கடைசல், அரவை எந்திரங்களில் குளிர்விக்கும் பொருளாகவும், மசகுப்பொருளாகவும் பயன்படுகிறது
sodium chloride: (வேதி.) சோடியம் குளோரைட் (NaCl): சாதாரண உப்பு அல்லது பாறை உப்பு
SOF : திரைப்பட ஒலி : திரைப்படத்தில் இணைக்கப்படும் ஒலி
soffit : (க.க.) அடிச்சிற்பம் : வளைவி. படிக்கட்டு, விட்டம் ஆகியவற்றின் அடியிலுள்ள சிற்பம்
soft : (வேதி.) மசிவுப்பொருள் : குறைந்த வெப்பநிலைகளில் உருகி இளகும் தன்மையுள்ள பளிங்குப் பொருள் அல்லது களி மண்
soft coal : மட்கரி : நிலக்கீல் தரும் கற்கரி வகை
soft brass: (உலோ.) மென்பித்தளை: கம்பியாக இழுக்கத்தக்கதாகப் பதப்படுத்தப்பட்ட பித்தளை
soft coal: மட்கரி: நிலக்கீல் தரும் கற்கரி வகை
soft corn: தொய்வாணி
soft landing: (விண்.) மெல்லத் தரையிறங்கல்: சந்திரன் போன்ற பிற கோளங்களில் தரையிறங்கும் ஊர்திகள் மோதி உடைந்து விடாத வகையில் மிகக் குறைந்த வேகத்தில் தரையிறங்குதல்
soft solder: மென்பற்றாசு: இளங்கொதி நிலைப்பற்றாசு. வெள்ளியத் தகடு பிற உலோகத் தகடுகள் போன்ற எளிதில் உருகும் உலோகங்களைப் பற்றவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருத்துப் பொருள். இது பாதி வெள்ளியமும், பாதி ஈயமும் கலந்ததாகவோ 90% வெள்ளியமும் 10% ஈயமும் கலந்ததாகவோ இருக்கும். இதனுடன் சிறிதளவு ஆன்டிமனியும் சேர்ப்பதுண்டு
soft steel (பொறி.) மென் எஃகு: கார்பன் அளவு குறைவாகக் கலந்துள்ள எஃகு. இது வளைவதில்லை
soft stone: இரும்பு
soft tube : (மின்.) நெகிழ் குழல் : ஒரு வாயுக்குழல்
soft water : மென்னீர்: கார்பொனேட், சுண்ணாம்பு சல்ஃபேட்டு இல்லாத நீர்
softwood : ஊசியிலை மரம்: ஊசியிலைக் காட்டு மரங்கள். இவை ஊசி அல்லது செதிர் போன்ற இலைகளை உடையவை. இதனை மென்மரம் என்பர். மென்மரம் என்பது மரத்தின் மென்மையைக் குறிப்பதில்லை
soil pipe: (கம்மி.)கழிநீர்க் குழாய்: வீடுகளில் கழிநீர் செல்வதற்காகப் பய்ன்படுத்தப்படும் 1.5மீட்டர் நீளமுள்ள வார்ப்பு இரும்புக் குழாய்