பக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

577

spectrum: (இயற்.) நிறமாலை: சூரிய ஒளியை அதில் அடங்கியுள்ள ஏழுவண்ணங்களாகப் பகுக்கலாம். இந்த ஏழு வண்ணங்களையும் வானவில் வண்ணங்களில் காணலாம். இந்த வண்ணங்களின் தொகுதி நிறமாலை எனப்படும்

spectrum analysis: நிறமாலைப் பகுப்பு

speculum metal: (உலோ.) பளிங்கு உலோகம்: தொலை நோக்காடி உருப்பளிங்கின் உருநிழல் காட்டும் செம்பும் வெள்ளியமும் கலந்த கலவை

speed: (இயற்.) வேகவீதம்: ஒரு பொருள் விரைந்து செல்லும் வேகத்தின் வீதம்

speed control: வேகக் கட்டுப் பாடு: தொலைக்காட்சிப் பெட்டியில் படங்களை கிடைமட்டத்திலும் செங்குத்தாகவும் நிலைப்படுத்தி ஒழுங்குபடுத்துவதற்கான சாதனம்

speed of sound: (விண்.) ஒலி வேகம்: ஒலி பயணம் செய்யும் வேகவீதம். சுற்றுப்புற ஊடகங்களின் நிலையான வெப்பநிலையைப் பொறுத்து ஒலியின் வேகம் மாறுபடுகிறது. ஒரு செந்நிற நாளில் ஒலியின் வேகம் வினாடிக்கு 1108 அடி அல்லது மணிக்கு 756 மைல். கடல் மட்டத்தில் 59°F வெப்ப நிலையைக் கொண்டது ஒரு செந்திற நாளாகும்

speedometer: (தானி.) வேக மானி: வேகவிதத்தை ஒரு மணிக்கு இத்தனை கி.மீ. என்ற வீதத்தில் பதிவு செய்து காட்டும் ஒரு கருவி

speed regulation : (மின்.) வேக ஒழுங்குமுறை : ஒரு சுமையை ஏற்றும்போது தனது வேகத்தைப் பேணிக்கொள்வதற்கு ஒரு மின்னோடிக்குள்ள திறன்

spelter: (உலோ.) துத்தநாகம் : வாணிக வழக்கில் 'ஸ்பெல்ட்டர்’ என்று அழைக்கப்படும் உலோகம் துத்தநாகமும் செம்பும் சம அளவில் கலந்த உலோகக் கலவையையும் இது குறிக்கும்

sphalerit: (கணி.) நாகக் கனிமம்: 'ஸ்பாலிரைட்' எனப்படும் துத்த நாகத்தின் மிக முக்கியமான தாதுப் பொருள்

sphere: கோளம்: (நில.) பந்து வடிவப் பொருள். இதன் ஒவ்வொரு பகுதியும் அதன் மையத்திலிருந்து சம் தூரத்தில் இருக்கும். பரப்பு : விட்டத்தின் இருமடி X 3. 1416 கன அளவு : விட்டத்தின் மும்மடி x 0.5236

sphere gap : (மின்.) கோள இடைவெளி : கோள வடிவ மின் முனைகளைப் பயன்படுத்தும் மின் சுடர் இடைவெளி

spheroid : நெட்டுருளை: நீள்வட்டச் சுழற்சி வடிவம்

spheroidzing : (உலோ.) வெப்பக் குளிர்விப்பு : இரும்பை ஆதாரமாகக் கொண்ட உலோகக் கலவைகளை முட்டுபதன் வெப்ப நிலையை விடச் சற்றுக் குறை வான வெப்ப நிலையில் அதிக நேரம் சூடாக்கி, பின்னர் மெதுவாகக் குளிர்ச்சியடையும்படி செய்தல்

sphero meter: நுண்விட்டமானி

sphygmogram : (மருத்.) நாடி அதிர்வுப் பதிவு: நாடித்துடிப் பினைப் பதிவு செய்தல்

sphygmograph : (மருத்.) நாடிப் பதிவு மானி: நாடி ஆதிர் வினைப் பதிவு செய்யும் கருவி