பக்கம்:அறிவியல் அகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

tor

440

tra


tortoise - ஆமை: நிலத்தில் ஊர்வது. பல்லில்லா முதுகெலும்பி, நகமுள்ள புறத்துறுப்புகள். மாட வடிவ ஓட்டில் உடல் அமைந்துள்ளது. தலையையும் புறத்துறுப்புகளையும் பாதுகாப்பிற்காகக் கூட்டின் உள்ளே இழுத்து வெளியே நீட்ட வல்லது. (உயி)

total internal reflection - முழு அகமறிப்பு: படுகோணம் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாக இருக்கும்போது உண்டாகும் மறிப்பு முழு அகமறிப்பாகும். இது ஏற்பட 1.முதலில் ஒளிக்கதிர் அடர்மிகு ஊடகத்தின் வழியாகவும் 2. அதன் படுகோணம் அடர்மிகு ஊடகத்தின் மாறுதானக் கோணத்தைவிடப் பெரிதாகவும் அமைய வேண்டும். இம்மறிப்பினால் கானல் காட்சி, வைரம் மின்னுதல் முதலிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மறிப்பு - எதிரொளிப்பு (இய)

toxicant - நச்சுப்பொருள்: நச்சுத் தன்மை உண்டாக்கும் வேதிப் பொருள். (வேதி) toxicology - நஞ்சியல்: நஞ்சின் இயல்பு அதன் விளைவுகள் ஆகியவை பற்றி ஆராயுந்துறை. வேதிப்பொருள்களின் ஊறுதரும் விளைவுகளைப் பண்பறி நிலை யிலும் அளவறி நிலையிலும் பகுத்தறிவது. மருத்துவத்துறை சார்ந்தது. (உயி)

toxin- நஞ்சு: குச்சியம், பூஞ்சை முதலிய நோயூக்கிகளால் உண்டாக்கப்படும் வேதிப்பொருள். உயிர்க்கொல்லிகளாகச் செயற்கையில் தயாரிக்கப்படுவது. (உயி)

trace element - சுவடறிதனிமம்: நுண் தனிமம். நுண்ணுாட்டம் சிறிய அளவுள்ள தனிமம். ஒர் உயிரி நலமுடன் இருக்கத் தேவையான தனிமம். அதாவது, உட்கொள்ளும் உணவில் சில பகுதிகளே இருக்கும். எ-டு தனிமம் மாலிப்டினத்திலுள்ள கூட் டுப்பொருள் நைட்ரேட் ரிடக்டேஸ், தாவர வேர்களில் நைட்ரேட்டை நைட்ரைட்டாக ஒடுக்குதல். பா. macronutrient. (உயி)

tracer-சுவடறிவி: ஒரு தனிமத்தின் ஓரிமம். விரவல் முதலிய இயற்பியல் முறைகளையும் வேதி வினைகளையும் ஆராயப்பயன் படுவது. (வேதி)

trachea - மூச்சுக்குழல்: வெளிக்காற்றை உட்செலுத்தும் குழல். இஃது உயிர்த்தலுக்கு இன்றியமையாதது. (உயி)

tracheids - நுண்மரக்குழாய்கள்: நுண் கடத்திகள். பெரணிகள், உறையில் விதையில்லாத் தாவரங்கள் ஆகியவற்றின் மரத் திசுவை உண்டாக்குபவை. உணவு சேமித்தல், நீரைக்கடத்தல், தாவர உடலுக்குத் தாங்குதல் அளித்தல் ஆகியவை இவற்றின் வேலைகள். (உயி)

tracing paper - சுவடுவரைதாள்: மூலப்படத்தைப் படி எடுக்கப் பயன்படும் ஒளி ஊடுருவக்கூடிய தாள். (வேதி)

tracking and observation - வழி