பக்கம்:அறிவியல் அகராதி.pdf/469

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

who

467

Win


முறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. வெள்ளை வண்ணக் குழைவிலும் இதன் நிறமி பயன்படுவது. (வேதி)

whooping cough - சுக்குவான்: குழந்தைகளுக்குரிய தொற்று நோய் இருமலும் முச்சிழுப்பும் அதிகமிருக்கும். இதற்குத் தற்பொழுது தடுப்பூசி உள்ளது. (உயி)

whooping crane - இரையும் நாரை: வட அமெரிக்கப் பறவை. அழியும் நிலையில் உள்ளது. இதன் கொம்பிரைச்சல் குறிப்பிடத்தக்கது. உயிரியலார் இதன் வகைகளைக் காப்பாற்ற முயன்று வருகின்றனர். (உயி)

wide angle lens - அகல்கோண வில்லை: இது குறுகிய குவியத் தொலைவுடைய ஒளிப்பட வில்லை. பார்வைக் கோணம் 80° க்கு மேல் இருக்கும். (இய)

wild life conservation - காட்டு விலங்கு பாதுகாப்பு: காடுகளில் வாழ்பவை காட்டு விலங்குகள். மனிதன் தன் வசதிக்காகவும் வாழ்வு நிலத்திற்காகவும் மேற்கொள்ளும் செயற்கை முறைகளால் இவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. இவை அவ்வாறு அழியாமலிருக்க மேற்கொள்ளப்படும் தடுப்பு முயற்சியே காட்டு விலங்குப் பாதுகாப்பாகும். புலி, சிங்கம், மான், பறவை முதலிய 500க்கு மேற்பட்ட காட்டு விலங்குகள் இந்தியாவில் உள்ளன. இவற்றைக் காப்பதற்கென்று பல இடங்களில் புகலிடங்களும் பூங்காக்களும் உள்ளன. தமிழ் நாட்டில் முதுமலை, முண்டந்துறை, வேடந்தாங்கல் முதலிய இடங்களில் புகலிடங்கள் உள்ளன. இவை காட்டு விலங்குகளைக் காக்கும் முதன்மையான இடங்கள். (உயி)

wild type - இயற்கை வகை: இயற்கை உயிர்த் தொகுதிகளில் கொடுக்கப்பட்ட ஒரு மரபணுவின் வடிவம். பொதுவாக எங்கும் காணப்படுவது. இயற்கை வகை இனை மாற்றுகள் (+) வழக்கமாக ஓங்குதிறன் கொண்டவை. இயல்பான புறமுத்திரையை உருவாக்குபவை. (உயி)

wilt - வாடல்நோய்: வாடுதலால் ஏற்படும் தாவர நோய், வேர் நோய்களின் முற்றிய நிலைகளில் உண்டாவது. (உயி)

wind - காற்று: மேற்பரப்புக்குச் சார்பான நிலையில் காற்றின் அசைவு. (இய)

winch - 1. உருளை. 2. இருசின் கிறங்கு. 3. உருளை எந்திரம். இழுக்கும் அல்லது இறைக்கும் பொறி. (இய)

window - சாளரம்: 1. புவிக்காற்று வெளியிலுள்ள திறப்புகளில் ஒன்று. புறவான வெளியிலிருந்து ஒளியும் வானொலி அலைகளும் இவற்றின் வழியே ஊடுருவிப் புவியை அடைபவை. 2. தனி