பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/120

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Qua
Qua
494

Ouadruple - expansion engine: நான்மடி விரிவாக்க எஞ்சின் : நீராவி நான்கு மடங்காக விரி வாக்கமாவதற்கு இடமளிக்கும் ஒரு வகைக் கூட்டு எஞ்சின், முதலில் ஒர் உயர் அழுத்த நீள் உருளையிலும், பின்னர் அடுத்தடுத்து மூன்று குறைந்த அழுத்த நீள் உருளைகளிலும் இந்த விரிவாக்கம் நடைபெறும். இதில் தொடக்கத் தில் நீராவி அழுத்தம் குறைந்தது 200 பவுண்டு அளவுக்கு இருக்க வேண்டும்.

Oualitative analysis:(வேதி.) பண்பியல் பகுப்பாய்வு: வேதியியல் பொருளில் என்னென்ன தனிமங்கள் அல்லது கூறுகள் எந்த அளவு களில் அடங்கியுள்ளன என்பதை அறிவதற்கான பகுப்பாய்வு.

Quality: தரநிலை: (1) பண்புத் தரம்.

(2) தனி இயல்பு அல்லது குணம்.

Ouantitative analysis: (வேதி.) அளவைப் பகுப்பாய்வு: ஒவ்வொரு தனிமத்தின் அல்லது கூறின் மொத்த அளவினைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு.

Quantity: அளவு: கூடவோ குறையவோ கூடிய பொருண்மை, கன அளவு, எண்ணிக்கை போன்ற இயல்பின் அளவீடு.

Quarry: (1) கற் சுரங்கம்: உடைத்தல், வெடித்தல் மூலம் கற்கள் எடுக்கப்படும் தொடுகுழி.

2) சன்னல் கண்ணாடி: நூல்களை

வைப்பதற்கான சன்னல் முகப்புகளையுடைய 18ஆம் நூற்றாண்டு நூல் பேழை.

Quarry-faced masonry: (க.க.) பாவுகல் முகப்புக் கட்டுமானம்: கற்சுரங்கத்திலிருந்து எடுத்து, மெரு கேற்றப்படாமல் அப்படியே பதித்த கல் முகப்புடைய கட்டுமானம்.

Quarry tile: (க.க.) உலா மேடை ஒடு: எந்திரத்தினால் செய்யப்பட்ட மெருகிடப்படாத ஒடு. இது 3/4" அல்லது அதற்கு மேற்பட்ட கனமுடையதாக இருக்கும்.

Quart: முகத்தலளவை அலகு: கால் காலன் அல்லது இரண்டு பைண்டு அளவு. கால்காலன் அளவு கலம்.

Quarter: கால் பங்கு: ஒரு பொருளின் நான்கு சமமான பகுதிகளில் ஒன்று. கவராயத்தின் நான்கு முக் கிய முனைகளில் ஒன்று.

Quartile: கோள் இடைத்தொடர்பு: ஒன்றுக்கொன்று 90° இடைத் தொலைவுடைய இரு கோளங்களிடையிலான இடைத்தொடர்பு.

Quarto: (அச்சு.) நான்கு மடித்தாள்: நான்கு தாள்களும், எட்டுப் பக்கங்களும் அமையும் வகையில் இரு தடவை மடித்தாளின் அளவு.

நான் மடித்தாள் அளவுள்ள ஏடு.

Quartz: (கனிம.) படிகக்கல்:கன்ம ஈருயிரகையும் சிலசமயம் தங்கமும் கலந்த கனிமப் பொருள் (Si02).