பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

588

கருவிகளின் பகுதிகளைத் துல்லியமாகப் பிரித்து அமைத்தல்.

Thread tool: (எந்.) புரி கருவி: கடைசல் எந்திரத்தில் பொருத்தும் வேலைக் கருவி. இடப்பட வேண்டிய புரி அளவுக்கு வடிவமைப்புக் கொண்டது.

Three and four fluted drills: (உலோ. வே.) மூன்று மற்றும் நான்கு திருகு பள்ள துளையீடுகள்: சுரண்டு துருவிகளுக்குப் பதில் பல சமயங்களில் பயன்படுவது. புதிதாகத் துவங்கி துளையிட அவை பயனற்றவை. ஆனால் ஏற்கெனவே துளையிடப்பட்ட, துருவப்பட்ட துளைகளைப் பெரிதாக்க உதவுபவை.

Three phase: (மின்.) மூன்று பேஸ்: மூன்று ஏ.சி. சுற்றுகள் அல்லது 120 மின் பாகைகளில் பேஸ் வித்தி யாசப்படும் சர்க்கியூட்டுகள்.

Three ply: மூவடுக்கு ஒட்டுப் பலகை: தனித்தனியான மூன்று அடுக்குகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட ஒட்டுப் பலகை (பிளைவுட்).

Three-point suspension: (தானி.) மும்முனை நிலைப்பு: (மோட்டார் வாகன) மோட்டார் வாகனத் தில் என்ஜினின் எடையை மூன்று நிலைகள் தாங்கி நிற்கும் வகையில் என்ஜினை நிலைப்படுத்தும் முறை .

Three-quarter binding: முக்

கால் நூல்கட்டு: அரை நூல் கட்டுப் (பைண்டிங்) போன்றதே, ஆனால் தோல்பகுதி நிறைய வெளியே தெரியும்.

Three-quarter floating axle: (தானி.) முக்கால் மிதப்பு அச்சு: பின்புற அச்சின் உறைப்பெட்டி சக்கரங்களின் மையத்தண்டு வரை நீண்டிருக்கும். அச்சின் வெளிப்புற முனைகள் சக்கரத்தண்டின் தகட்டு விளிம்புகளுடன் பற்ற வைக்கப்பட்டிருக்கும் அல்லது இணைக்கப்பட்டிருக்கும் தகடு சக்கர மையத்தண்டுடன் போல்ட் மூலம் பொருத்தப்பட்டிருக்கும். சக்கரம் ஒவ்வொன்றிலும் ஒரு பேரிங்கு தான் இருக்கும். அது அச்சுத்தண்டின் உறைப்பெட்டி மேல் பொருத்தப் பட்டிருக்கும்.

Three-square file: (தானி.) முப்பட்டை அரம்: மூன்று முளை கொண்ட அரம். ரம்பத்தின் பற்களைக் கூராக்குவதற்குப் பயன்படுவது.

Three-way switch: (மின்.) மூன்று வழி சுவிட்ச்: ஒரு மின் விளக்கு அல்லது பல மின் விளக்குகளை வெவ்வேறான இரு இடங்களிலிருந்து இயக்குவிப்பதற்கான ஒரு கவிட்ச்.

Three - wire method : மூன்று வயர் முறை : அமெரிக்க தர நிர்ணய அமைப்பு சிபாரிசு செய்தபடி திருகுகளில் புரிகள் நடுவில் உள்ள இடைவெளியை அளக்கும் முறை. பயன் வழி கையேட்டைக் காண்க.