பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

626

ளுக்குமிடையிலான மின்னழுத்த நிலை வேறுபாடானது, தொடர் வரிசையிலுள்ள எடை உலோகங்களுக்கிடை யிலான மின்னழுத்த நிலை வேறுபாடுகளின் கூட்டுத் தொகைக்குச் சமமானதாக இருக்கும்" என்பது இந்த விதி.

Voltage Amplification : (மின்.) மின்னழுத்த விரிவாக்கம் : வானொலி அலைவெண் விரிவாக்க நிலைகளில் உண்டாகும் வானொலிச் சைகைகளைப் பெருக்கிக் காட்டுவதற்கான ஒரு வகை.

Voltaic cell : (மின்.) ஓல்ட்டா மின்கலம் : ஒரு வகை அடிப்படை மின்கலம். இதனை முதலில் கண்டு பிடித்தவர் ஒல்ட்டா. அதனால் இதற்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இது இரு முரண்பட்ட உலோகங்கள் ஒரு கரைசலில் அமிழ்த்தி வைக்கப்பட்டிருக்கும். அந்தக் கரைசல், ஒர் உலோகத்தை இன்னொரு உலோகத்தின் மீது அதிக அளவில் வேதியியல் வினைபுரியும். இதனால் இரு உலோகங்களுக்குமிடையே மின்ன ழுத்த நிலை வேறுபாடு உண்டாகிறது.

V - T h r e a d (எந்; பட்.) V - திருகிழை : 'v', என்ற ஆங்கில எழுத்தின் வடிவில் அமைந்துள்ள திருகிழை. 60° கோணத்தில் அமைந்த திருகிழையையும் இது உள்ளடக்கும்.

V - type engine : (தானி.) V - வடிவ எஞ்சின் : 'v', என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தில் அடுக்கப்பட்ட நீள் உருளைத் தொகுதிகளைக் கொண்ட ஒர் எஞ்சின்.

Vulcanite : (வேதி.) கந்தக ரப்பர் : கந்தகம் கலந்து கடுமையூட்டப்பட்ட ரப்பர். இந்திய ரப்பரும் கந்தகமும் கலந்த ஒரு கூட்டுப் பொருள் இது நெகிழ் திறம் இல்லாத கடினமான ரப்பர்.

Vulcanizing : (வேதி.) கந்தக வலிவூட்டம் : இந்திய ரப்பருக்குக் கந்தகம் கலந்து வலிவூட்டுதல். ரப்பருக்கும் வலிமையும் நெகிழ் திறனும் ஊட்டுவதற்கு மிக உயர்ந்த வெப்ப நிலையில் இவ்வாறு செய் யப்படுகிறது.