பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Muf

435

Mul


தினால் உருவாக்கப்பட்ட வலுவான காந்தப்புலத்தின் ஆதாரத்தி லுள்ள நகரக்கூடிய சுருளினைக் கொண்ட ஒர் உணர் கருவி. இது சுருளின் வழியே சிறிதளவு மின் னோட்டம் பாய்ந்தாலும் அதனைச் கட்டிக் காட்டும்.

Moving needIe : (மின்.) இயங்கு ஊசி மின்னோட்டமானி : மின்னோட்டத்தைக் காட்டும் நகரும் காந்தஊசி கொண்ட ஒரு சாதனம், இந்த ஊசியைச் சுற்றி அல்லது அதன் அருகில் சுற்றப்பட்டுள்ள நுண்ணிய கம்பிச் சுருளின் வழியே மின் விசை பாய்கிறதா என்பதைச் கட்டிக் காட்டக்கூடியது.

Mucilage : தாவரப் பசை : ஒரு வகைத் தாவரப் பிசினிலிருந்தும் நீரிலிருந்தும் செய்யப்படும் தாவரப் பசைப் பொருள்.

Muck bar (உலோ.) கூள உலோகக் கட்டி : தேனிரும்புத் தயாரிப்பில் முழுவதும் உருகாத உலோகக் கட்டியைக் கூளங்களின் உருளை வழியே செலுத்துவார்கள். அப்போது அது 'கூளக்கட்டி' என அழைக்கப்படுகிறது. இந்த உலோகக் கட்டியில் கசடு அதிகமாகக் இருக்குமாதலால், இதனைச் சுத்திகரிக்காமல் பயன்படுத்த இயலாது.

Mudsill: (க.க.) சேற்றுப்படிக் கட்டை: ஒரு கட்டுமானத்தின்அடித் தளப் படிக் கட்டை. இது தரையில் நேரடியாக வைக்கப்படும்.

Muffle* (1) சூளை உலை : மண்பாண்ட வேலையில் சுடுவதற்காகப் பாண்டம் வைக்கப்படும் சூளை உலையறை.

(2) ஒலித்தடுப்பான்: ஒரு மின்னோடிப் புகைபோக்கியில் ஓசையை அடக்குவதற்கான சாதனம்.

Muffle furnace : (உலோ.) பொதியுலை: மின்விசையினாலோ எரிவாயுவினாலோ இயக்கப்படும் ஒரு சிறிய உலை. உலோகங்களைக் கடும்பதப்படுத்துதல், கடினமாக்குதல், முலாமிடுதல் போன்ற அதிகவெப்பம் தேவைப்படும் வேலைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது.

Muffier : (தானி.) ஒசையடக்குச் சாதனம் : உட்புழையான நீள் உருளை கொண்ட ஒரு எந்திர சாதனம், இது ஒரு கேசோலின் எஞ்சினுடன் இணைக்கப்பட்டிருக்கும. இதன் வழியே புறம்போக்கும் வாயு வெளியே சென்று ஒசை வராமல் அடக்கிவிடும்.

Mule-pulley stand : (எந்.)கலப்புக் கப்பி நிலை : ஒரு துணைச் சுழல் தண்டின் மேலுள்ள தளர்வான இரு கப்பிகளை இரு சுழல் தண்டுகளுக்கிடையில் விசையினை அனுப்புவற்கு வசதியாக அமைத் துள்ள நிலை.

Multicolor press : (அச்சு.) பல வண்ண அச்சுப் பொறி : ஒரே சமயத்தில் இரண்டுக்கு மேற்பட்ட வண் ணங்களில் அச்சடிக்கவல்ல அச்சுப் பொறி,