பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Ove

457

Ove


யும் சுற்றியுள்ள திரையை வெட்டி எடுக்கலாம்.

Outlining : உருவரை: (.)முக்கியக் கோடுகளை மட்டும் காட்டி வரைந்ததிருந்த உருவம்; (2) முக்கியக்கூறுகளை மட்டும் விவரித்துக் கூறுதல்; (3) உருமாதிரி வரைதல்.

Out-put : (மின்:எந்.) எடுப்பு அளவு : மின்னாக்க ஆதாரத்திலிருந்து ஒரு புறச் சாதனத்திற்கு வழங்குவதற்கு எடுக்கப்படும் மின் விசையின் அளவு.

Outside caliper: (பட்.) புற விட்டமானி: புற அளவுகளை அல்லது வடிவளவுகளை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் விட்டமானி.

Outside loop: (வானூ.) புறக்கரண வளைவு: விமானம் இயல்பாகப் பறப்பதிலிருந்து கழுகுப் பாய்ச்சல், தலைகீழாகப் பறத்தல், உயரே ஏறுதல், மீண்டும் இயல்பான நிலைக்கு வருதல் போன்று கரண வளைவுகள் செய்தல். இவ்வாறு செய்யும்போது விமானி பறக்கும் பாதையினின்றும் புறத்தே இருப்பார்.

Oval: (கணி.) நீள் உருளை வடிவம்: முட்டை வடிவ உருவம் நீள் உருளை வடிவம். இதன் வளைவுகளின் முனைகள் சமமின்றி இருக்கும்.

Over-all length: (வானூ.) முழு நீளம்: விமானத்தில் செலுத்தி, வால் பகுதி உள்ளடங்கலாக முன்புறத்திலிருந்து பின்புறக் கடைசி வரையிலான முழு நீளம்.

Over hanglng pulley:தொங்கு கப்பி: தொங்கலாக இருக்கிற ஒரு சுழல் தண்டில் உருண்டு செல்லும், ஒரு கப்பி. இதில் ஒரு பக்கத்தில் மட்டுமே ஒர் ஆதாரத் தாங்கி இருக்கும்.

Overaul: (எந்.)எந்திரப்பகுப்பாய்வு: ஒர் எந்திரத்தைப் பகுதிபகுதியாகப் பிரித்து ஆராய்ந்து செப்பனிட்டு மீண்டும் ஒருங்கிணைத்தல்.

Overhead cost: அலுவலகச் செலவுகள்: வாடகை, வட்டி, முதலீடு, பராமரிப்பு, தேய்மானம் போன்ற செயலாட்சிக்கான செலவினங்களின் தொகை. இது தொழிலாளர்களுககும் மூலப் பொருள் களுக்கும் ஆகும் செலவைவிடக் கூடுதலான செலவாகும்.

Overhead shafting: (பட்.) தொங்கு சுழல் தண்டு: முகட்டில் தொங்கும் இடைச்சுழல் தண்டு, இதிலிருந்து எந்திரங்களுக்கு விசை அனுப்பப்படுகிறது’

Overhead-valve motor: (தானி.) மேல் ஓரதர் மின்னோடி: ஒரதர்கள் அனைத்தும் தலைப்பகுதியில் அமைந்திருக்கும் மின்னோடி.

Overheating: (தானி.) மிகைச் சூடாக்கம்: பாதுகாப்பாக இயங்குவதற்குத் தேவையான அளவுக்கு அதிகமாக ஒர் எஞ்சின் சூடாதல். இது பொதுவாக குளிர்விக்கும்