உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 அக்காரினா

4. டெமோடிசிடே (Dermanyssidae) - இக்குடும்‌ பத்துச்‌ சிற்றுண்ணிகள்‌ மிகச்‌ சிறியவை. புழுப்போன்ற நீள்‌ உருளை வடிவம்‌ உடையவை; கால்கள்‌ மிகக்‌ குட்டையானவை; மூன்று கரணைகளாலானவை. கண்கள்‌, மூச்சுத்‌ துளைகள்‌ இல்லை. இவை பாலூட்டிகளின்‌ மயிர்க்கால்‌ பள்ளங்களில்‌ (hair follicles) வாழ்கின்றன. டெமோடெக்ஸ்‌ கேனி (Demodex cani) சிறப்பினத்துச்‌ சிற்றுண்ணிகள்‌ நாய்களில்‌ சிவப்புக்‌ கட்டி நோயை (red mange) உண்டாக்குகின்றன. டெமோடெக்ஸ்‌ போவி (Demodex bovil) மாடுகளிலும்‌, டெமோடெக்ஸ்‌ ஈக்வி (Demodex equi) குதிரைகளிலும்‌ சிவப்புக்‌ கட்டி நோயை உண்டாக்குகின்றன.

5. டெர்மானிசிடே (Dermanyssidae). டெமானிஸ்‌ஸஸ் கேல்லினே (Dermanyssus gallinace) கோழிகளின்‌ ஒட்டுண்ணி. இது மனிதர்களைத்‌ தாக்கி எக்சீமா (eczema) என்ற ஒரு வகைப்‌ படைநோயை உண்டாக்குகிறது. லிப்போனிஸ்ஸஸ்‌ பர்சா (Liponyssuss bursa) என்னும்‌ சிறப்பினத்தைச்‌ சேர்ந்தவை இந்தியாவில்‌ கோழியின்‌ ஒட்டுண்ணிகள்‌. லிப்போனிஸ்‌ஸஸ்‌ பகோட்டி (Liponyssus bacoti) எலியின்‌ ஒட்‌டுண்ணி. இது எலிகளில்‌ டைஃபஸ்‌ (typhus) காய்ச்சலைப்‌ பரப்புகிறது.

6. டார்சோநிமிடே (Torsonemidae) - இக்குடும்பத்‌தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகள்‌ மென்மையான உடல்‌ உடையவை. பெரும்பாலும்‌ அறுகால்‌ பூச்சிகளின்‌ ஒட்‌டுண்ணிகளாக வாழ்கின்‌றன.

பெடிகுலாய்டஸ்‌ வென்ட்ரிகோசஸ்‌ (Pediculoides centricosus) பயிர்களின்‌ தண்டில்‌ வாழும்‌ பல அறுகால்‌ பூச்சிகளின்‌ இளவுயிரிகளில்‌ ஒட்டுண்ணியாக வாழ்‌கிறது. இது நெற்பயிரில்‌ வாழும்‌ அந்துப்‌ பூச்சிகளையும்‌ அவற்றின்‌ இளவுயிரிகளையும்‌ அழிக்கிறது. இச்‌சிற்றுண்ணிகளால்‌ அறுவடை செய்பவர்கள்‌, வைக்‌கோல்‌ தட்டைகளில்‌ புழங்குகிறவர்களின்‌ தோலில்‌ சிறு கட்டிகள்‌ உண்டாகின்றன.

7. டைரோகிளைஃபிடே (Tyroglyphidae). இவை தானியம்‌, மாவு, உலர்ந்த பழங்கள்‌, சேமித்து வைக்கப்‌படும்‌ உணவுப்‌ பொருள்களில்‌ காணப்படுகின்றன. வெப்பப்‌ பகுதிகளில்‌ மனிதருக்கு இயோசினோபிலியா (Eosinophilia) நோய்‌ உண்டாவதற்கு இது காரணமாக இருக்கலாம்‌ என நம்பப்படுகிறது. டைரோகிளிபஸ் ஃபாரினே (Tyroglyphus farinae) என்னும்‌ சிற்‌றுண்ணிகள்‌ தென்‌ இந்தியாவில்‌ சேமித்துவைக்கும்‌ தானியங்களுக்குக்‌ கேடு விளைவிக்கின்றன. ரைசோகிளிஃபஸ்‌ பாரசைட்டிகஸ்‌ (Rhizoglyphus Parasiticus) தேயிலைத்‌ தோட்டத்‌ தொழிலாளரிடையே தோல்‌ முடிச்சு நோயை (dermatitis) உண்டாக்குகிறது.

8. ஓரியோபட்டாய்டே (Oriobatoidae). இக்குடும்‌பத்தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகளின்‌ உடல்தோல்‌ கடினமாக உள்ளதால்‌ இவை வண்டுச்‌ சிற்றுண்ணிகள்‌ (beetle mites) எனப்படுகின்றன.


9. டெட்ராகிக்கிடே (Tetranychidae). இவை பொதுவாகச்‌ சிவப்புச்‌ சிலந்திச்‌ சிற்றுண்ணிகள்‌ (red spider mites) என அழைக்கப்படுகின்றன; செடி கொடிகளைத்‌ தாக்கி அவற்றின்‌ சாற்றை உறிஞ்ச வாழ்‌கின்றன. டெட்ராநிக்கஸ்‌ (Tetranychus) பொதுவினத்தைச்‌ சேர்ந்த சிற்றுண்ணிகள்‌ பருத்தி, தக்காளி போன்ற செடிகளில்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.

10. டிராம்பிடிடே (Trompididae). சிற்றுண்ணிகளிலேயே பெரியவை. இளவுயிரிகள்‌ அறுகால்‌ பூச்சிகளில்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. டிராம்பிடியம்‌ ஜைகாஸ்‌ (Trombidium gigas) என்னும்‌ வெல்வெட்‌ சிற்றுண்ணியைத்‌ தென்னிந்தியாவில்‌ மழைக்காலம்‌ முடிவடைந்ததும்‌ புல்வெளிகளில்‌ காணலாம்‌. டிராம்‌பிகுலா டெலியென்சிஸ்‌ (Trombicula deliencis) இந்தியாவில்‌ மனிதருக்கிடையே டைஃபஸ்‌ (Typhus) காய்ச்சலைப்‌ பரப்புகிறது. எலிகள்‌, பெருச்சாளிகள்‌ ஆகியவை இதன்‌ நிலையான ஓம்புயிர்கள்‌.

11. ஹைராட்க்ளிடே (Hydrachnidae). இவை நீரில்‌ வாழ்பவை. உடற்பரப்பு முழுவதும்‌ நீண்டு நெருக்கமாக அமைந்த மயிர்களால்‌ மூடப்பட்டுள்ளது. இவற்றுள்‌ பெரும்பான்மையானவை இரையைத் தேடி வேட்டையாடி வாழ்கின்றன; சில நீர்வாழ்‌ அறுகால்‌ பூச்சிகளின்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்‌டாக்ஸ்‌ (Atax) என்பது நன்னீர்‌ மட்டியின்‌ (Freshwater) மேன்டில்‌ குழியில்‌ வாழ்கிறது.

பொருளாதார முக்கியத்துவம்‌

பெரும்பாலான அக்காரிகள்‌ முதுகெலும்பிகளின்‌ புற ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து பல நோய்களை உண்‌டாக்குவதால்‌ பொருளாதார முக்கியத்துவம்‌ பெறுகின்றன. பெரும்‌ எண்ணிக்கையில்‌ இவை கால்நடைகள்‌ மீது காணப்படும்போது கால்நடைகள்‌ சோகை நோயால்‌ (anaemia) தொல்லைப்‌ படுகின்றன.


ஒரு கடின உண்ணியின்‌ வாழ்க்கைச்‌ சுற்று (டெர்மாசென்டர்‌)