866 அம்பினியூரா
866 அம்பினியா£
களையும் வரிசைகளாகக் குறிப்பிடுவதும்
துணை வகுப்பு we (Shrock and
உண்டு. ஸ்ராக் மற்றும் ட்வேன்கோாடு
Twenhofel, 1953). #amwerr (Hyman, 1967), பார்னஸ் (Barnes, 1974) என்ற விலங்கியல் வல்லுநர்கள் இவற்றைத் குனித்தனி வகுப்புகளாகக் குறிப்பிடு
கின்றனர், பார்னஸ் (Barnes) என்பார் இவ்விரண்டும் முன்பு அம்பினிதரா என்ற ஒரே வருப்பாகக் கருதப் பட்டதாகக் கூறுகிறார். பாலிபிளக்கா போரா என்பது பல ஒடுசள்டையவை என்று பொருள்படும். இவ்வகை யில் கைட்டான்௧ள்.. அடங்கும். ஏபிளக்கோபோரா என்பது ஒடற்ற ஒரு வகை மெல்லுடலியைக் குறிக்கும்,
பாலிபிளக்கோபோரா (0130120001மால). களில் சுமார் 600 இனங்கள் உள்ளன. இவை உலூன் பல்வேறு கடல்களிலும் காணப்படுகின்றன. கைட் டான்கள் பெரும்பாலும் கடலோரப் பகுதியில் ஆழம் குறைந்த மேலாழப்பகுதி (410181 2006) யில் உள்ள பாறைகளில் ஒட்டி வாழ்கின் றன . ஆயினும் சில வகைக் கைட்டான்கள்.. (குறிப்பாக லெபிடோகைட்டானா Guar gt-Lepidochitona bentha) 4200 மீட்டர் ஆழத் இலும் கூட வாழ்கின்றன. அட்லாண்டிக் கடற்கரைப் பருதியில் வாழும் 'உட்டோபுளூரா” (0186102108) என்பவையே அளவில் மிசவும் சிறியவை (1,2. செ.மி.), பிபீக் கரைகளில் வாழ்கின்ற *சிரிப்டோகைட்டான்” (Cryptachiton) என்பவையே மிகவும் பெரியவை (30 செ.மீ). பெரும்பாலான இனங்களைச் சேர்ந்த கைட் டான்கள் 3 முதல் 78 செ.மீ, நீளத்தில் உள்ளன. கைட்டான்்க௧ள் பளிச்சென்ற வண்ணங்கள் கொண்ட வையல்ல, இவை மஙிகிய சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆய நிறங்களில் இருப்பதுண்டு.
கைட்டான்களின் உடல் நீள்வட்ட வடிவில் முதுகுப் புறம் (0௦58 810௦) சற்றுக் குவிந்தும், வயிற்றுப்புறம் (Ventral side) தட்டையாகவும் இருக்கும். வயிற்றுப் புறம் தசையாலான பாதத்தையும் அடக்கியுள்ளது.
கைட்டான்களில் முதுகுப்புறத்தில் எட்டு ஒடுகள், பட்டையாய்க் இடைமட்டத்இல் ஒன்றில் மற்றொன்று சிறிது பதிந்தபடி ஒரே வரிசையால் விளிம்பின் மீது உள்ளன. இவ்வோடுகள் ஒரே மாதஇரியில்லை. தலைப் பகுதியில் உள்ள முதலாவது பட்டையும், மலத்துளைக் கருில் உள்ள எட்டாவது பட்டையும், இடையில் உள்ள மற்ற ஆறு பட்டைகளின்றும் வடிவத்தில் மாறு பட்டலை. முளன்னவை அரைவட்ட வடிவாயும், பின்னவை நீள் சதுர வடிவாயும் உள்ளன. இல்வோடு சுள் அமைப்பில் இரண்டு அடுக்குகளைக் கொண்டவை, மேலடுக்கு (டெக்மென்டம்' (76தறளாரயா) என்றழைக் கப்படுகிறது. இது காண்டியோலின் (000௦100110) என்ற புரதப் பொருளாலானது. இதில் சுண்ணப் பொருள் பதிந்துள்ளது. *ஆர்டிகுலோமெண்டம்। (Articutomentum) eentiuGs €ழடுக்கு அதிக கன மானது. இது முழுவதுமாகச் சுண்ணத்தினாலானது. சமமற்ற இவ்விரு அடுக்குகளில் சழடுக்கு, மேலடுக்கை விடப் பரப்பு அதிகமானது. இதன். நீண்ட பகுதி அடுத்த ஒட்டுக்கடியில் செலுத்தப்பட்டுள்ளது. அதில்
கைட்டான்
சிறு துளைகள் பலவுள்ளன. மேலடூக்கில் பலவித வரி வடிவங்களுண் டி. இவற்றினுள் நரம்பு முனைகள் செலுத்தப்பட்டு, இவை உணர்வுறுப்புகளாகச் செயல் படுகின்றன. ஓடுகள் ஒன்றின் மீது ஒன்று ஏறியபடி, யிருப்பதால், முதுகுப் பகுதி வளையக் கூடியதாய் உள்ளது. ஆகவேதான் கைட்டான்கள் துன்புறுத்தப் படும்போது சுருண்டு கொள்ள முடிகிறது.
கைட்டான்்௧ளின் உடலின் மேற்புறத்திலும் பக்சு வாட்டிலும் உள்ளுறுப்புகளை மூடியபடி *மேன்டில்” (Mantle) எனப்படும் *உடலுறை' அல்லது 'உடற் போர்வை” உள்ளது. இவ்வுறை உடலின் முதுகுப் புறத்தில் பட்டைகளின் ஓரங்களை மட்டும் மூடியபடி யுள்ளதால் ஓட்டுப் பட்டைசளின் *டெக்மென்டம்” மட்டும். வெளியில் தெரியும்படி பதிந்துள்ளது. இன் வுறை பக்கவாட்டில் ஒரு வளையம் போல் அமைந் துள்ளது. இது கெர்டில் (011416) என்றழைக்குப்படு Ang கெர்டில் ஒடுகளின் பக்கவாட்டு முளைகளி லிருந்து நீண்டுள்ள உடலுறையின் பகுதியாகும். இது மிகவும் சடூணமானது. இதன் மேற்புறம் சிறு செதில்கள் அல்லது இழைகள் போன்ற அமைப்புகளால் மூடப் பட்டுள்ளது.
உடலின் அடிப்பாகத்தின் (வயிற்றுப் பாகம்) பெரும் பகுதி தசையாலான, தட்டையான பாதத்திலானது. இப்பாதம் ஊர்ந்து செல்வதற்கும் பாறைகளில் ஒட்டிக் கொள்வதற்கும் உதவுமாயினும், இவை துன்புறுத்தப் படும் போது கெர்டிலும் உடலில் ஒட்டிக் கொள்ள உதவுகிறது. இவ்வளையம் முதலில் பாறையில் நன் றாகப் படிகிறது. பின்னர் ஓரம் மட்டும் ஒட்டியுள்ள படி நடுப்பகுதி உயர்த்தப்படுகறது. இதனால் வெற் றிடம் ஏற்பட்டு உடல் இறுக்கமாக ஒட்டிக் கொள் கிறது.
கைட்டான்௧கள் நத்தைகளைப் போலவே மிகவும் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இவை அலை ஏற்ற இறக்க இடைப்பகுதியில் வாழ்பவை, ஓத வற்றத்தின் போது அசையாமல் பாறையில ஒட்டியிருக்கும் கைட் டின்கள் ஓத ஏற்றத்தின் போது மட்டுமே ஊர்ந்து செல்லும். மேலும் இவை ஒளியைத் தலிர்ப்பன. ஆகவே சூரிய ஒளியை விட்டு விலகப் பாறையடியில் உள்ள இருளை தாழும். மேலும் இவை இரவு நேர ஓத ஏற்றத்தின் போதே அதிகம் நடமாடுகின் றன.
உடலின் பக்கவாட்டில், ஓடுகளுக்கும் பாதத்திற்கும் வெளிப்புறத்தில் இருபுறமும் வளைப் பட்டையால் மூடப்பட்ட இரு “மூச்சுக் கால்வாய்கள்” உள்ளன. geet பாலியல் sireveures’ (Pallial Groove) எனப் படும், இவற்றுள் ௬வாச உறுப்புகளாக இலை போன்ற அமைப்புடைய செவுள்கள் உள்ளன. இவற்றின் எண் ணிக்கை பக்கத்திற்கு 6 முதல் 80 வரை இனத்திற் கேற்ப வேறுபடுகிறது. உடலின் முன் பகுதியில் உள்ள இரு உட்செல்லும் வடிகுழாய் (10181606 5/01௦0)கன் மூலமாகக் கடல்நீர் சுவாசக் கால்வாய்க்குள் வருகிறது.