பக்கம்:அறிவியல் களஞ்சியம் 2.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமிலக் குளோரைடுகள்

R அலிஃபாட்டிக் தொகுதியாகவும், அராயில் குளோரைடுகளில் R அரோமாட்டிக் தொகுதியாகவும் இருக்கும். அசைல் ஹாலைடுகள் மிகவும் முக்கிய மான இடப்பெயர்ச்சியை ஏற்படுத்தும் பொருள் களாகவும் இயற்கையாக மிகவும் தீவிரமாக வினை புரிவனவாகவும் வினைபடுபவையாகவும் உள்ளவை. இப்பொருள்கள் பொதுவாக நெடியுடைய நீர்மங்கள்; சில திண்மப் பொருள்கள்; நீர்மப் பொருள்கள் எளி தாக ஆவியாகக் கூடியலை; திண்மப் பொருள்கள் பொதுவாக தாழ்ந்த உருகு நிலையைக் கொண்டவை.

அசெட்டைல் குளோரைடு, அசெட்டிக் அமிலத் தையும் பாஸ்ஃபரஸ் முக்குளோரைடையும் கலந்து வாலையில் வடிக்கும்பொழுது, அசெட்டைல் குளோ ரைடும் (acetyl chloride) பாஸ்ஃபோரிக் அமிலமும் கிடைக்கின்றன.

H,CCOOH + PCI; → HCCOC1 + H,PO;

இயற்புப் பண்புகள். அசெட்டைல் குளோரைடு ஒரு நிறமற்ற நெடியுள்ள நீர்மம்; ஈரக்காற்று பட்டால் புகையும். இதன் கொதிநிலை 52°C.

வேதிப் பண்புகள். அசெட்டைல் குளோரைடின் பண்புகள் அமிலக் குளோரைடுகளின் பண்புகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றே கொள்ளலாம். அசெட் டைல் குளோரைடு நீராற்பகுப்படைந்து (hydrolysis), தாய் அமிலமான அசெட்டிக் அமிலத்தையும், ஹைட் ரஜன் குளோரைடையும் கொடுக்கின்றது.

H,CCOC1 + H2O → HCCOOH + HCI

அசெட்டைல் குளோரைடு ஆல்கஹாலுடன் வினை புரியும்போது எஸ்ட்டர்கள் (esters) உண்டாகின்றன. எத்தில் ஆல்கஹாலும், அசெட்டைல் குளோரைடும் வினைபுரிந்து எத்தில் அசெட்டேட்டு (ethyl acctate) உண்டாகிறது.

HCCOC) + CàH,OH → H, CCOOCØH, + H,O

அசெட்டைல் குளோரைடு ஃபீனாலுடன் வினை புரிந்து ஃபீனைல் அசெட்டேட்டு (phenyl acctate) என் னும் எஸ்ட்டரைக் கொடுக்கிறது.

H,CCOCI + C,H,OH→ CH.COOCH; + HCI

அசெட்டைல் குளோரைடுடன் அம்மோனியா விரை வில் வினைபுரிந்து அசெட்டமைடு (acetamide) உண்டாகிறது.

]i,CCOC) + NH, → H,CCONH, + HCI

அசெட்டைல் குளோரைடுடன் அம்மோனியா வினை புரிவது போலவே, அமீன்களும் (amines) லினைபுரி கின்றன. இவ்வினைகளில் பதிலீடாக்கப்பட்ட அமை டுகள் (substituted amides) கிடைக்கின்றன.

H,CCOC! + RNH, - RNHCOCH,

+ HCI

இது போலவே அசெட்டைல் குளோரைடு அனிலீனு டன் (aniline) வினைபுரிந்து அசெட்டனிலைடு (acetailide) உண்டாகிறது.

H_CCOC1 + C HẠNH, → C.H,NHCOCH, + HC

பயன்கள். இது கரிமச் சேர்மங்களில் அசெட்டைல் தொகுதியைப் (H,CCO-) பதிலீடு செய்வதற்குப் பயன்படுகிறது. மேலும் ஒரு சேர்மத்திலுள்ள ஹைட் ராக்சில் (-OH) தொகுதிகளைக் கண்டறிவதற்கும், அவற்றின் எண்ணிக்கையினை அளந்தறிவதற்கும் இது பயன்படுகிறது.

பென்சாயில் குளோரைடு. இது ஓர் அரோமாட்டிக் அமில குளோரைடு, பென்சாயிக் அமிலத்தை பாஸ் ஃபரஸ் ஐங்குளோரைடுடன் (அல்லது தயோனைல் குளோரைடுடன்) சேர்த்து வாலையில் வடிக்கும் போது பென்சாயில் குளோரைடு (benzoyl chloridc) உண்டாகிறது.

C,H.COOH + PCI, + C.H,COC1 + POC1, + HC1

C;H COOH + SOCl; → C HgCOCI + SO, + HC

இம்முறையைக் கொண்டு ஆய்வுக்கூடத்தில் இதனைத் தயாரிக்கலாம். பாஸ்ஃபரஸ் ஆக்சிகுளோரைடு (phosphorus oxychloride) அல்லது சல்ஃபர் டை ஆக் சைடு முதலில் ஆவியாக வெளிப்படுகிறது. வெப்ப நிலையை உயர்த்தும்பொழுது பென்சாயில் குளோ ரைடு வெளியேறும். பென்சாயில் குளோரைடு ஒரு நிறமற்ற கார நெடியுடைய நீர்மம்; இதன் கொதி நிலை 197°C.இது நீரில் கரையாது; ஈரக்காற்றில் புகையும் தன்மையது. இதன் ஆலி கண்ணில் பட் டால் கண்ணீர் வரும்; மூக்கில் நீர்வடியும். இதன் வேதி வினைகள் அசெட்டைல் குளோரைடை ஒத் துள்ளன; ஆனால் அசெட்டைல் குளோரைடைவிட மந்தமாக வினை புரியும்.

பென்சாயில் ஏற்றம். அமீன்கள், ஆல்கஹால்கள். ஃபீனால்கள், ஆகியவற்றின் பென்சாயில் பெறுதி களைப் (benzoyl derivatives) பெறுவதற்குப் பென் சாயில் குளோரைடு பயன்படுகிறது. பென்சாயில்

19