உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் களஞ்சியம் 3.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 ஆரல்‌ (கார்த்திகை) விண்மீன்‌

146 ஆரல் (கார்த்திகை) விண்மீன் ஆரல் மீன் செவுள்களின் வழியாகவும் தோலின் மூலமும் கூடச் சுவாசிக்க வல்லது. அன்றியும், இதன் வாய்க்குழியும் கூடச் சுவாச உறுப்பாகப் பயன்படுவ தாக மன்றோ (Munro) கூறியுள்ளார். நீருக்குள்ளும் நீருக்கு மேலேயும் வந்து சுவாசிக்கும் இருசுவாச முறையை (bimodal respiration) ஓஜா, முன்ஷி (Ojha, Munshi) என்ற பேராசிரியர்கள் ஆராய்ந்துள்ள னர். இதன் இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினின் (haemoglobin) அளவும், இரத்தச் சிவப்பணுக்களின் (red blood corpuscles) அளவும் பிற குருதி அளவீடு களும் (blood indices) நீர்ச் சுவாசத்தையே நம்பி யிருக்கும் மீன்களில் காணப்படுவதைவிட அதிகம் என்று பிரசாத், பாண்டே, சாச்சால் (Prasad, Pan dey, Chachal) ஆகியோர் கூறுகின்றனர். வளிமண் டல ஆக்சிஜனின் அழுத்தம் குறைவதை ஆரல் மீன் கள், துல்லியமாக அறிந்துவிடும் என ஆராய்ச்சியா ளர்கள் கூறுகிறார்கள். தாம் வாழும் நீர் நிலைகளில் போதிய அளவு ஆக்சிஜன் இருந்தும், வளிமண்டல ஆக்சிஜனையே இம்மீன் சுவாசிக்கப் பயன்படுத்துகிறது. இதற்கான காரணங்கள் பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படவேண்டியுள்ளன. முட்கள் அதிகமிருப்பினும், தமிழ்நாட்டு மக்கள் விரும்பி உண்ணும் மீன்களில் இதுவும் ஒன்று. அண் மைக் காலங்களில், நீர் நிலைகள் மாசுறுவதினால் (pollution) இவற்றின் பரவலும், தொகையும் வேக மாகக் குறைந்து வருகின்றன. நூலோதி க.மு.நடராசன் 1, Day, F., The Fauna of British India, Vol.1, Taylor and Francis, London, 1889. 2. Maitland, P.S., The Hamlyn guide to Fresh - water Fishes of Britain and Europe, Hamlyn Ltd., London, 1977. ஆரல் (கார்த்திகை) விண்மீன் கார்த்திகை (pleiades) விண்மீன் முடிச்சின் (star cluster) மறுபெயர் ஆரல் எனப்படும். இது இடப (Taurus) விண்மீன் குழுவில் (constellation) அமைந் துள்ளது. பூமியிலிருந்து ஏறத்தாழ 40 ஒளி ஆண்டு கள் (light years) தொலைவில் இவ்விண்மீன் முடிச்சு உள்ளது. இதன் நேரியல் விட்டம் (linear diameter) 15 ஒளி ஆண்டுகள் ஆகும். வெளிச்சமான ஒண் முகிற்படலத்திற்குரிய (nebula) பொருள்களையும் 3000 வீண்மீன்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ஆனால் அவற்றுள் ஆறு விண்மீன்களை மட்டுமே எந்தவிதத் தொலைநோக்கியின் உதவியுமின்றிப் பார்க்கமுடியும். ஆரல் விண்மீன் மற்ற விண்மீன்களைத் தொலைநோக்கியின் உதவி யால் மட்டுமே காண இயலும். கிரேக்கப் புராணக் கதைகளில், ஆறு சகோதரிகளான அல்சிஒன் (Alcy- one), மயா (Maia), அட்லாஸ் (Atlas), எலெக்ட்ரா (Electra), மெரோப் (Merope), டாய்கெட்டே (Taygete) ஆகியவர்களின் பெயர்களை இவ்விண் மீன்களுக்கு வைத்து அழைக்கின்றனர். இந்த ஆறு விண்மீன்களின் அமைப்பு, மண் அகழ்வோர் போன்ற அமைப்பிலுள்ளது. முன்பு இவ்விண்மீன் முடிச்சு தோன்றுவதையும் மறைவதையும் கொண்டு குளிர் கால, கோடைக்காலங்களைக் கணக்கிட்டனர் மேலும் கடல் பயணம் தொடங்குவதையும் முடிப்ப தையும் இதனைக் கொண்டே செயல்பட்டனர். தமி ழர்கள் ஒரு மாதத்தின் பெயராகவும் தென்அமெ ரிக்க இந்தியர்கள் ஒரு ஆண்டின் பெயராகவும் இதைப் பயன்படுத்துகின்றனர். 36 இந்த விண்மீன் முடிச்சுகளை முதன் முதலில், 1610 ஆம் ஆண்டு, கலிலியோ (Galileo) என்ற அறிஞர் தொலைநோக்கியின் உதவியால் விண்மீன்களுடன் கண்டறிந்தார். பின்னர் 1889 ஆம் ஆண்டு ஏறத்தாழ 2326 விண்மீன்கள் கண்டு பிடிக்கப்பட்டன. முதன் முதலில் 1885 ஆம் ஆண்டு பால் (Paul), ஹென்றி (Henry) என்பவர்கள் இத னைப் படம் எடுத்தனர். காண்க, இடபம். ஆரியபட்டா பெ.வ. வானியல், கணிதவியல் ஆகிய துறைகளில் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களில் ஆரியபட்டா (Aryabhata