344 ஆற்றல், இயற்கை வளிம
344 ஆற்றல், இயற்கை வளிம நைட்ரஜன் கலவை உறைகலவையாகப் பயன்படுத் தப்படுகின்றது. இயற்கை வளிமத்திலிருந்து இக்கூறு கள் யாவும் தனித்தனியான கருவிக் கலங்களிலிருந்து மீளப் பெறலாம். படம் 13 இல் காட்டப்பட்ட மற்றொரு முறை யில்புரோப்பேனும் கலப்பு உறைகலலைச்சுழற்சியும் propane and mixture refrigerant cycle) பயன்படுத் தப்படுகின்றன. இம்முறையில் குளிரும் சுமையானது (cooling load) கிடைநிலையில - 30° F வெப்பநிலை யில் பிரிக்கப்பட்டு அதன் மேற்பகுதி புரோப்பேனால் (propane) உட்கவரப்படுவதற் கேற்றதாயும் அதன் கீழ்ப் பகுதி கலப்பு குளிர்பதனக் கலவையால் (mixed refrigerant) உட்கவரப்படுவதற்கேற்றதாயும் அமைந் துள்ளது. சுருங்கக்கூறும்போது இவ்வமைப்பானது இரண்டுக்கும் உரிய குளிர்பதனக்கலவைக்கான ஓடை வகை அடுக்காக (dual refrigerant cascade) அமைந்துள் ளது. அதில் குறைந்த கொதிநிலைநீர்மமாக உறைகலவை அமை புரோப்பேனுடனான அடுக்கு இணைப்பில் (cas cade combination with propane) கலப்பு உறைகலவை யின் கொதிநிலை இடைவெளியை (boiling range of the mixture refrigerant ) மிகவும் குறைப்பதற்கு வகை செய்யப்படுகின்றது. இதனால் நேரடியான க.உ.அ. (MRC) முறையைக் காட்டிலும் மேம்பட்ட வெப்ப இயக்கத் திறமையை இம்முறையில் பெறலாம். தாழ் வெப்பநிலை முறையில் குறைந்த பி.வெ.அ. உடைய இயற்கை வளிமத்தின் வெப்ப மதிப்பை உயர்த்துவது பற்றி முன்னர் தெரிவித்தவாறு இயற்கை வளிமத்தை தாழ் வெப்பநிலை முறையில் நீர்மமாக்குவதற்கு முன் னர் அதனை முன்னதாகப்பதப் படுத்த(pre treatment) வேண்டும். ஹைட்ரஜன் சல்ஃபைடு கலந்திருக்கு மானால் அதனை நீக்க வேண்டும். உட்கவரும் முறை யில் (absorption process) நீராவி உண்டாக்கப்படுவ தால் அதனைப் பின்னர் நீக்க வேண்டியுள்ளது. கார்பன் டை ஆக்சைடும் கன ஹைட்ரோக்கார்பன் களும் கட்டாயமாக நீக்கப்படவேண்டும். இயற்கை வளிமத்தை முன்னதாகப் பதப்படுத்துவதையும் அதன் தாழ்வெப்ப இயக்கத்தையும் காட்டும் பெரிய நீ.இ. வளிம நிலையத்தின் 5 தொடர்களில் ஒன் றினைப் படம் 14இல் காணலாம். 1970 ஆம் ஆண்டு நடுலில் நீ.இ. வளிமத்தைக் கொண்டு செல்லும் கப்பல்கள் பல் அடிப்படை வடிவமைப்புகளைக் கொண்டு அமைந்திருந்தன. நீ.இ. வளிமத்தைக் கொண்டு செல்லும் கப்பல்களின் சிறப்பியல்பாக அமைவது அதன் வெப்பக் காப்பீட்டு அமைப்பாகும். இக்காப்பீட்டு அமைப்பானது சரக்கு களை (நீ.இ.வ.) - 260°F (-162°C) வெப்பநிலை யில் நிலைநிறுத்துகின்றது. ஒரு வகையான கப்பலில் தனித்தன்மை வாய்ந்த எஃகினால் பற்றுவைத்து உரு வாக்கப்பட்ட உறையினைக் கொண்ட 5 தொட்டி களில் சரக்குகள் வைக்கப்பட்டுள்ளன. கப்பலின் உட்புறக் கட்டுமானத்திலிருந்து (inner hull) ஒவ்வொரு தொட்டியும் வெப்பக் காப்பீட்டுப் பொருளால் பிரிக்கப்பட்டுள்ளது. வெப்பக் கசிவின் காரணமாக ஆவியாகும் சிறிய பின்ன அளவிலான சரக்கினைக்கொண்டு (நீ.இ. வளிமத்தைக் கொண்டு) கப்பலைச் செலுத்துவதற்கான கொதிகலன்எரிபொரு ளாகப் பயன்படுத்தப்படுகின்றது. சுமையேற்றப்பட்ட வளிம எரிபொருளுக்காக கொதிக்கும் நிலையில் அமுக்கி சுமையேற்றும் எந்திரம் நீ.இ.வ. கப்பல் 5 நீர்மமாக்கப்பட்ட தொட்டிகளிலிருந்து எடுக்கப்படும் நீ.இ.வ. நீ.இ.வ. எக்கிகள்(6] ள 2.7 மைல் நீள சுமையேற்றும் மேடை நீ.இ.வ தேக்கம் பாலத்தைத் தாங்கும் சட்டம் 3 தொட்டிகள் படம் 15 நி.இ. வளிமத்தைக் கப்பலில் ஏற்றும் அமைப்பு