ஆற்றல், உயிர்க்கூள 345
கப்பற்பயணத்தில் தேவைப்படும் எரிபொருள் அள வில் 90% எரிபொருளை இவை வழங்கும். கடற்பய ணம் முடித்துத் திரும்பும்போது இக்கப்பல்களின் எடைப்பாரமாக (ballast) கடல் நீரினைத் தனித் தொட்டிகளில் நிரப்புவார்கள். சரக்குத்தொட்டிகளில் சிறிதளவு நீ.இ.வளிமத்தைத் தங்கவைத்து வெடிக்காத வளிமண்டலத்தை உண்டாக்குவதற்கும், அடுத்த பயணத்திற்குத் தொட்டிகளைக் குளிர்ச்சியாக வைப் பதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. மறுபடியும் ஆவி யாதல் காரணமாக வெளிப்படும் வளிமம் கப்பலைச் செலுத்துவதற்கான ஓரளவு எரிபொருளை வழங்கு கின்றது.நீ.இ.வளிமத்தைக் கப்பலில் சுமையேற்றும் அமைப்பு படம் 15 இல் (பக்கம் 344) காட்டப் பட்டுள்ளது. ஆற்றல், உயிர்க்கூள உயிர்க் கூளம் (biomass) உலக இயக்கத்தின் அடிப் படை, உண்ணும் உணவு, உடுக்கும் உடை, உறையும் உறைவிடம், எரிக்கும் எரிபொருள் அனைத்தும் உயிர்க் கூளப் பிரிவுகளே. சமைப்பதற்கு மனித இனத்தால் பயன்படுத்தப்பட்ட முதல் ஆற்றல் உயிர்க் கூளமாகும். 1973-74 ஆம் ஆண்டுகளில் உலக அளவில் ஏற்பட்ட எண்ணெய்த் தட்டுப்பாட்டிற்குப் பின்னர், எண்ணெயின் விலை பன்மடங்காக உயர்ந் தது. எண்ணெய் தொடர்ந்து கிடைக்கும் என்ற உறு திப்பாடும் இல்லாமல் போயிற்று. பாறை எண் ணெய் போன்ற எண்ணெய்ப் பொருட்களின் விலை அதிகரிப்பும், தொடர்ந்து கிடைப்பதில் உண்டான இடர்ப்பாடுகளும் எண்ணெய்ப் பொருட்களை இறக் குமதி செய்கின்ற நாடுகளிடையே சமூகப் பொருளா தாரப் பிரச்சினைகளை உருவாக்கின. 1973 இல் வளரும் நாடுகள் எண்ணெய் இறக்குமதிக்கு ரூ.6,000 கோடி செலவு செய்த நிலை மாறி 1981 இல் ரூ 57,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியைத் தர வேண்டிய நிலை உருவானது. எண்ணெய் விலை ஏற்றத்தைத் தொடர்ந்து உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் சமைப்பதற்காகப் பயன் படுத்தும் விறகின் விலை பன்மடங்காகியது. விறகின் விலை ஏற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டவர் இந்தியா போன்ற வளரும் நாடுகளிலுள்ள ஏழை மக்களேயாவர். இந்தக் காலக் கட்டத்தில்தான் உலக அறிவியல் அறிஞர்களின் பார்வை உயிர்க்கூளத்தின் பால் திரும்பியது. 1981 ஆம் ஆண்டு கென்யாவின் தலைநகரான நைரோபியில் நடைபெற்ற புதிய மற் றும் புதுப்பிக்க வல்ல எரிபொருள் வளங்கள் (new and renewable energy) பற்றிய உலக மாநாட்டில் இந்தியப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எரிபொருள் பற்றாக் குறைக்குத் தீர்வு காண உலக அறிவியல் அறிஞர் கட்கு வேண்டுகோள் விடுத்தார், ஆற்றல், உயிர்க்கூள 345 உயிர்க் கூள ஆற்றல் (biomass energy) சூரிய ஆற்றலின் ஒரு வடிவம். தாவரங்கள் தாவரங்களி லுள்ள பசுங்கணியம் (chloroplast) என்ற நிறமியின் (pigment) மூலம் சூரிய ஒளியின் உதவியினால் தண் ணீரையும், கார்பன்டை ஆக்சைடையும் (carbon di oxide) கார்போஹைடிரேட்டையும் (cairbohydrate) மாற்றுகின்றன. இந்தக்கார்போஹைடிரேட்டு தாவ ரத்தின் பல்வேறு உயிர்ச் செய்கைகளுக்குத் தேவை யான ஆற்றலை அளிக்கிறது. ஒளிச்சேர்க்கை மூலம் தான் தாவரங்கள் நமக்குத் தேவையான தானியங் கள். காய்கனிகள், கிழங்குகள் போன்ற உணவுப் பொருட்கள், மரம், ஓலை போன்ற உறைவிடக்கட்டு மானப் பொருட்கள், பருத்தி போன்ற ஆடைகள் நெய்ய உதவும் நார்ப் பொருள்கள் போன்ற உயிர்க் கூள பொருட்களைத் தருகின்றன. தாவரங்களை அறுவடை செய்தபின், அவற்றில் ஒளிச்சேர்க்கை மூலம் தேக்கப்பட்டுள்ள சூரிய ஆற் றலை, அவற்றைப் பல்வேறு உயிர்க்கூள எரி பொருட்களாக மாற்றிப் பயன்படுத்திப்பெறலாம். இவ்வாறு மரம், கரும்புச் சக்கை, மட்கும் தன்மை வாய்ந்த பல்வேறு தாவரப் பொருட்கள் போன்ற வற்றிலிருந்து பெறப்படும் ஆற்றலுக்கு உயிர்க்கூள ஆற்றல் என்பது பெயர். மரம், கரும்புச் சக்கை போன்ற உயர்க்கூளப் பொருட்களை அப்படியே எரித்துப்பெறும் ஆற்றலை விட அவற்றை உயிர்க்கூள எரிப்பொருட்களாக மாற்றி, அவற்றின் மூலம் பெறப் படும் ஆற்றல் பலவகைகளில் சிறந்ததாகும். உயிர்க் கூளப் பொருட்களை அப்படியே எரிப்பதனால் ஏராளமான கார்பன்டை ஆக்சைடும் புகையும் வெளியாவதால் சுற்றுப்புறம் (environment) மாசடை கிறது. எரி பொருளும் வீணாகிறது. ஆனால் உயிர்க் கூளப் பொருட்களை அறிவியல் முறைப்படி உயிர்க் கூள எரிபொருட்களாக மாற்றி, அவற்றிலிருந்து, சுற்றுப்புறங்களுக்குக் கேடு விளைவிக்காமலும் எரி பொருள் வீணாகாமலும் முழுமையான ஆற்றலைப் பெற இயலும். உயிர்க்கூன ஆற்றலின்வகைகள் உயிர்க்கூளம் திண்ம, நீர்ம வளிம நிலையிலான ஆற்றல்களை அளிக்கிறது. மரம் (wood) கரி (charcoal) போன்றவை திண்ம நிலையிலான உயிர்க்கூள ஆற்றல்களாகும். சாரா யம் (alcohol) நீர்ம நிலையிலான உயிர்க்கூள ஆற்ற லாகும். மீத்தேன் (methane) ஹைடிரஜன் (hydrogen) போன்றவை வளிமநிலையிலான உயிர்க்கூள ஆற்ற லுக்கு எடுத்துக்காட்டுக்கள். உயிர்க்கூளத்திலிருந்து மின்சாரமும் எடுக்கப்படுகிறது. உயிர்க்கூள ஆற்றலைப் பெறும் வழிகள். மாற்ற முறைகள் (conversion methods) உயிர்க்கூளத்தை மேற்குறிப்பிட்ட பல நிலையிலான உயிர்க்கூள ஆற் றல்களாக மாற்ற, உயிரியல்முறை(biological method ) வெப்பவேதியியல் முறை (theromochemical method)