412 ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன்
412 ஆற்றல் தொழில் நுட்பம், ஹைடிரஜன் முதலாவதாக, ஹைடிரஜன் ஒரு வேதியியல் எரிபொரு ளாக இருப்பதில் நன்மைகளாவன, எந்த ஒரு வேதி யியல் எரிபொருளைக் காட்டிலும் மிக்க உயர்ந்த தன் ஆற்றல் (specific energy) பெற்றிருக்கிறது. இரண்டாவதாக இது எரிந்த பின்னர் கொள்கை அடிப்படையில் Co Co, மற்றும் எரியாத ஹைடிரோ கார்பன்கள் இல்லையெனக்கொள்ளும்போது, அதன் விளைபொருளாக நீர் மட்டும் கிடைக்கின்றது.ஹைடி ரோகார்பன் எரிதலில் அதன்பின் தொடரும் பொருள்களுடன் ஒப்பிடும்போது, நைட்ரஜனின் ஆக்சைடுகள் கூடப் பெரிதும் குறைக்கப்பட்டுவிடு கின்றன. ஹைடிரோக் மூன்றாவதாக தற்போது எங்கு கார்பன்கள் பயன்படுத்தப்படுகின்றனவோ அங்கு இத னைப்பேரளவு எரிதல் திறமையுடன் (combustion effici- ency) பயன்படுத்தலாம். அது மேலும் அய்ட்ரஜனை தூய்மையான ஆக்சிஜனுடன் எரித்துச்சுழலியின் திறன் அமைப்பிற்குத் (turbine power system) தனித்தன்மை வாய்ந்த வெப்பத் திறமையை (thermal efficiency வழங்கிட வகை செய்யலாம். மேலும் இது எரி பொருள் மின்கலங்களில் ஆக்சிஜனேற்றம் செய்யப் பட்டு மின்சாரம் தோற்றுவிக்கப்படுகின்றது. ஹைடி ரஜனின் ஆற்றல் சாராத பயன்பாடுகளில் அடங்குவன, நிலக்கரியிலிருந்தும் பெட்ரோலியத்திலிருந்தும் கந்தக நீக்கம், தூய உலோகத் தாதுவினைப்பிரித்தெடுத்தல், (clean metal ore roduction) ஆகியவை ஆகும் தற் போது, ஹைடிரஜனின் பேரளவுத் தொழிற்சாலைப் பயன்பாட்டில் அடங்குவன, அம்மோனியத் தொகுப்பு (ammonia synthesis), எண்ணெய்களை ஹைடிரஜனாக்கம் செய்தல் (hydregenation of oils என்பன ஆகும். ஹைடிரஜனின் முக்கியமான தீமை யாதெனில் அதனுடைய மிகவும் குறைவான கொதி நிலை (low boiling point) (20 K) யாகும் எனவே இதனைத் தனிப்பட்ட தாழ்வெப்பக் கொள்கலங்க ளிலோ (special cryogenic containers) அல்லது டீவார் கொள்கலங்களிலோ (dewar vesels) நீர்மமா கவோ அல்லது அதனை உலோக ஹைடிரைடாகத் (metal hydrida) திரட்டியோ கையாளுதல் லேண் டும். நீர்மமாக இருக்கும்போது கூட அதன் ஓர் அலகுப் பருமனில் உள்ள ஆற்றல் அடர்த்தியானது நீர்ம ஹைடிரோக்கார்பன்களை விட, அதனுடைய மிக வும் குறைந்த அடர்த்தியின் காரணமாக, மும்மடங்கு குறைவானதாகும். இரண்டாவது தீமையாதெனில் அதனுடைய தீப்பிடித்து வெடிக்கும் அபாயமாகும். ஜெர்மன் நாட்டினுடைய பறக்கும் கப்பலான ஹிண் டன்பர்க் 1937 ஆம் ஆண்டு பற்றி எரிந்து விபத்துக் குள்ளானது பொதுமக்கள் நினைவில் இருந்து வரு கின்றது. நீர்ம ஹைடிரோகார்பனைக் காட்டிலும் ஹைடிரஜனுடைய பாதுகாப்புப் பிரச்சினைகள் வேறு பட்டு இருப்பினும் அவை கடுமையாகத் தோன்ற வில்லை; மேலும் அமெரிக்க ஒன்றிய நாட்டின் விண் வெளித் திட்டத்தில் ஏவுகணைக்கு எரிபொருளாக நீர்ம ஹைடிரஜன் பயன்பாட்டில் ஹைடிரஜன் பாது காப்புடையதெனச் சான்றளிக்கப்பட்டுள்ளது. ஹைடிரஜன் தேக்கம் (hydrogen storage) ஹைடிர ஜனை அழுத்தப்பட்ட வளிமமாகலோ, நீர்மமா கவோ அல்லது ஹைடிரைடாகவோ தேக்கலாம். மிக வும் அழுத்தப்பட்ட ஹைடிரஜன் வளியம் மிகக் குறைந்த ஆற்றல் அடர்த்தி கொண்டுள்ளமையாலும் அதிக எடையிலான அழுத்தக் கலம் தேவைப்படு கின்ற காரணத்தினாலும் மிகச் சிறிய அமைப்புக ளைத் தவிர மற்றவற்றிற்கு அழுத்தப்பட்ட வளிமத் தேக்கம் முறை (compressed gas storage) கவர்ச்சிக் குறைவானதாக உள்ளது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விண்வெளித் திட்டத்தில் (space program) முதன்மையாகவும் மிக அதிக அளவிலும் நீர்ம ஹைடிரஜன் பயன்படுத்தப் பட்டு வருகின்றது. காற்று நீக்கப்பட்ட இரட்டைச் சுவர்களுடைய கொள்கலங்கள் (டீவார் கொள்கலங் கள்) அல்லது நுரைபொருள் காப்பீடுகள் (foam insulation) சிறிய பரிசோதனைக் கூடக் கொள் கலங்களிலும் இடம்விட்டு இடம் கொண்டு செல்லும் உந்துவண்டிகளிலும் 50,000 முதல் 100,000 லிட்டர் வரை கொள்ளளவு கொண்ட இருப்புவழிச் சரக்கு வண்டிகளிலும், மிகப்பெரிய அளவிலான 3,000,000 லிட்டர்கள் வரை கொள்ளளவு கொண்ட பெரிய டீவார் தேக்கக் கலங்களிலும் பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. சிறிய டீவார்களிலிருந்து 1.2. அளவில் நாளொன்றிற்கு ஆவியாதல் வழி யாக இழப்பு ஏற்படுகின்றது.40. அளவிலான குறிக்கோள் வடிவான கார்னோத் திறமையில் ஹைடி ரஜன் நீர்மமாக்குதல் (liqui fication) தற்போது நடை பெற்று வருகின்றது. மேலும் சுற்றுப்புற வெப்ப நிலையிலும் வளிமண்டல அழுத்தத்திலும் ஹைடி ரஜன் வளிமத்திற்கும் நீர்ம ஹைடிரஜனுக்கும் உள்ள ஆற்றல் வேறுபாடு 12./. அளவு வளிமத்தில் அடங்கி யுள்ள வேதியியல் ஆற்றலாகும்; நீர்மமாக்குவதற்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும் வேதியியல் ஆற்ற லில் 30./- அளவாகும். இந்த ஆற்றலில் ஒரு பகுதி யினை நீர்ம ஹைடிரஜனை எரிபொருளாகப் பயன் படுத்தி மீளப்பெறலாம். ஹைடிர ஜனை உலோகங்களுடன் சேர்த்துத் தளர்ச்சியுடன் கட்டுப்படுத்தப்பட்ட ஹைடிரைடுகள் ஆக்கப்படுகின்றன, இவை உயர்த்தப்பட்ட வெப்பத் தில் பிரிக்கப்படுகின்றன. அத்தகைய ஹைடிரைடுகள், நீர்ம ஹைடிரஜன் அளவிற்கும் அல்லது அதற்கும் சற்று மேலான பருமனளவு அடர்த்தியில் ஹைடிரஜ னைத் தேக்கி வைக்கின்றன; மேலும் இது அவ் உலோ கத்தின் எடைத் தன்மையைச் சார்ந்ததாகும். விரும்பத்