512 ஆற்றல், நீர்மின்
512 ஆற்றல், நீர்மின் அல்லது அதனின்றும் தப்பித்து வெளியேறும் ஒளி யால் ஆற்றல் இழப்பு நிகழ்கிறது எனவும் இதனால் அது சிவப்பு முனை நோக்கி இடம் பெயர்ந்து தோன்றுகின்றது எனவும் இது ஈர்ப்பாக்கச் சிவப்பு முனை இடப்பெயர்ச்சி (gravitational red shift)என்று அழைக்கப்படுகிறது எனவும் நிறுவினார். இவை சோதனைகள் மூலமும் நிறுவப்பட்டுள்ளன. சி.சுப்பிரமணியன் நிலையங்கள் உலகில் அமைந்துள்ளன. படம் 1 இலி ருந்து நாம் அறிவது யாதெனில் அமெரிக்க நாடுகளில் மொத்த நிறுவப்பட்டுள்ள மின் ஆக்க அளவில் நீர் மின் ஆக்கத்தின் விழுக்காடு 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைந்து வருகின்றதென்பதாகும். 1932 ஆம் ஆண்டில் உயர்ந்த விழுக்காடு 41.4% பெறப்பட்டது. 1970 ஆம் ஆண்டின் நடுவில் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பெறத்தக்க நீர்மின் ஆற்றல், நீர்மின் நீரியற் சுழலிகளாலோ (hydraulic turbines) நீர்ச் சக்கரங்களாலோ (water wheels) மின் ஆக்கிகளை (generators) இயக்க வைத்து மின் திறன் பெறப்படு கின்றது. நீர்ப்பாய்வினை வழங்குவதற்கு ஏற்ற இட மும், தேவையான நீர் உயரமும் (head of water) சுழலி-மின் ஆக்கி எந்திரமும் (turbine generator machine), நீர் வெளியேற்றத்திற்கான கால்வாயும் (discharge channel) நீர்மின் நிலையத்தின் (hydro electric plant) முதன்மைக் கூறுகளாக எ அமை கின்றன. நீரானது உயர்ந்த மட்டத்திலிருந்து தாழ்ந்த மட்டத்திற்குப் பாய்ந்து மின் ஆக்கம் செய்வதற்குத் தேவையான ஈர்ப்பு இரண்டு வடிவங்களில் வெளிப்படுகிறது. அவையாவன, மலை கள், சிறுமலைகள், மேட்டு நிலங்களிலிருந்து கடல் மட்டத்திற்கு மழையினாலும் பனி மழையினாலும் உருவாக்கப்பட்டுக் கீழ்விழும் இயற்கையான ஆறு கள், கடல்லைகளின் இயக்கத்தின் விளைவாகத் தோன்றும் கடற்பொங்குமுகங்களின் (estuaries) நீர் மட்ட வேறுபாடுகள், ஏனைய கடலுடன் இணைந்த நீர்ப்பகுதிகளின் நீர்மட்ட வேறுபாடுகள் ஆகும். 1970 ஆம் ஆண்டின் நடுவரை கடலலை ஆற்றலை நீர்மப்புவி ஈர்ப்பு ஆற்றலாக (hydro gravitational energy) வெற்றிகரமாகப் பயன்படுத்துவது மிகச் சிறிய அளவிலேயே அமைந்தது. இந்த அளவு நல்ல தொரு புவியியல் சார்ந்த இடத் தேர்வின் வழியாக வும், நல்லதொரு சாதனத்தை உருவாக்குவதன் வழி யாகவும், நல்லதொரு முதலீட்டின் வழியாகவும் மேம்படுத்தலாம். காண்க. ஆற்றல், கடலோர ஆறுகளிலிருந்து கிடைக்கும் ஆற்றல் மொத்த மின் ஆக்கத்தில் பெரும் பங்காகும். அட்டவணை 1 இல் காட்டியுள்ளவாறு அமெரிக்க ஒன்றிய நாடு களில் நீர்மின் நிலையங்களிலிருந்து பெறப்பட்ட மின் ஆக்கமானது மொத்த மின் ஆக்க அளவில் 16/. ஆகும். மொத்த மின் ஆக்கத்தில் நீர்மின் அமைப் புக்களிலிருந்து மட்டும் 74.5.. ஐப் பெறும் உலகி லேயே முதன்மையான நாடாகக் கனடா திகழ்கின் றது. அட்டவணை 2 இல் உலகம் முழுவதிலும் நிறுவப்பட்டுள்ள முக்கிய நீர்மின் நிலைய அமைப் புகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றினும் குறைந்த க்க அளவினைக் கொண்ட பல எண்ணிக்கையுள்ள ஆக் நிறுவப்பட்டுள்ள மொத்த மின் திறன் ஆக்க அளலின் விழுக்காடு 45 40 20 15 10 1925 1930 1935 1940 1945 1950 1955 1950 1965 1970 1975 படம் 1. அமெரிக்க ஒன்றிய நாடுகளில் மொத்தம் நிறுவப் பட்டுள்ள மின் திறன் ஆக்க அளவில் நீர்மின் திறன் ஆக்கக போக்கு விழுக்காட்டில் காட்டப்பட்டுள்ளது. ஆற்றல் அளவில் 30% அளவே பெறப்பட்டது. ஆற்றல் பற்றாக்குறையின் காரணமாக மிக்க ஆர்வம் மிகுந்த காலங்களில், நீர் ஆற்றல் வழி யாக மின் ஆற்றல் பெறுவதற்கான் வேலைகள் நடைபெறவேண்டுமென வழக்கமாக எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அத்தகைய கட்டு மானங்களுக்குப் பல் தடைகள் உள்ளன என்பது கீழே விவரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஒன்றிய நாடுகளின் பகுதிகளிலும், மாநிலங்களிலும் நீர்மின் ஆக்கத்தின் நில இயற்பரவல் அட்டவணை 3 இல் காட்டப்பட்டுள்ளது. நீர்மின் நிலையம் அமைப்பதற்குப் பெரியதொரு மூலதனம் தேவைப்படுவதாலும், சட்டக் கட்டுப்பாட்டுக்குரிய பிரச்சினைகள் தோன்றுவதாலும், (சில நேரங்களில் ஒரு பகுதி அல்லது ஒரு மாநிலத்திற்கும் மேற்பட்ட உரிமைகளும், அக்கறைகளும் இணைந்துள்ளன), பெரும்பான்மையான நீர்மின் திட்டங்கள் வழிவழி யாக அரசினால் தொடங்கப்படுகின்றன. முதலீடு செய்து நீர்மின் அமைப்புகளை (hydro electric fac lities) உருவாக்கிய தனிநபர்கள் மொத்த நிலைய எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினை உடையவர் ஆவர்.