566 ஆற்றல், பெட்ரோலிய
566 ஆற்றல், பெட்ரோலிய ஆல்கைல் நைட்ரேட்டுகள் தீப்பற்றும் பண்பிணை மேம்படுத்துகின்றன. எளிதில் தொடங்குதலும் இயக் கத்தில் மென்மையும், தீப்பற்றவைக்கும் பண்பினால் தீர்மானிக்கப்படுகின்றன. தேக்க நிலைத் தன் கூட்டுப் மேம்படுத்தப் பல்வேறுபட்ட பொருள்கள் பயன்படுத்தப்படுகின் றன. மையை பொருள்கள் பல்லுறுப்பி வகை சார்ந்த பொருள்களும் பல வகையான கூட்டுப் பொருள்களும் (polymeric and other types of additives) தூய்மையாக்குவதற்காக வும் பரவலாக்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தூய்மையாக்கும் (detergents) எரி பொருள் செலுத்தும் குழாய் முனையின் தூய்மையை நிலை நிறுத்தும் தன்மை வாய்ந்தவையாகும், மேலும் இப்பொருள்கள் எரிபொருள் வடிகட்டும் அமைப்பின் வாழ்நாளை (fuel filter life) நீட்டிக்கின்றன. மேலும் பலவகையான டீசல் எரிபொருள்கள், துருப்பிடிப் பதைத் தடுக்கும் பொருட்களைக் (rust inhibitors) கொண்டுள்ளன. டீசல் எரிபொருளும் தாரை விமான எரிபொரு களும் அதிகம் தேவைப்படுவதால் அடிப்படையான தேக்க எண்ணெயைத் தேர்ந்தெடுப்பதில் (base stock selection) தகுந்த குறைந்த வெப்பநிலைப் பாய்வுப் பண்புகளைக் கொண்ட (low temperature flow cha- racteristics) எரிபொருள்களைப் பெறுவது கடினமா கத் தோன்றுகின்றது. இதன் காரணமாக, பாயும் நிலையைக் குறைக்கக் கூடிய கூட்டுப் பொருள்கள் (pour point depressant additives) மிக்க அளவில் பயன்படுத்துவது தேவையாயிற்று. பல்லுறுப்பு வகை சார்ந்த அல்லது சாராத இத்தகைய பல்வேறுபட்ட பொருள்கள் (polymeric and non-polymeric materi. als) உருகு நிலைகளைக் குறைக்கும் திறம் வாய்ந்த வையாயும் இதன் காரணமாக பகிர்வுக் குழாய் அமைப்புகளிலும், உந்து வண்டிகளின் குழாய்அமைப் புகளிலும் மேம்பட்ட பாய்வினை வழங்குபவையா யும் இருக்கின்றன. எவ்வாறிருப்பினும், பனிப்படல் நிலையின் போது (cloudpoint) (மெழுகுப் படிகங்கள் முதன் முறையாகத் தோன்றும் குளிர்ந்த வெப்ப நிலையாகும். இந்நிலையின்போது இம் மெழுகுப் படிசுங்கள் வடிகட்டும் அமைப்பில் அடைப்புகளை உண்டாக்கும் செயல் மிகக் குறைவாகும்)வெப்பமான இடங்களில் பொருத்தக் கூடிய வடிகட்டும் அமைப் புக்கள் (filters) அல்லது வடிகட்டும் அமைப்பினை வெப்பப்படுத்திகளை (fter heaters) நிறுவுதல் போன்ற எரிபொருள் அமைப்பின் மாற்றங்கள் (fuel system modifications) பாயும் நிலையைக் குறைக் கும் அமைப்புகளாகப் (pour point depressants ) பயன்படுத்தப்படுகின்றன. புகை வெளியேற்றத்திற்கான சட்டங்களின் (smoke emission laws) காரணமாக, உந்து வண்டி யை இயக்குபவர்கள், புகைக்காத கூட்டுப் பொருள் களைப் பற்றி (anti-smoking additives) ஆய்வுகளை மேற்கொண்டனர், இவற்றில் மிகவும் செயல்திறம் வாய்ந்த கூட்டுப் பொருள்கள் பேரியத்தை அடிப் படையாகக் கொண்ட கரிமச் சேர்மங்களாகும். இச்சேர்மங்கள் 1000 ப.ஒ.மி. (பகுதி, ஒரு மில்லி யனுக்கு) அளவிலான செறிவூட்டங்களில் மிக்க விளைவினைக் கொண்டவையாய் உள்ளன. பேரி யம் கூட்டுப் பொருள்களின் செறிவூட்டங்களின் காரணமாகப் பராமரிப்புச் செலவுகள் மிக அதிக மாகும். மேலும் சில பொறிகளில் பேரியம் உப்பு களின் வழியாகத் தோன்றும் சாம்பல், பிரச்சினை களை உருவாக்கியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் கள் டீசல் எரிபொருள்களில் புகைக்காத கூட்டுப் பொருள்களைப் பயன்படுத்துவதில்லை. உருவாக்க நிலையிலிருந்து, மற்ற இரு வகையான கூட்டுப் பொருள்கள் வெளிவர இருக்கின்றன. அவையாவன எரிபொருளின் மீது நுண்ணுயிரிகள் தாக்குவதைத் தடுக்கும் நுண்ணுயிர்க் கொல்லிகளும் நகரப் பேருந்துப் பணியில் வெளியேறும் புகையின் நாற்றத் தினைக்குறைப்பதற்காகத் திரையிடும் பொருள்களும் masking agents) ஆகும். விமான எரிபொருள்கள். அமெரிக்கப் பெட்ரோ லியக் கழகத்துடன், கூட்டு முயற்சியாக, சுரங்கங் களுக்கான செய்திகளை அறிவிக்கும் அலுவலகம் 1951 ஆம் ஆண்டு மார்ச்சுத்திங்கள் முதற்கொண்டு தேசிய விமான எரிபொருள்களுக்கான ஆய்வு அறிக் கைகளை வெளியிட்டு வந்துள்ளது. பாதுகாப்பு பற் றிய காரணங்களால், உந்து வண்டிகளுக்கான கேசொலினைக் காட்டிலும் விமானங்களுக்கான கேசொலினின் தரக்கட்டுப்பாடு (quality control) மிக வும் கடுமையாக்கப்படுகின்றது. அதேபோன்று விமா னங்களுக்கான எதிர் உள் வெடிப்புக் கட்டுப்பாடு மிகவும் கடுமையாகக் கவனிக்கப்படுகின்றது. ஏனெ னில் உந்து வண்டி ஓட்டுநரைப் போன்றல்லாமல், ஒரு விமானியால் உயர்ந்த சுற்றுப்புற இரைச்சல் மட்டத் தில் (high ambient noise level) பொறியின் உள் வெடிப்பைக் (knock) கேட்க இயலாது. விமானங் களுக்கான கேசொலினைப் பயன்படுத்துபவர்கள் அதன் எளிதில் ஆவியாகுந்தன்மை (volatility), உறை நிலை (freezing point), எரிதலின் வெப்ப வெளிப் பாடு (heat of combustion), ஆக்சிஜனேற்ற நிலைத் தன்மை (oxidation stability) ஆகியன பற்றி மிக்க கவனமாயிருப்பர். விமானக்கேசொலினில், ஒரு கால னுக்கு 4.6 மில்லி லிட்டர் அளவில் டெட்ரா எத்தில் ஈயம் (tetraethyl lead) இருக்கும். உந்து கேசொ வினில் ஈயத்தை வெளியேற்றுவதற்காகப் பயன் படுத்தும் காட்டிலும், உயர் சுமையினைக் கொண்ட விமானங் களில் ஈயத்தினை (lead) வெளியேற்றுவதற்கான (scavenge ) கேசொலினுடன் எதிலின் டை புரோ மைடு சேர்ப்பது மிகவும் பயனுள்ளது. விமான கேசொலின்களில் மற்ற ஆல்கைல் ஈயங்களான குளோரைடு/புரோமின் கலவைகளைக்