பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அமுதன் அடிகள்

119



இத்தகைய ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் ஆற்றலைப் பெறுவதற்குப் பெருமுயற்சி செய்து போராடி ஆன்றவிந்தடங்கிய சான்றோர் ஆவதற்கு முயற்சி செய்வதே மாபெரும் ‘ஜிஹாது’ ஆகும் என மிக மிகத் தெளிவாக மணவையார் எடுத்துக்கூறி, இஸ்லாமியரும் இஸ்லாமியர் அல்லாதாரும் ஜிஹாது பற்றிக் கொண்டிருக்கும் தவறான கருத்தினைத் தகர்த்தெறிகின்றார்.

தற்காப்புக்காக மட்டுமே போர் தொடுக்க வேண்டுமெனத் திருக்குர்ஆன் (2:180) வரையறுத்துக் கூறுவதைக் கீழ்க்கண்ட மேற்கோள் மூலமாக மணவையார் எடுத்துரைக்கின்றார்:

'உன்னை எதிர்த்துப் போரிடுவோரை எதிர்த்து அல்லாஹ்வுக்காகப் போரிடு; ஆனால் அவர்களை முதலில் நீ தாக்கிவிடாதே. ஆக்கிரமிப்பாளர்களை அல்லாஹ் விரும்புவதில்லை.'

ஒரு தனிமனிதனோ அல்லது ஒரு குழுவினரோ அல்லாஹ்வுக்காக அல்லாமல் தன் சொந்தப் பயன்பாட்டடிற்காகப் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டால் அது 'ஜிஹாது' ஆகவே முடியாது என்பது தெளிவு என மண வையார் உறுதியாகக் கூறுகின்றார்.

எனவே 'ஜிஹாது' என்னும் சொல்லுக்கு முஸ்லிமல்லாதவர்கள் மீது நடத்தும் புனிதப் போர் எனத் தவறான விளக்கம் தந்து இஸ்லாமிய மார்க்கத்தின் மீது மாசு கற்பிக்க முயல்வது முற்றிலும் தவறான போக்காகும்.

'ஜிஹாது' போன்றே இஸ்லாமியரல்லாதாரால் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டு வரும் மற்றொரு சொல் 'ஜிஸ்யா' என்னும் இஸ்லாமியச் சட்டச் சொல்லாகும். இஸ்லாமியரிடம் எவ்வித வரியும் வாங்காமல், பிற சமயங்