பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

தொகுப்புரை
'தமிழ் அறிஞர்' என்று பலர் தங்களைச் சொல்லிக் கொள்ளலாம்; சில ஆண்டுகள் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்று தேர்வில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே படித்துப் பட்டம் பெற்றுத் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றக் கிடைத்த வாய்ப்பினால் தம் வாழ்க்கைக் குறிக்கோள் நிறைவேறி விட்டதாக எண்ணி மகிழ்ந்து, அவ்வப்போது சில மேடைகளில் பேசி - சில இதழ்களில் இலக்கியக் காட்சிகள் சிலவற்றைக் கட்டுரையாக்கி விட்டு-அந்த அளவிலேயே தாம் தமிழ் அறிஞர் ஆகிவிட்டதாகத் தருக்கித் திரிகின்ற பலரிடமிருந்தும் மணவை முஸ்தபா வேறுபட்டு விளங்குகிறார்."


"உண்மையாகவே தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுவதற்கு என்னென்ன தகுதிகளெல்லாம் தேவையோ அத்துணைத் தகுதிகளையும் பெற்றிருப்பவர் மணவை முஸ்தபா." என முத்தாய்ப்பு வைத்தாற்போல் கூறியுள்ளார். மணவை முஸ்தபா பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் கல்லூரி ஆசிரியர் பணிக்கு அழைப்பு வந்தபோதிலும் கிளிப்பிள்ளை தமிழ்ப் பணி செய்ய விரும்பாமல் காலத்தின் போக்குக்கும் தேவைக்குமேற்ப, அறிவியல் ஊழிக்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழை வளர்க்க, வளப்படுத்த வேண்டும் என்ற திட உணர்வுடன் உழைப்பை உறிஞ்சும் கடுமையான அறிவியல் தமிழ்த் தொண்டுக்குத் தன்மை முழுமையாக ஒப்படைத்து, தன் தளரா முயற்சியின் விளைவாகத் தமிழின் பேராற்றல் கண்டு உலகை வியக்க வைத்துக் கொண்டிருப்பவர்.

ஆனால், இவரது அறிவியல் தமிழ்ப் பணியின் முழுவீச்சைத் தமிழ் மக்கள் முழுமையாக அறிந்து உணர்ந்து தெளிந்திருக்கிறார்களா? என்பது இன்றுவரை கேள்விக் குறியாகவே உள்ளது என்பதை,

"தமிழின் புதிய துறையை எடுத்துக் கொண்டு சுயமாகச் சிந்தித்துச் செயல்பட்டு வரும் திரு. மணவை