உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வளரும் தமிழுக்கோர்
மணவையார்


பாவலேறு பெருஞ்சித்திரனார்


இன்றைய நிலையில் தமிழாக்க முறையில், அறிவியல் துறையில் பெரிதும் ஈடுபாடு கொண்டு உழைத்து வரும் தமிழியல் பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் பற்றித் தமிழ் கூறும் நல்லுலகிற்குச் சில விளக்கங்களைக் கூறியாகல் வேண்டும்.

வெறும் இலக்கியங்களை மட்டுமே தெரிந்து, அல்லது அறிந்து, அல்லது ஆய்ந்து தமிழறிஞர்களாக உலா வந்து கொண்டிருப்போரே பொதுமக்களுக்கும் புலமக்களுக்கும் அறிமுகம் ஆகி வருகின்ற இந்நாளில், தமிழ்ச்சொல்லியல், மொழியியல், அறிவியல் ஆகிய கூறுகளை நன்கு உணர்ந்து கொண்டு நம் இயற்றமிழ் மொழியை அறிவியல் மொழியாக வளர்த்து வருவதில் பேருழைப்பை நல்கி வரும் தமிழறிவியல் பேரறிஞர் மணவை முஸ்தபா அவர்கள் அனைவரும் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக பணி செய்து வருகிறார். அவரின் தமிழ்த்தொண்டுக்கே பெருஞ்சிறப்புத் தருவது, தம்மளவில் அவர் எவ்வகை ஆரவாரமும், விளம்பரத்தனமும் தன்முனைப்பும் இன்றி, அமைதியாகப் பாடாற்றி வருவதுதான்.

அவர் எப்பொழுதும் தமிழியலைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பது, அவருடன் தொடர்பு கொண்டிருப்பவர்