பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

மணவையாரின் இஸ்லாமிய இலககியப் பணி


பாராட்டாக இல்லாமல், இதயத்தில் விழுந்த குத்தாகவே இருந்ததெனக் குன்றிப் போனாராம். இவ்வுணர்வு எம் போன்றவருக்கும் அடிக்கடி வாய்ப்பதுண்டு. ஏதாவது உரையாற்றி முடித்துவிட்டு அமர்ந்தாலே, 'தமிழை இவ்வளவு நன்றாக உணர்ந்து பேசமுடிகிறதே. அதுவும் ஒரு பெண்ணாக' என்ற பாராட்டு உண்மையில் பாராட்டே இல்லை. சரியாக இஸ்லாமிய இலக்கியத் தமிழைப் பட்டி தொட்டியெங்கும் பரப்பாதுவிட்ட துரோகத்துக்கு விட்ட குத்தீட்டியாகவே பாய்கிறது. தமிழிலக்கண, இலக்கிய வளர்ச்சிக்குத் தமிழ் முஸ்லிம்கள் எத்துணையோ அரும்பணி ஆற்றியிருக்க, இப்படித் தமிழும் பேசுவாரோ என்று கேட்டதால் விளைந்த ஏக்கத்தின் வடிவே இந்நூல் எழுந்ததற்கு மற்றொரு காரணம் என்றும் கூறலாம். ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்ததால், ஆண்டு தோறும் இஸ்லாமியப் புலவர் திருநாளைக் கொண்டாடிய போது ஏற்பட்ட குறையின் விளைவாகவும் இந்நூல் பின்னாளில் எழுந்ததெனலாம். வானொலியில் 'தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள்' என்ற தலைப்பில் பேருரையாற்ற, பலரும் பாராட்ட, திரு.மா. சண்முக சுப்பிரமணியம் போன்றோர் - தமிழுலகுக்குத் தெரியாதிருக்கும் பல புதிய தகவல்கள் பேருரையில் இடம் பெற்றிருப்பதாகப் பாராட்ட, ஆக்கவழியில் இஸ்லாமியப் புலவர்கள் ஆற்றிய அருந்தமிழ்ப்பணியை ஆதார பூர்வமாக உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியது அவசியம் என்றுரைக்க, வானொலி உரையை விரித்து நூலாக்க வேண்டுமெனப் பலரும் வேண்ட அதன் விளைவாகவும் இந்நூலெழுந்தது என்பார்.

ஒரு நூல் பிறக்க எத்துணை சூழல், நெருடல், தாக்கம் என்றெல்லாம் உணர முடிகின்றது. இத்துணை அவஸ்தைகளின் இடையில் எழுத்தாளன் தன் படைப்பை உருவாக்குகின்றான் என்பதால், துன்பத்தின் முடிவில் இன்பம் என்று