பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர். வா.சா. பானு நூர்மைதீன்


இலக்கியம் பிறந்த உவகையும் சேர்கின்றது என்பதை மணவையாரின் எழுத்துக்கோலம் உருவாக்கி, நம்மையும் அப்பாதையில் ஈர்க்கின்றது.

ஆதார நூல்கள் ஏதுமில்லாது பலரும் இடர்ப்பட்டு, இஸ்லாமிய இலக்கியங்களைத் தேடித் திரிந்து இளைத்திருக்கும் இவ்வேளையில், இதுபோன்ற நூல் வடிவங்கள் வெளிவரும் தேவை ஏற்படும் காலமிது என்பதை உணர்த்துகின்றார். இந்நூலில் இஸ்லாமியப் புலவர்களால் தமிழில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை இனங்காட்ட வந்த நூலாசிரியர் இருபெரும் பகுதிகளாகப் பிரித்து, இஸ்லாமியப் பெயர்களால் அழைக்கப்படும் இலக்கிய வடிவங்களை (முனாஜாத்து, மஸ்அலா, கிஸ்ஸா (அரபுப் பெயர்கள்), நாமா (பாரசீகப் பெயர்) ஒரு பகுதியாகவும், தமிழ்ப் பெயர்களால் சுட்டப்படும் இஸ்லாமிய இலக்கியங்களை (நொண்டி நாடகம், திருமண வாழ்த்து, படைப்போர்) இன்னொரு பகுதியாகவும் அறிமுகப்படுத்துகின்றார். எட்டாம் வகையாக அரபுத் தமிழ் என்ற புதுவகையையும் எடுத்துணர்த்துகின்றார். இவற்றின் வடிவங்கள், அமைப்பு, நூலாசிரியர் திறம், இலக்கியச் சான்றுகள் முதலியன நிறுவி ஆசிரியர் இலக்கியங்களை அறிமுகப்படுத்தும் பாங்கைப் படிக்கபடிக்கச் செஞ்சொற் கவிதை யின்பம் சிந்தையிலாயிரம் சிறந்தெழுந்து எத்துணை அரிய பெரிய பாரம்பரியத்தின்படியினர் நாமெனப் பீடும் பெருமிதமும் நெஞ்சிலே பொங்குகின்றது.

16ஆம் நூற்றாண்டில் தமிழுக்கும், தமிழ்ப் புலவருக்கும் இருந்த பரிதாப நிலையிலிருந்து இருண்ட-காலத்திலிருந்து விடுபட்டு, ஒழுக்கப் பாதையிலான இலக்கியம் மலர்ந்ததை ஆசிரியர் அழகுபடக் காட்டுகின்றார். 8 வகைப்பட்ட புதிய இலக்கிய வடிவங்களை ஆசிரியர் அறிமுகப்படுத்துகின்றார். முனா ஜாத்து என்பது இறைவனிடம்