பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி


ஆசிரியர் அடுக்கி அடுக்கி எழுதிக் கொண்டே செல்வது மலைப்பைத் தருகின்றது.

இதன்றி பின் தொடரும் பல செய்திகள் முதன் முதலாக உலகம் உருண்டை எனக் கண்டறிந்தவர் முஸ்லிம்களே; கொலம்பஸுக்கு உதவியாக, வாஸ்கோடகாமாவுக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் முஸ்லிம்களே. கண்ணொளியின் தந்தையான இப்து அல் ஹைத்தாமும், இரசவாதக் கலையின் தந்தையான இப்து ஹையான் என்பாரும், மருத்துவ மலர்ச்சிக்குக் காரணமான இருபெரும் அறிஞர்கள் - அல்ராஸியும் அவிசென்னாவும் மருத்துவர்களின் மாபெரும் உந்து சக்தியானவர்களாகவும் பன்னுாலாசிரியர் அல்பிரூனி யும் இணையற்ற சாதனையாளர்கள் என எடுத்துக் காட்டுகின்றார்.

நூலின் ஒவ்வொரு பக்கமும் அறிவியல் துறையில் இஸ்லாமியர் இன்றுவரை எல்லாத் துறையிலும் கண்டு பிடித்த எண்ணிறந்த தகவல்களை ஆசிரியர் எடுத்துச் சொல்வதைப் படிக்கப்படிக்க இந்நூல் பலருக்கும் அறிமுகமாக வேண்டுமே என்ற நியாயமான பதற்றம் மனமெங்கும் தொற்றுகின்றது; தமிழில் இதுபோன்ற அறிவியல் அறிமுக நூல்கள் வெளியானாலொழிய எத்தகைய அறிவியல் பொற்காலத்தின் அதிபதிகளாக இஸ்லாமியர் இருந்தனர் என்பதனை அறியவே இயலாது. கோடிக்கணக்கான தமிழ் கூறு நல்லுலக மக்கள் அறிந்தேயாகவேண்டிய அரிய நூலிது.

இத்தகு அறிவியல் முன்னோடிகள் பின்னாளிலே தேக்கமும், வீழ்ச்சியும் அடைந்ததையும் காட்டி, இருந்ததை இழந்துநிற்க, இங்கிருந்து பெற்ற ஐரோப்பாவோ தொழிற் புரட்சியும் விரைந்து எழுந்து வளரத் தொடங்கியது; இஸ்லாமியமே அறிவியல் உலகிலிருந்து விலகி, ஆன்மிக வளர்ச்சிக்கு விரைந்து மார்க்கக் கல்வியில் ஆழ்ந்து, விஞ்ஞான