டாக்டர். வா.சா. பானு நூா்மைதீன்
69
டாக்டர். தெ.பொ.மீ அவர்கள் அளித்த சீரிய அணிந்துரை. மேலும் அது, ஆசிரியரின் இன்றையச் சமுதாயத் தீர்க்கதரிசனம் கண்டளித்த உரையோ என வியப்பு மேலிடுகின்றது. அன்னார் தம் வாழ்வில் இறுதியாக வழங்கிய இலக்கியக் கருத்துரையாகவும், அவர்தம் இதய வெளியீடாகவும் அமைந்துள்ளது.
தெ.பொ.மீ. அவர்களின் கருத்தாவது:- 'இந்திய விடுதலையே இந்து வெறியரும் முஸ்லிம் வெறியரும் ஒருவரையொருவர் வெட்டிச் சாய்த்த இரத்த வெள்ளத்துக்கு இடையே பிறந்தது; இலக்கிய அளவில் ஒன்றுபட்டிருந்த இஸ்லாமியரும் இந்துக்களும் அரசியல் காரணமாகத் தொடக்கக் காலத்தில் ஒத்துழைத்தும், இன்று வேறுபடவும் தொடங்கிய நிலை, இதன் விளைவுகளை நேரே அனுபவிக்கின்றோம்; காந்தியடிகள் தம் பிரார்த்தனைக் கூட்டங்களில் எல்லா மதப் பாடல்களையும் பாடச் சொல்வதோடு, சிறப்பாகத் திருக்குர்ஆன் பாடல்கள் இடம்பெறச் செய்வார். அதற்கு எதிர்ப்பும் இருக்கும்; அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தில்தான் அந்த மகான் ஓர் இந்துவாலே சுட்டு வீழ்த்திய கொடுமை நேர்ந்தது; சமரச உணர்வை இந்தியனே மறந்தது புதிரானது; மனித இனம் ஒற்றுமைப்பட வேண்டும் என்றால், அரசியல் காரணமாகக் கைகுலுக்கி அளவளாவினால் மட்டும் போதாது; ஒருவரது பண்பாட்டையும், கொள்கைகளையும், சமய உண்மைகளையும், இலக்கியத்தையும், மற்றவற்றையும் அறிய வேண்டும். அந்த அறிவாராய்ச்சி அன்போடு கலந்து நிகழும்போது வெறும் உணர்ச்சியினால் எழும் பகைமை நீங்கும் எனக் கூறி, அதற்குப் பல சான்றுகளை, சான்றோர்களைக் காட்டுகின்றார் தெ.பொ.மீ.
வினோபாஜியின் திருக்குர்ஆன் வசன மொழி பெயர்ப்பு, கடிகைமுத்துப் புலவரின் சீடர் உமறு <span title="என்பனவற்றை">என்பன