80
மணவையாரின் இஸ்லாமிய இலக்கியப் பணி
வளரும் உடல் நீர்மேற் குமிழி போன்றது;
செல்வம் பெருவெள்ளத்தில் அடித்து வந்ததைப்
போன்றது"
என்ற அழகிய சொல்லோவியங்களையும் படைத்துள்ள திருப்புகழின் மேன்மைகளை வெளிக்காட்டும் முயற்சியே இந்நூல். உரையில் அவர்களின் கட்டுரை, திருப்புகழ் நூலில் பரவிய திசைச்சொற்கள் பற்றியது. ஏனைய இஸ்லாமியத் திருப்புகழ் நூல்களை ஹசன் தொகுத்தளிக்கின்றார்; காசிப் புலவரின் திருப்புகழுரையைப் பாராட்டவந்த டாக்டர் இராமனாதனோ, இந்நூலில் உள்ள 141 இசைப்பாடல்களில் 2 பாடல்களுக்கு மட்டும் ஒரே வண்ணம், ஏனைய 139 பாடலுக்கும் தனித்தனிப் பண் அமைத்துப் பாடிய பெருமை புலவருக்குண்டு என்றார். அருணகிரியாரின் திருப்புகளில் கூட, 1300 பாட்டுக்கு 1008 சந்தம் தான், காசிம் திருப்புகழில் 141 பாடலுக்கு 138 சந்தங்கள் எனச் சிலம்பொலியாரும் பாராட்டுவர். இத்தகு அணியானதொரு நூலை அச்சுவாகனம் ஏறச் செய்து, நல்லுரை காண வைத்து, உச்சிமீது வைத்து மெச்சத் தகுந்த உரையாசிரியர்கள் வழி திறனாய்வும் காண வைத்துள்ளார் மணவையார். அனைத்தையும் இஸ்லாமிய இலக்கியத் திருப்பணி பேரால் தமிழ்கூறு நல்லுலகம் பெற வைத்து அப்பேற்றினை நமக்களித்த மணவையாரின் அறிவறிந்த தமிழ்ப் பேறு அறியாதார், அறியாதாரே, என எண்ணத் தோன்றிப் பெருமையில் இமயமென நம் நெஞ்சை உயர்த்துகிறது.
9. சமண, பெளத்த, கிருஸ்தவ, இஸ்லாமிய இலக்கியங்கள் (1987)
இத்தொகுப்பு நூலின் தலைப்பே தொகுப்பாசிரியரின் பரந்த நோக்கைக் காட்டுகின்றது. ஒவ்வொரு சமயஞ்சார்ந்த