பக்கம்:அறிவியல் தமிழின் விடிவெள்ளி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டா் வா சா. பானு நூா்மைதீன்

81


எழுத்தாளரைக் கொண்டும் பிறசமயம் பற்றி எழுதிய முறையும் பாராட்டத்தக்கது. டாக்டர் ச.வே.சுப்பிரமணியம் அவர்களின் தலைமையுரையும், கவிஞர் மேத்தா அவர்கள் சமணம் பற்றியும், பெளத்த இலக்கியம்பற்றி பேராசிரியர் வள்ளுவன் கிளாரன்ஸும், கிறிஸ்தவ இலக்கியம் பற்றி டாக்டர், அறவாணனும், இஸ்லாமிய இலக்கியம் பற்றி சிலம்பொலி செல்லப்பனாரும் கட்டுரை படைத்துள்ளனர். நூலுக்கு வாழ்த்துரைகளை பூரீபால், டாக்டர் ந.சஞ்சீவி, டாக்டர். தயானந்தன் பிரான்சிஸ் ஆகியோர் சிறப்புரைளாகவே வழங்கியுள்ளனர்.

ஒரு சமயம் சார்ந்தவர் மற்ற சமய இலக்கியங்களை விரும்பிப்படித்து, உணர்ந்து அதன் சிறப்புக் கூறுகளை மனம் திறந்து பாராட்டுமுகத்தான் நேரிய ஒருமைப்பாட்டை உருவாக்கும் சீரிய வெற்றிவழியாகக் காட்டுகின்றார் தொகுப்பாசிரியர் மணவையார். இவர்களின் தமிழ்ப்பணி, ஆர்வம், பிற இலக்கியம் அறியும் வேட்கை இவற்றைக் காட்டும் போது ஆசிரியரின் உள்ளத்தில் அடிநாதமாக ஊறிக் கொண்டும், ஓடிக்கொண்டுமிருப்பது சமய நல்லிணக்கமே.

300,400 ஆண்டுக்காலமாக இஸ்லாமிய இலக்கியங்கள், 4ஆம் நூற்றாண்டுக்கு மேல் பெருகிவர, அவையனைத்தும் வெளிப்பட்டால், நாட்டில் நிலவுவது நல்லிணக்கமே என்பதை ஆசிரியரின் முயற்சியும், பிறநூல்களும் சான்றுரைக்கின்றன. இந்நூல் அதற்கும் கட்டியம் கூறுகின்றது.

இலக்கியங்களுக்கிடையே சமய எண்ணங்கள் உண்மையுடன், செம்மையுடன் நடுநிலைமையுடன் வெளிப்பட்டால்தான் வாழ்வைச் சீர் செய்யலாம் என்ற உண்மையையும் உணர்த்துகின்றார். மொழிவழி, அதன் இலக்கியங்கள் வழி, சமய ஒருமைப்பாடு, நாட்டு நல்லிணக்கம்,

6