பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/117

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முத்தி நெறி - H5

பூtணமாய் உச்சரிக்கப்படும் மா த்திரம்; சுகரம்-செளகரியம்; கவர்தல்-பலனைக் கொண்டிருத்தல்; கண்ணன் உரை. கண்ணனின் கீதை, முடிசூடி-சிகரத்தில் (சரம சுலோகம்) விவரிக்கப் பெற்று.!

என்ற பாசுரத்தில் அவருடைய பரிந்துரையைக் காணலாம். ’துணிவரிதாய் துணை துறக்கும் ககரம்’ என்பது மகா விசுவாசம் என்னும் பிரபத்தியின் அங்கம் கடினமாயினும், அதிலும் கடினமான கர்மயோகம் ஞானயோகம் முதலிய அங்கங்களை விட்டு விடுகையாகிய செளகர்யத்தைக் குறிக் கின்றது. மனநிலை மாறி இரட்சகனாகிய எம்பெருமானின் கருணையின்மீது பெரு நம்பிக்கை கொள்வதே இந் நெறியைக் கடைப்பிடிப்போரிடம் வேண்டப் பெறுவது. ஆழ்வார் பெருமக்களின் இறையநுபவம் பிரபந்நர்களின்" தலைவரான நம்மாழ்வார் கண்ட இந்த சரணாகதித் தத்துவத்தில் அடங்குகின்றது. பகவத்கீதை குறிப்பிடும் தத்துவமும் இதுவேயாகும்.** மணிவாசகப் பெருமானும் இத்தத்துவத்தைக் குறிப்பிடுகின்றார்; இஃது அடிகளாரின் அநுபவமாக வெளிப்படுகின்றது."

இந்தப் பிரபத்திநெறியிலும் ஐந்து அங்கங்கள் இருப்பதைக் காட்டுவர் ஆசாரிய பெருமக்கள். அவை: (1) அது கூல்ய சங்கற்பம் என்பது, எம்பெருமானின் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றையே செய்வதாய் உறுதி கொள்ளலாகும்; (2) பிராதி கூல்ய வர்ஜநம் என்பது, அவன் தி ரு வு ள் ள த் தி ற் கு ப் பொருந்தாதவற்றைச் செய்யாதிருக்க உறுதிகொள்ளல்; அல்லது அவற்றைச் செய்ய எண்ணம் கொள்ளாமை; அல்லது அவற்றைச்

18. பிரபந்தர்கள்-பிரபத்தியை அநுட்டிப்பவர்கள். 19. பகவத்கீதை 18 : 66 20. திருவாசகம்-அடைக்கலப்பத்து.